கண்டும் காணாதது போல் விடப்படுகிற ஒரு உண்மையான அடையாளம் Jeffersonville, Indiana, USA 61-1112 1கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் இன்று காலை ஒன்று கூட. அதிகமாக ஜெபித்த பிறகு...... இன்று காலை நான் நேரத்தோடு எழுந்திருக்கவில்லை, சற்று தாமதமாகவே படுக்கையை விட்டு எழுந்தேன். அதற்கு காரணம் என்னவென்று எல்லோருக்கும் தெரியும் என்று கருதுகிறேன். அன்று காலை - இல்லை அன்றிரவு நான் வீடு திரும்பிய போது, என் பக்கத்து வீட்டுக்காரர் அவருடைய சிறிய மகளுடன் முற்றத்தில் நின்று கொண்டிருந்தார். அவருடைய மனைவி மருத்துவ மனையிலுள்ள பிரசவ அறையில் நர்ஸ் வேலை பார்க்கிறாள். அவருடைய கையில் இவ்வளவு நீளம் பிரம்பு ஒன்று இருந்தது. அதில், “அக்டோபர் 11ம் தேதி (நான் நினைக்கிறேன் ஏறக்குறைய) 3:43 அல்லது 4:43 மணிக்கு தாத்தா பிரான்ஹாம் ஆகிவிட்டீர்கள்” என்று எழுதி ஒரு ரிப்பனில் கட்டி தொங்கவிடப்பட்டிருந்தது. அதற்கு, ''கீழே நீங்கள் நினைப்பதைக் காட்டிலும் உங்களுக்கு வயதாகிவிட்டது'' என்று ஒரு பெரிய வாக்கியம் எழுதப்பட்டிருந்தது. எனவே காலையில் சற்று அதிக நேரம் ஓய்வெடுக்க எனக்கு சட்டப்படி உரிமையுண்டு. அது சரிதானே, சகோ. ரைட் - நீங்கள் பாட்டனாக ஆகும் போது? 2சகோதரி கிட், நீங்கள் ஒஹையோவிலிருந்து இன்று காலை என் வீட்டுக்கு வந்திருந்த போது, நான் படுக்கையை விட்டு அப்பொழுது எழுந்திருக்காமல் இருந்ததற்காக மன்னிக்கப்பட வேண்டுமென்று எண்ணுகிறேன். அதற்கு பிறகு எனக்கு பத்து வயது அதிகமானது போன்ற ஒரு உணர்வு நிச்சயம் தோன்றுகிறது. உங்கள் அனைவருக்கும் தெரிந்திருக்கிறபடி, எனக்கு இப்பொழுது ஒரு பேரப்பிள்ளை பிறந்திருக்கிறான். அவனுடைய எடை ஏழு அல்லது எட்டு பவுண்டு, அப்படி ஏதோ ஒன்று. நான் கண்டதிலேயே மிகவும் விகாரமான குழந்தை. காண்பதற்கு அவன் பாட்டனாரைப் போல இருப்பதாக அவர்கள் கூறுகின்றனர். எனவே... மற்றும்... பில்லி எங்கு சென்று விட்டான் என்று நான் தேடிக் கொண்டிருந்தேன். எனவே... 3நேற்றிரவு நான் தொலைபேசியில் சிலருடன் பேசிவிட்டு அறையின் வழியாக வந்து கொண்டிருந்த போது, ஜார்ஜியாவிலிருந்தும் அதன் சுற்றுபுறத்திலிருந்தும் வந்திருந்த சில விசுவாசமுள்ள நண்பர்களை சந்தித்தேன். நாங்கள் அனைவரும் அந்த சிறு குழந்தைகளை கவனித்துக் கொண்டிருந்தோம். அவர்கள் மிகவும் அழகாயுள்ளனர், இப்பொழுது அவர்கள்... பில்லி பிறந்த போது எனக்கு உண்டாயிருந்த உணர்வே எப்பொழுதும் உள்ளது. அவர்கள் சிறு குழந்தைகளாயிருப்பதால் அவர்களை ஒடித்துவிடுவோமோ என்னும் பயம் ஏற்படுகிறது. சகோதரி பீலர் என்று நினைக்கிறேன். “நானும் கூட அப்படித்தான் நினைத்திருந்தேன்...'' என்று அவர்கள் கூறினார்கள். அவர்களும் கூட அப்படித்தான் நினைத்திருந்தார்கள். ஆனால் பிறகு, அவர்கள் அவ்வளவு எளிதாக உடைந்து போக மாட்டார்கள் என்பதை கண்டு கொண்டார்கள். அது சரியென்று கருதுகிறேன். 4நேற்று பகல், நமது சபையைச் சேர்ந்த ஒரு சகோதரியின் வீட்டுக்கு - அவர்களுடைய மகளின் வீட்டுக்கு செல்லும் சிலாக்கியம் எனக்குக் கிடைத்தது (அவளும் கூட சபைக்கு வந்திருக்கிறாள் என்று நினைக்கிறேன்). அங்கு அவர்கள் சகோ. நெவிலுக்கு பிறந்த நாள் விருந்தை ஆயத்தம் செய்திருந்தனர். நேற்று அவர் மற்றுமொரு மைல் கல்லைத் தாண்டினார். எனவே நாம் ஒவ்வொருவரும் சகோ. நெவிலுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களைக் கூறுவோம். அவர் மிகவும் அருமையான ஒரு சகோதரன். அவர் சிறிதளவு இருபத்தைந்தாம் வயதைக் கடந்தார். எனவே, என்னைப் போல... நாங்கள் இரண்டாம் முறை கடந்து விட்டோம். அது... அந்த இலக்கை இரண்டாம் முறை கடக்க நேரிட்டால், நீங்கள் வயோதிபராகின்றீர்கள், உங்களுக்குத் தெரியும்மல்லவா? 5ஒரு காலை வேளையில் பிராங்கி வீபர் இங்கு வந்தது என் நினைவுக்கு வருகிறது. அவர் எங்கள் பக்கத்து வீட்டில் வசித்து வந்தார். இப்பொழுது அவருடைய மகள் அங்கு வசிக்கிறாள். அவர் பிளாரிடாவில் இருக்கிறார். பிராங்கியும் நானும் ஒன்றாக பள்ளிக்குச் சென்றோம். பிராங்கி பிறந்த நாள் காணிக்கையை போட்டார். அப்பொழுது நான் பிரசங்கிக்கத் தொடங்கி மூன்று நான்கு ஆண்டுகள் ஆயிருந்தன. நான் பிராங்கியை கர்த்தராகிய இயேசுவிடம் நடத்தினேன். அவர் இருபத்தைந்து சென்டு நாணயத்தை காணிக்கையாக செலுத்தினார். நான், “ஓ, என்னே, பிராங்கி வீபருக்கு இருபத்தைந்து வயது ஆகிவிட்டதென்றா சொல்லுகிறீர்கள்? வயூ!எனக்கு இருபத்தைந்து வயதாகும் காலத்தை எண்ணி பார்க்கவே பயமாயுள்ளது'' என்று நினைத்தேன். இப்பொழுது நான் மூன்று இருபத்தைந்து சென்டு நாணயங்களை விரைவில் போட ஆயத்தமாகிக் கொண்டிருக்கிறேன். காலம் வேகமாக கடந்து சென்றுவிடும். இங்கு எண்பது வயது நிரம்பிய சகோதரன், சகோதரி கிட் இன்னும் பலமாக சென்று கொண்டிருப்பதை காணும்போது, நான், “கர்த்தராகிய இயேசுவே, ஐம்பத்திரண்டாம் வயதில் நான் குறை கூறிக் கொண்டிருப்பதை மன்னிப்பீராக'' என்று ஜெபிக்கிறேன். அவர்கள்... உங்களுக்கு எண்பது வயது. சகோ. கிட்டுக்கு எண்பத்தொன்று வயது. சரிதானே? எண்பத்தொன்று! அவர்கள் இன்னமும் ஊழியத்தை செய்து கொண்டிருக்கிறார்கள். உங்களுக்கு சொல்லுகிறேன், அது நமக்கு தைரியத்தை அளிப்பதாய் உள்ளது. இல்லையா? நிச்சயமாக அளிக்கிறது. தேவன் நிச்சயமாக நமக்கு நல்லவராயிருக்கிறார். 6இங்கு காலை வேளையில் நடக்கும் கூட்டத்தில் எனக்கு அச்சத்தை விளைவிக்கும் காரியம் ஒன்றே ஒன்று தான். அது மிகவும் பயங்கரமானது. அதை கூறுவதற்கும் கூட அவமானமாயுள்ளது. தூரத்திலிருந்து இந்த ஆராதனைகளுக்கு வரும் அநேக நண்பர்கள் எனக்குள்ளனர். ஈவான்ஸ் குடும்பத்தினரை இங்கு நான் காணவில்லை, ஆனால் அவர்கள் இங்கு எங்கோ இருக்கின்றனர் என்று நினைக்கிறேன். அவர்கள் ஒரு ஆராதனையையும் கூட தவறுவதில்லை. பிரசங்கத்தைக் கேட்பதற்கென ஒவ்வொரு ஞாயிறும் அவர்கள் எத்தனை மைல்கள் காரோட்டி வருகின்றனரென்று உங்களுக்குத் தெரியுமா? ஆயிரத்து முன்னூறு மைல்கள். சபைக்கு செல்வதற்கென அறுபது முதல் எழுபது டாலர்கள் செலவழிக்காமல் அவர் களால் பயணத்தை மேற்கொள்ள முடியாது. அது உண்மை. அவர்கள் குடும்பத்துடன் ஆராதனைக்கு இங்கு வந்து, பணத்தை... 7அது மாத்திரமல்ல, அலபாமாவிலிருந்து வருகின்ற ஒரு சகோதரன் இருக்கிறார். அவரும் ஒவ்வொரு வாரமும் ஏறக்குறைய அதே தூரம் காரோட்டிக் கொண்டு இங்கு வரும்கிறார். சகோதரன்... ஓ என்னே, பெயர் என்ன? சகோ. வெஸ்ட். நான்... அவர் எனக்கு ஒரு பையனைப் போல் காணப்படுகிறார். அவர் நிறைய பிள்ளைகளுக்குத் தகப்பன். அவர் எப்பொழுதும் நினைவுபடுத்துவது. அவர் இளைஞனைப் போல் காணப்படுகிறார், அவரும், அவருடைய மனைவியும் - சகோ. வெஸ்ட். ஜார்ஜியாவிலுள்ள மாகோனிலிருந்து வரும் சகோதரன், சகோதரி பாமர் அங்கு உட்கார்ந்து கொண்டிருக்கின்றார். மற்றும் சகோதரி உங்கிரன், அவர்கள் வழக்கமாக டென்னணியிலுள்ள மெம்பீஸிலிருந்து இங்கு வரும்கின்றனர். அவர்கள் இன்று காலை இங்குள்ளனரா? நான்... நான்... அவர்கள் வழக்கமாக இங்கிருப்பார்கள், சகோதரி உங்கிரனும் மற்றும் டென்னஸியிலுள்ள மெம்பீஸிலிருந்து வருபவர்களும் பொறுங்கள்... ஆம், பின்னால் இருக்கின்றனர். வேறு பலரும் உள்ளனர். அவர்கள் மிகவும் அதிகமாயுள்ளதால், எல்லோருடைய பெயர்களையும் கூற இயலாது. சிலர் தென் கென்டக்கியிலிருந்து வருகின்றனர், சிலர் சிக்காகோவின் சுற்றுப்புறங்களிலிருந்தும், சிலர் சிக்காகோவிலிருந்தும், சிலர் சிக்காகோவுக்கு மேல் பாகத்திலிருந்தும் வருகின்றனர். 8கலிபோர்னியாவிலிருந்து தொலைதூரம் பயணம் செய்து இங்கு ஒரு மனிதன் ஞாயிறன்று வந்திருந்தார் என்று கேள்விப்பட்டேன். அவர் சிறிது நேரம் தங்கி, என்னைக் காண விரும்பினாராம். கூட்டத்துக்குப் பிறகு எனக்கு நெருக்கடி அதிகம் இருந்ததால், அவர் என்னைக் காணாமலேயே போய்விட்டார். வேறொருவர் இல்லினாயிலுள்ள ஏதோ ஓரிடத்திலிருந்து வந்திருந்தார். அவர் இன்று காலை இங்கிருக்க நேர்ந்தால், அப்படிப்பட்ட அருமையான ருசியான ஆப்பிள் பழங்களை நான் இதுவரை சாப்பிட்டதில்லை. அவர் ஒரு கூடை நிறைய ஆப்பிள் பழங்களைக் கொண்டு வந்து கொடுத்தார். ஜார்ஜியாவிலிருந்து வந்த சகோதரர்களில் ஒருவர் - அங்கிருந்து தான் என்று நினைக்கிறேன் அல்லது வேறெங்கிருந்தோ - ஒரு பெரிய பொட்டலம் நிறைய தின்பண்டங்களைக் கொண்டு வந்து கொடுத்தார். அது பெரிய பொட்டலம். ஓ, நான் நன்றாக சாப்பிட்டேன். 9இப்பொழுதெல்லாம் நான்... தாயாரின் மறைவுக்குப் பிறகு நான் ருசியான ஆகாரங்களை உண்பதில்லை. நான் தேவையான அளவுக்கு மாத்திரம் குறைவான ஆகாரம் உண்டு, ஒரு புது தரிசனத்துக்காக தேவனுடைய சமுகத்தில் காத்திருக்கிறேன். என் எடை இருபது பவுண்டு குறைந்துவிட்டது... நான் உபவாசிக்கவில்லை. நான் செய்யவில்லை... இல்லை, அது... அப்படி செய்வது, கர்த்தருக்காக செய்வதில்லை, தேவனுக்கு நாம் மிகச் சிறந்ததை கொடுக்க வேண்டும், இது அல்ல... 10நான் சகோ. சம்னரையும் மற்றவர்களையும் பின்னால் காண்கிறேன். எத்தனையோ பேர் உள்ளனர் என்னால்... சென்ற ஞாயிறு, என் தாயாருடன் கூட உட்கார்ந்திருந்தவர்களின் பெயர்களைக் கூறினேன். ஒரு உண்மையான, விசுவாசமுள்ள சகோதரியும் அங்கு இருந்தார்கள். அவர்களுடைய பெயரைக் கூற மறந்துவிட்டேன். நான்... அவர்கள் இன்று காலை இங்கிருப்பார்களானால், நான் மன்னிப்பு கோருகிறேன். அவர்களில் ஒருத்தி சகோதரி பீலர், மற்றது சகோதரி மற்றும் சகோதரன் ஸ்டீபி. எத்தனையோ பேர் நான்... யாராகிலும் ஒருவருடைய பெயரை. யாராகிலும் ஒருவரை நான் கூறாமல் விட்டுவிட்டால், நான் வேண்டுமென்று அப்படி செய்ய மாட்டேன் என்று என்னைக் குறித்து நீங்கள் நன்கு அறிந்திருக்கிறீர்கள். இவர்கள் எவ்வளவு விசுவாசமுள்ளவர்கள்! சில நேரங்களில் இங்கு உட்கார்ந்து கொண்டு என் நினைவுக்கு வரும் யாராகிலும் ஒருவரைக் குறிப்பிடுகிறேன். ஆனால் நான்... அதன் மூலம் அந்த முழு குழுவையும், எல்லோரையும், குறிப்பிடுகிறேன். பாருங்கள்; அது மிகவும் நல்லது. எல்லோருமே... எங்களிடம் அன்பாயும், தயவாயும் இருந்து வருகின்றனர். அதை நாங்கள் நிச்சயம் பாராட்டுகிறோம். 11இன்று காலை நாம் மறுபடியும் தேவனுடைய வார்த்தையை அணுகப்போகின்றோம். இதை நான் கூற விரும்புகிறேன், அப்பொழுது அது மிகவும் தெளிவாக இருக்கும். அதாவது, மற்றவர்கள் என்னைக் காண வேண்டும் என்பதற்காக நான் எந்த கூட்டத்துக்கும் வருவதில்லை. நான், “நல்லது, ஜனங்களுக்கு நல்லுணர்வை தந்து அவர்களைக் கூச்சலிடச் செய்யும் ஒரு செய்தியை எனக்கு கொடுக்கு மாறு தேவனிடத்தில் வேண்டிக்கொள்ளப் போகிறேன் என்று கூறுவதற்கென இங்கு நான் வரவில்லை. அப்படிப்பட்டவைகளை நாம் நிறைய பெற்றிருக்கிறோம். ஆனால் (அதை நாம் பாராட்டுகிறோம், அது நல்லது. பாருங்கள், அது அற்புதமானது. பாருங்கள்?). ஆனால் நான் அறிந்துக்கொள்ள விரும்புவது என்னவெனில், ”கர்த்தாவே, ஜனங்களுக்கு உதவியாயிருந்து, அவர்களை தேவனிடம் நெருங்கி வரச்செய்து, அவர்களுக்கு ஒன்றைச் செய்து - அவர்களை ஆவியில் வளரச் செய்வதற்கென அல்ல, ஆனால் தேவனை அறிகிற அறிவிலும் அவருடைய ஆலோசனையிலும் அவர்கள் தேறினவர்களாய், சத்துரு வரும்போது, அவனை எதிர்த்து நிற்கத் திராணியுள்ளவர்களாய் அவர்களைச் செய்யும் படிக்கு, என் சிந்தனைகளை வழி நடத்துவீராக'' என்பதே. 12இந்த வாரம் இங்கு வந்து கொண்டிருக்கும் ஒரு சகோதரியுடன் நான் பேசிக் கொண்டிருந்தேன், சகோதரி பாமர். அவள் கேட்டாள். இந்த நாட்டில் என்னால் எப்படி வாழ முடிகிறது என்று அறிய விரும்பினாள். அது... இங்கு வந்துவிட்டுப் போய்விடலாம்... ஒவ்வொரு முறை நான் பள்ளத்தாக்கை அடையும் போது, அங்கு சென்றவுடனே நான் வியாதிப்படுகிறேன். இங்குள்ள பள்ளத்தாக்கு மிகவும் ஆரோக்கியமற்றதாய் விளங்குகிறது. அது நமக்குத் தெரியும். ஆனால் தேவனுக்கு நிறைய பிள்ளைகள் இங்குள்ளனர். எனவே இந்நாட்களில் ஒன்றில்.... 13கர்த்தரிடத்திலிருந்து நேரடியாக ஒரு செய்தியைப் பெற அவரை நாடிக் கொண்டிருக்கிறான். பாருங்கள்? நான்... தேவனுடைய ஒத்தாசையினால், அவர் வரும் வரைக்கும் காத்திருக்கப் போகிறேன். அதாவது அவர் என்னிடம் ஒன்றைக் கூறும் வரைக்கும். ஏனெனில், ஏதோ ஒன்று இருக்க வேண்டுமென்று உணருகிறேன். இங்கு ஏதோ ஒன்று நடக்க விருக்கிறது. அது என்னவென்று நான் அறிய விரும்புகிறேன். அது கர்த்தர் உரைக்கிறதாவது! என்று என்னால் சொல்ல முடிவதற்கு, அதை தேவனிடத்திலிருந்து நேரடியாக அறிய விரும்புகிறேன். அப்பொழுது நீங்கள் - அது நானல்ல என்று ஜனங்கள் அறிந்து கொள்வார்கள். அதை நான் பெற முயற்சி செய்ய விரும்புகிறேன்- அதாவது முதலில் அவர் கூறுவதைக் கேட்க. ஏனெனில் அவர் தம்முடைய வார்த்தைகளை ஒரு நபரில் போடுவாரானால், அதன் பிறகு அது அந்த நபர் அல்ல, அது அவர். ஒரு மனிதன் தானாகவே ஒன்றைக் கூறுவானானால், அதனால் ஒரு உபயோகமும் இராது. ஆனால் அவன் கர்த்தருடைய வார்த்தை அந்த மனிதனுக்குள் இருந்தால், அது புறப்பட்டு வெளிவரும். அப்பொழுது அது முற்றிலும் உண்மையாயிருக்கும். அப்படித்தான் நாம் வேதாகமத்தில், உபாகமம்; 20ம் அதிகாரத்தில் கட்டளை பெற்றிருக்கிறோம். அது இவ்வாறு உரைக்கிறதென்று நினைக்கிறேன்... “இதை கவனி, ஒருவன் கர்த்தருடைய நாமத்தில் ஒன்றை உரைத்து, அது நிறைவேறாமல் போனால், அவன் கூறினதற்கு செவி கொடுக்காதே. ஆனால் அவன் உரைப்பது. நிறைவேறினால், அதற்கு நீ செவி கொடுப்பது நலம். ஏனெனில், அது தேவனிடத்திலிருந்து வருகிறது. 14அப்படித்தான் தேவன் வைத்திருக்கிறார். அவர் தமது ஒழுங்கான திட்டத்தை வேதத்தில் எழுதி வைத்திருக்கிறார் - அதை எப்படி படித்து அறிந்துக் கொள்வதென்று நமக்குத் தெரியும். ஆனால், சபைக்கு வேண்டிய சில குறிப்பிட்ட காரியங்களையும் அதன் நேரத்தையும் அவர் வேதத்தில் எழுதி வைக்கவில்லை. எனவே, அவர் தமது சத்தத்தை ஒரு. மனிதனுக்குள் வைக்கிறார். அவன் அதை உரைக்கிறான் (பாருங்கள்?) உரைக்கிறான். எனவே, அந்த மனிதனை நாம் எப்படி கண்டுகொள்ள வேண்டும் என்றால், அவன் உரைக்கும் விதமாக அது நிறைவேறுகிறதா என்று கவனித்து வருவதன் மூலமே. அது அவன் உரைக்கும் விதமாகவே நிறைவேறுமானால், அது கர்த்தரிடத்திலிருந்து வந்தது. அப்பொழுது வரப்போகும் காரியங்களுக்கு நம்மை ஆயத்தப்படுத்திக்கொள்ள நமக்கு நம்பிக்கை உண்டாகின்றது. 15இன்று காலை நான் வேதத்திலிருந்து இரண்டு, மூன்று பாகங்களைப் படிக்க விரும்புகிறேன். முதலாவதாக நான் யாத்திராகமம் புத்தகத்திலிருந்து படிக்கப் போகிறேன். 4ம் அதிகாரம் என்று நினைக்கிறேன். முதலாவதாக யாத்திராகமம் புத்தகம். இந்த வேதபாகங்களைப் படிக்க நீங்கள் ஆயத்தமாதிக் கொண்டிருக்கும் இவ்வேளையில், உங்களிடத்தில் நான் என்ன பேசப்போகிறேன், இக்காலையில் பேசுவதற்கென கர்த்தர் என் இருதயத்தில் என்ன அளித்திருக்கிறார் என்பதை நான் அறிவித்து விடுகிறேன். அதைக் கொண்டு அவர் ஜனங்களுக்கு என்ன செய்யப் போகிறார் என்று எனக்குத் தெரியாது. ஒருக்கால் அது இங்குள்ள ஒரு நபருக்காக பிரசங்கிக்கப்படலாம், அல்லது இந்த ஒலிநாடாவை வேறெங்காவது கேட்பவர்களுக்காகவும் இருக்கக் கூடும். ஆனால், இன்று காலை நான் அறிவிக்க விரும்புகிறேன்... 16சென்ற ஞாயிறு காலை நான் ஒரு உண்மையான சாட்சி என்னும் பொருளின் பேரில் பேசினேன் என்று நினைக்கிறேன். இந்த ஞாயிறு காலையில், கர்த்தருக்கு சித்தமானால், ''கண்டும் காணாதது போல் விடப்படும் ஒரு உண்மையான அடையாளம்'' என்பதன் பேரில் பேச விரும்புகிறேன். நான்... நேற்றிரவு சகோ. பாமர் என்னிடம், சென்ற ஞாயிறு நான் பேசின பொருள், இல்லை, இந்த ஞாயிறு சபையின் நான்கு சந்திப்புகள் என்பதன் பேரில் பேசப்போவதாக நான் கூறினதாக சொன்னார். நேற்றிரவு நான் அறைக்குள் சென்ற போது... நான் வழக்கமாக குறிப்பு எழுதிக் கொள்வேன். நீங்கள் அப்படி செய்கின்றீர்களோ, இல்லையோவென்று எனக்குத் தெரியாது. ஆனால் எனக்கு எத்தனை யோகாரியங்கள் உள்ளன... நான் சந்திக்க முயலும்போது, எனக்கு கிடைப்பதை நான் ஒரு தாளில் எழுதி வைக்க வேண்டியதாய் உள்ளது. பாருங்கள்? அதை நான் சென்று பார்த்த போது, நான் உண்மையில் நான்கு சந்திப்புகள் என்னும் அர்த்தத்தில் கூறவில்லை, ஆனால், அப்படி கூறினது என்னமோ உண்மை தான் - ஆனால் சபை அரசாங்கத்தின் நான்கு விதங்கள் என்னும் அர்த்தத்தில் கூறினேன். அதை பேச வேண்டுமென்றால், சபை சரித்திரத்திலுள்ள நிறைய சம்பவங்களை ஒன்று சேர்க்க வேண்டும். ஒருக்கால் அடுத்த முறை அதைக் குறித்து பேசுவேன். எனக்கு படிக்கக் கிடைத்த நேரத்தை விட சற்று அதிக நேரம் அதற்காக செலவிட வேண்டும். ஏனெனில், சரித்திரத்திலிருந்து தேதிகள் போன்றவைகளைப் பெற வேண்டும். நீங்கள் எல்லோரும் புரிந்து கொள்வீர்கள் அது... எங்கேயும், ஏன், நாம் ஒன்றைக் கூறுவதற்கு முன்பு, அதைக் குறித்து முழு நிச்சயமுடையவர்களாயிருக்க விரும்புகிறோம். அவை சரியாக இருக்க வேண்டும். ஏனெனில், நாம் உலகிலேயே மிகப் பெரிய உத்தியோகமாகிய போதகரின் பதவியை வகித்து இங்கு நின்று கொண்டிருக்கிறோம். அது மிகவும் உண்மையானதையும், பிழையற்றதையும் போதிக்கும் பதவியாகும். நாம் அப்படித்தான் இருக்க வேண்டும். அதை செய்ய நாம் தேவன் மேல் சார்ந்திருக்கிறவர்களாக இருத்தல் அவசியம். 17இப்பொழுது யாத்திராகமம், 4ம் அதிகாரம்; அப்பொழுது மோசே: அவர்கள் என்னை நம்பார்கள் என் வாக்குக்குச் செவிக்கொடார்கள்; கர்த்தர் உனக்குத் தரிசனமாகவில்லை என்று சொல்லுவார்கள் என்றான். கர்த்தர் அவனை நோக்கி: உன் கையிலிருக்கிறது என்ன என்றார்; ஒரு கோல் என்றான். அதைத் தரையிலே போடு என்றார்; அவன் அதைத் தரையிலே போட்ட போது, அது சர்ப்பமாயிற்று; மோசே அதற்கு விலகியோடினான். அப்பொழுது கர்த்தர் மோசேயை நோக்கி: உன் கையைநீட்டி, அதின் வாலைப் பிடி என்றார்; அவன் தன் கையை நீட்டி, அதைப் பிடித்த போது, அது அவன் கையிலே கோலாயிற்று. ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும் யாக்கோபின் தேவனுமாயிருக்கிற தங்கள் பிதாக்களுடைய தேவனாகிய கர்த்தர் உனக்குத் தரிசனமானதை அவர்கள் நம்புவதற்கு இதுவே அடையாளம் என்றார். மேலும், கர்த்தர் அவனை நோக்கி: உன் கையை உன் மடியிலே போடு என்றார். அவன் தன் கையை தன் மடியிலே போட்டு, அதை வெளியே எடுக்கும் போது, இதோ, அவன் கை உறைந்த மழையைப் போல் வெண்குஷ்டம் பிடித்திருந்தது. அவர்: உன் கையைத் திரும்பவும் உன் மடியிலே போடு என்றார். அவன் தன் கையைத் திரும்பத் தன் மடியிலே போட்டு, தன் மடியிலிருந்து அதை வெளியே எடுத்தபோது, அது திரும்ப அவனுடைய மற்ற சதையைப் போலாயிற்று... அப்பொழுது அவர்: முந்தின அடையாளத்தை அவர்கள் கண்டு, உன்னை நம்பாமலும் உனக்குச் செவி கொடாமலும் போனால், பிந்தின அடையாளத்தைக் கண்டு நம்புவார்கள். (இரண்டு அடையாளங்களை கவனித்தீர்களா - ஒவ்வொரு அடையாளத்துக்கும் ஒரு சத்தம் இருந்தது). யாத். 4: 1- 8 (நான் மறுபடியும், 8ம் வசனத்தைப் படிக்கிறேன்). அப்பொழுது அவர்: முந்தின அடையாளத்தை அவர்கள் கண்டு, உன்னை நம்பாமலும் உனக்குச் செவிக் கொடாமலும் போனால், பிந்தின அடையாளத்தைக்கண்டு நம்புவார்கள். இவ்விரண்டு அடையாளங்களையும் அவர்கள் நம்பாமலும், உன் வாக்குக்குச் செவிகொடாமலும் இருப்பார்களானால், அப்பொழுது நீ நதியின் தண்ணீரை மொண்டு நிலத்தில் ஊற்றுவாயாக; நதியில் மொண்ட தண்ணீர் வெட்டாந்தரையிலே இரத்தமாகும் என்றார். யாத். 4: 8-9. 18இப்பொழுது பரி. யோவான் சுவிசேஷம் முதலாம் அதிகாரம், 6ம் வசனத்தை வாசிப்போம் - இந்த வசனத்தை. பரி. யோவான் சுவிசேஷம், முதலாம் அதிகாரம் 6ம் வசனம். தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனுஷன் இருந்தான், அவன் பேர் யோவான். யோவான்; 1: 6 எசேக்கியல்; 24: 24. இந்த வேதவாக்கியத்தை உங்கள் முன்னால் வைத்து, பழைய ஏற்பாட்டிலிருந்து, புதிய ஏற்பாடு வரைக்கும் உள்ள தீர்க்கதரிசிகளை இணைக்க விரும்புகிறேன். அப்பொழுது நீங்கள் யாத்திராகமம் தொடங்கி வழிவழியாக முடிவு வரைக்கும் புரிந்து கொள்வீர்கள். அப்படியே எசேக்கியல் உங்களுக்கு அடையாளமாக இருப்பான்; அவன் செய்தபடி எல்லாம் நீங்களும் செய்வீர்கள்; இப்படி வரும்போது நான் கர்த்தராகிய ஆண்டவர் என்று அறிந்துகொள்வீர்கள். எசே; 24:24. இப்பொழுது சற்று நேரம் தலைவணங்கி, ஜெபத்தின் மூலம் பயபக்தியுடன் அவரை அணுகுவோம். 19பிதாவாகிய தேவனே, நாங்கள் ஆபிரகாமின் தேவனும், ஈசாக்கின் தேவனும், யாக்கோபின் தேவனுமாயிருக்கிற நீதியுள்ள இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் வரும்கிறோம். அவர் எங்களுக்கு செவிகொடுப்பார் என்று அறிந்தவர்களாய் நாங்கள் வருகிறோம். ஏனெனில், இக்கட்டிடத்தில் எதேச்சையாக நுழைந்த யாரோ ஒருவராக நாங்கள் வராமல், விசவாசத்துடன் தைரியமாக, அவர் வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்றுவார் என்னும் நம்பிக்கையுடன் வந்திருக்கிறோம். கர்த்தாவே, பிரசங்கபீடம் தொடங்கி கட்டிடத்தின் கடைசி வரைக்குமுள்ள எங்கள் ஒவ்வொருவருடைய இருதயத்தை நீர் திறந்து, எங்கள் செவிகளை விருத்தசேதனம் செய்து, ஜீவனுள்ள தேவனுடைய வார்த்தை இக்காலையில் பரலோகத்திலிருந்து புறப்பட்டு வந்து எங்கள் இருதயங்களில் ஊற்றப்பட்டு, இன்று காலை எங்களுக்கு வேதத்திலிருந்து படிக்கப்பட்ட கர்த்தருடைய வார்த்தையை நாங்கள் கேட்ட போது, அதை விசுவாசிக்கும்படி செய்ய வேண்டுமென்று இன்று வேண்டிக்கொள்கிறோம். உமது வார்த்தைக்காக நாங்கள் உமக்கு நன்றி செலுத்துகிறோம். உமது வசனமே சத்தியம். 20இப்பொழுது, பொல்லாத நாட்கள் அணுகுவதையும், தேவனுடைய கோபாக்கினை அனைத்தும் வானங்களில் பெருகிக் கொண்டு வருகிறதையும் நாங்கள் காண்கிறோம். எந்த நேரத்திலும் உம்மை புறக்கணித்து விட்ட இந்த நாட்டுக்கு ஏதாவதொன்று நேரிடக் கூடும். ஒரு பெரிய வெடிப்பு இந்த நாட்டை உலக வரை படத்திலிருந்து முழுவதுமாக போக்கிவிடக் கூடும். தேவபக்தியற்ற ஒரு நாடு அவ்வாறு செய்யப் போவதாக பயமுறுத்தி வருகிறது, அவ்வாறு செய்ய ஆவலாயும் உள்ளது. அதை அறிந்தும், இவர்கள் உம்மை நெருங்குவதற்கு பதிலாக உம்மைவிட்டு தூரம் செல்கின்றனர். வெளிப்படுத்தின விசேஷத்திலும், வேதம் முழுவதிலும் இந்நாளைக் குறித்து முன்னுரைக்கப்பட்டுள்ளது என்பதை அறிந்தவர்களாய், கர்த்தாவே, நாங்கள் எச்சரிப்பை ஏற்றுக்கொண்டு, நாங்கள் சோம்பேறிகளாய் உறங்கிக் கொண்டிருக்காமல், எங்களை குலுக்கிக் கொண்டு உறக்கத்திலிருந்து எழுவோமாக. எப்பொழுதும் இல்லாத விதத்தில் இப்பொழுது நாங்கள் புரிந்து கொள்ளும்படி செய்யும். இந்த நாளுக்குப் பிறகு எங்கள் இருதயங்கள் அனல் மூண்டு, எங்கள் ஆத்து மாக்கள் கொழுந்து விட்டு எரிந்து, அது நாடு முழுவதும் பரம்பி, கர்த்தாவே, நாங்கள் எங்கிருந்தாலும் அது ஜீவிக்கும் சாட்சியாயிருக்கும்படி செய்யும். 21வியாதிப்பட்டவர்களையும் ஊனமுற்றவர்களையும், எங்கள் மத்தியிலுள்ள, எங்கள் மத்தியில் இல்லாத, எல்லாவிடங்களிலுமுள்ள தேவையானவர்களை ஆசீர்வதிப்பீராக. கர்த்தாவே, உமது வார்த்தையை ஆசீர்வதியும். உமது ஊழியக்காரனையும், இதை கேட்டுக் கொண்டிருக்கும் உமது ஊழியக்காரர்களையும் பரிசுத்தப்படுத்தி, எங்கள் வாழ்க்கையில் இதுவரைக்கும் நாங்கள் உணராத அளவுக்கு உமது பிரசன்னமாகுதலைக் குறித்த நெருங்கிய உணர்வை நாங்கள் ஒருமித்து அடையும்படி செய்யும். இங்குள்ளவர்களுக்காக மாத்திரம் நான் வேண்டிக்கொள்ளாமல், இந்த ஒலிநாடாவை உலகம் முழுவதும் கேட்பவர்களும் ஜீவனுள்ள தேவனுடைய சபைக்குள் கொண்டு வரப்பட வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன். இந்த சபையின் அங்கத்தினராவதற்கு எங்களுக்கு ஒரே ஒரு வழி மாத்திரமே உண்டு என்பதை உணருகிறோம். அது ஆவியினால் பிறப்பதன் மூலமே, அப்பொழுது நாங்கள் ஒரே ஆவியினாலே ஓரே சரீரத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்படுகிறோம். தேவனே, உலகம் முழுவதுமுள்ள அவர்கள் ஒவ்வொருவருக்காகவும் நான் வேண்டிக் கொள்கிறேன். மகிமையை நீரே எடுத்துக் கொள்ளும். எங்கள் ஆத்துமாக்களை நாங்கள் ஆயத்தப்படுத்திக் கொண்டு, உலகம் முழுவதும் ஒரே சத்தத்துடன், “கர்த்தராகிய இயேசுவே, வாரும்” என்று கூச்சலிட அருள் புரியும். இதை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம். ஆமென். 22கண்டும் காணாதது போல் விடப்படுகின்ற ஒரு உண்மையான அடையாளம். பார்வோனின் காலம் முதற்கொண்டு இந்நாள் வரைக்கும் மனிதன் அடையாளங்களை தேடிக் கொண்டிருக்கிறான். அடையாளங்களைத் தேடும் ஜனங்கள் உள்ள காலம் இருக்கும் என்று இயேசு கூறினார். அவர் பொல்லாத விபச்சார சந்ததியார் அடையாளம் தேடுவார்கள் என்று கூறினார். ஆனால் அவர்கள் அடையாளத்தைப் பெறும் போது; அந்த சந்ததியார் உயிர்த்தெழுதலின் அடையாளத்தைப் பெற வேண்டியவர்களாய் இருந்தனர். அந்த பலவீனமான பொல்லாத விபச்சார சந்ததி யாருக்கு உயிர்த்தெழுதலின் அடையாளம் கொடுக்கப்பட்டது. 23ஆனால் நமக்கு முன்னால் வைக்கப்பட்ட எசேக்கியல்; 24ம் அதிகாரம், 24ம் வசனத்தில், இந்த தீர்க்கதரிசியே அடையாளமாக வைக்கப்படுகிறான். அந்த அடையாளத்தைக் குறித்து தான் நான் பேச விரும்புகிறேன். இந்த மனிதன் இஸ்ரவேல் ஜனங்களுக்கு அடையாளமாகக் கொடுக்கப்பட்டான். வேதாகமம் முழுவதிலும் தேவன் தீர்க்கதரிசிகளை அடையாளங்களாக உபயோகித்து வந்திருக்கிறார். ஆனால் அவர்கள் எப்பொழுதுமே அசட்டை பண்ணப்பட்டனர். ஜனங்கள் அந்த அடையாளம் என்னவென்பதை கிரகித்துக் கெள்ளவேயில்லை. அவர்கள் எப்பொழுதுமே உணர்ச்சி அளிக்கும் ஒரு அடையாளத்தையே எதிர் நோக்கியிருந்தனர். இயேசுவின் நாட்களிலிருந்த பரிசேயர்களும் கூட, “வானத்திலிருந்து எங்களுக்கு ஒரு காண்பியும்'' என்றனர். இயேசு, அவர்கள் ஒரு அடையாளத்தைப் பெற்றுள்ளதாக அவர்களுக்கு சுட்டிக் காட்டினார். அவர், நீங்கள் ஏற்கனவே அடையாளத்தைப் பெற்றிருக்கிறீர்கள். வானத்தின் தோற்றத்தை நிதானிக்க உங்களுக்குத் தெரிகிறது. அந்த அடையாளத்தை உங்களால் காண முடிகிறது. அது அஸ்தமனமாகி செவ்வானமிட்டிருப்பதால், நாளை காற்றும், மழையும் உண்டாகும் என்று உங்களால் கூறமுடிகிறது என்றார். அவர்கள் ஒரு அடையாளத்தை தேடிக்கொண்டிருந்தால், அவர்கள் அவரைக் கண்டு, அவர் தேவன் அவர்களுக்கு அளித்த அடையாளம் என்பதை அறிந்திருப்பார்கள். ஏனெனில், அவரைக் குறித்து உரைக்கப்பட்டிருந்த தீர்க்கதரிசனங்கள் அவர்களுடைய கண்களுக்கு முன்னால் நிறைவேறிக் கொண்டிருந்தன. இருப்பினும் அவர்கள் ஒரு அடையாளத்தை எதிர்நோக்கியிருந்தனர். அடையாளம் அவர்களோடு கூட, அவர்கள் நடுவில் இருக்கும் போதே, மனிதர் ஒரு அடையாளத்தை தேடிக் கொண்டிருப்பதென்பது எவ்வளவு விசித்திரமான செயல்! இஸ்ரவேல் ஜனங்கள் அந்த நிலையைத் தான் அடைந்திருந்தனர். 24சில சமயங்களில் இந்த அடையாளம் கடந்து செல்ல வேண்டிய துன்புறுத்தல், திகைப்பூட்டுவதாய் உள்ளது. இயேசு அவர் மேசியா என்னும் தேவனுடைய அடையாளத்தை நிரூபிப்பதற்கென பட வேண்டியிருந்த பாடுகள்... எசேக்கியல் என்னும் இந்த இளம் தீர்க்கதரிசி எப்பொழுதுமே ஒரு அடையாளமாக எந்நேரத்திலும் இருந்து வந்தான் என்று நாம் காண்கிறோம். அவன் எவ்வளவாக தன்னைத் துன்புறுத்திக் கொண்டான். வேதத்தில் ஒரு இடத்தில் அவன் தன் இடது பக்கமாய் முன்னூற்று தொண்ணூறு நாட்கள் ஒருக்களித்து படுத்திருந்ததாகக் காண்கிறோம். அவன் சிறுபயற்றையும், பெரும்பயற்றையும் கொண்டு வந்து தானியத்துடன் கலந்து ஒரு பானையில் போட்டு சமைத்து அதை தன் பக்கத்தில் வைத்துக்கொள்ள வேண்டுமென்றும், அவன் மறுபக்கம் புரளாமல் இடது பக்கமாய் மாத்திரம் முன்னூற்று தொண்ணூறு நாட்கள் ஒருக்களித்து படுத்திருக்க வேண்டுமென்றும் தேவன் கூறினார். அதை சற்று யோசித்துப் பாருங்கள்! அதன் பிறகு உன் வலது பக்கமாய் மறுபடியும் ஒருக்களித்து நாற்பது நாட்கள் படுத்திரு“ என்றார். அவர் இங்கு சொன்னார், “நீ காண்பது என்னவெனில்... எசேக்கியல் சொன்னான்... ”நீ ஜனங்களின் அக்கிரமத்தை சுமக்க வேண்டும். ஒவ்வொரு நாளுக்கும் ஒரு வருஷத்தைக் கணக்கிடுவேன்'' என்றார். அவன் படுத்திருந்த ஒவ்வொரு நாளுக்கும் அவர்கள் ஒரு வருஷம் சிறையிருப்பார்கள். அவர்களுடைய அக்கிரமத்தை தேவன் நினைவு கூர்ந்து அவர்கள் ஏறெடுக்கும் ஜெபங்களை இனி ஒருபோதும் கேட்க மாட்டார். 25ஆனால், அந்த மனிதன் அனுபவிக்க வேண்டியபாடுகள்! அது ஏன் அவசியமாயிருந்தது? அப்படி ஒரு மனிதன் செய்ய வேண்டிய அவசியமென்ன என்று அநேகர் வியந்ததுண்டு. ஏனெனில் ஜனங்கள் வார்த்தையைப் படிக்கத் தவறினர். அவர்கள் ஜெபம் செய்யவும் தவறினர். தேவன் இராஜாதிபத்தியமுள்ளவர். அவர் தமது தீர்க்கதரிசியை ஒரு அடையாளமாக அனுப்புகிறார். ஜனங்கள் வேதத்தை வாசிக்கவில்லை, அவர்கள் வாசிக்க அக்கரை கொள்ளவில்லை. அவர்கள் ஜெபம் செய்யவுமில்லை. ஏனெனில், செய்வதற்கு அவர்களுக்கு வேறு காரியங்கள் இருந்தன. எனவே, ஜெபம் செய்ய அவர்கள் நேரத்தை எடுத்துக் கொள்ளவில்லை. வேதம் அவர்களுக்கு சலிப்பு தட்டிவிட்டது. எனெனில், இந்த நவீன நாட்களுக்கு அல்லது எந்த நாட்களுக்கும் அது தீவிர செயல் கொண்டிருக்கவில்லை என்பதாக கருதப்படுகிறது. உங்களுக்குத் தெரியுமா, “நீங்கள் எல்லா மனுஷராலும் வாசிக்கப்படும் தேவனுடைய நிரூபங்களாயிருக்கிறீர்கள்” என்று பவுல் கூறினான் என்று நினைக்கிறேன். தேவன் தமது அடையாளத்தைக் காண்பிக்க, ஜனங்களை அடையாளங்களாக உபயோகிக்கிறார். அநேக சமயங்களில் அந்த அடையாளம், ஏறக்குறைய எல்லா சமயங்களிலுமே - தெரிந்து கொள்ளப்பட்டவர்களைத் தவிர மற்றவர்களால் அசட்டை பண்ணப்பட்டு, குறை கூறப்பட்டு, கேலி செய்யப்பட்டு, புறக்கணிக்கப்பட்டு... பழைய ஏற்பாட்டில் தீர்க்கதரிசிகளின் நாட்களிலும் அவர்களுக்கு முளை கோளாறு ஏற்பட்டு விட்டதாகக் கருதப்பட்டது. இந்த தீர்க்கதரிசிகளுக்கு மனநிலை கோளாறு ஏற்பட்டுவிட்டதென்றும் அவர்கள் மனநிலை பாதிக்கப்பட்டுவிட்டதென்றும் ஜனங்கள் எண்ணினர். இந்த தீர்க்கதரிசிகள் வனாந்தரத்திலிருந்து புறப்பட்டு வந்து அற்புதங்களை செய்துவிட்டு வனாந்தரத்துக்கு திரும்பிப் போவதை அவர்கள் கண்டனர். அவர்கள் வேதவாக்கியங்களை அறியாதிருந்த காரணத்தால், இந்த தீர்க்கதரிசிகளை அவர்கள் கேலி செய்தனர். 26உயிர்த்தெழுதலைக் குறித்து ஒருமுறை இயேசு பரிசேயர்களிடம் இவ்வாறு கூறினார். அவர்கள், எங்களுக்கு ஒரு... சகோதரன் ஒருவன் சந்தானமில்லாமல் அவனுடைய மனைவியை விட்டு இறந்து போனால், அவனுடைய சகோதரன் அவளை விவாகம் செய்து, மரித்த சகோதரனுக்கு சந்தானம் உண்டாக்க வேண்டும் என்று நியாயப்பிரமாணம் கூறுகிறது. எங்களுக்குள்ளே ஏழு சகோதரர்கள் இருந்தனர். முத்தவன் விவாகம் செய்து சந்தானமில்லாமல் மரித்து மனைவியை தன் சகோதரனுக்கு விட்டுப்போனான். அதன் பிறகு இரண்டாம் சகோதரன் அவளை மனைவியாகக் கொண்டு அவனும் சந்தானமில்லாமல் மரித்துப்போனான். அப்படியே ஏழாம் சகோதரன் வரைக்கும் செய்தார்கள். முடிவில் அந்த ஸ்திரீயும் இறந்து போனாள். உயிர்த்ததெழுதலில் அந்த ஏழு பேரில் அவள் எவனுக்கு மனைவியாயிருப்பாள்?“ என்று கேட்டார்கள். (மத். 22:22-28). 27ஓ, நான் வார்த்தையை நேசிக்கிறேன். இயேசு, “நீங்கள் வேதவாக்கியங்களையும் தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள்” என்றார்: ஒ, அவர் இங்கு நின்று கொண்டிருப்பாரானால், அதை எவ்வாறு ஆணித்தரமாகக் கூறுவார்! “நீங்கள் வேதவாக்கியங்களையும், தேவனுடைய வல்லமையையும் அறியாமல் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள். தேவனுடைய வல்லமை வேதவாக்கியங்களுடன் சம்பந்தப்பட்டது. ”நீங்கள் தப்பான எண்ணங்கொள்ளுகிறீர்கள். அவர் தொடர்ந்து, “உயிர்த்தெழுதலில் கொள்வனையும், கொடுப்பனையும் இல்லை. அவர்கள் பரலோகத்திலே தேவதூதரைப் போல் இருப்பார்கள்” என்றார் (மத். 22:30). அவர்கள் தேவதூதராய் இருப்பார்கள் என்று அவர் கூறவில்லை. அவர்கள் தேவதூதரைப் போல் இருப்பார்கள் என்று தான் கூறினார்-அவர்களுக்கு இனச்சுரப்பிகள் இருக்காது. அங்கு கொள்வனையும், கொடுப்பனையும் இருக்காது. 28நாம் மரிக்க வேண்டிய நாளில் (day of Inortality) வாழ்ந்து கொண்டிருக்கிறோம் - அதாவது மாரிக்க வேண்டிய ராஜ்யத்தில் மானிடர்களாக. ஆனால் மரிக்காமல் இருக்கும் ராஜ்யம் உள்ள காலம் ஒன்று வரப்போகிறது. அந்த ராஜ்யத்தில் மீட்கப்பட்டவர்கள் வாழ்வார்கள் - மீட்கப்பட்டு... இந்த சரீரத்தைவிட்டு செல்லும் ஜீவன் தன்னைத் தந்த தேவனிடத்திற்குத் திரும்பி, என்றாவது ஒரு நாள் அந்த ஜீவ விருட்சத்திலிருந்து திரும்பி வந்து என்றென்றைக்கும் அரசாளும். 29இந்த இளைஞன், இளம் தீர்க்கதரிசி எவ்வாறு தன் முழு வாழ்க்கையையும் தியாகமாய் அர்ப்பணித்து, அவனுடைய ஜனங்கள் சிரத்தையற்றவர்களாய் இருந்த காரணத்தால் அவர்கள் பெறப்போகும் தண்டனைக்கு அடையாளமாயிருந்தான்! அவர்கள் தேவனுடன் எவ்வித தொடர்பும் கொள்ள விரும்பவில்லை. அவர்கள் தீர்க்கதரிசிகளை விசுவாசிக்கவில்லை. அவர்கள் தீர்க்கதரிசிகளைக் கேலி செய்தனர்... இருந்த போதிலும், அவர்கள் எவ்வளவு தான் அதை விசுவாசிக்காமற் போனாலும், அதை எப்படியாயினும் அவர்கள் பெற வேண்டுமென்று தேவன் கவனித்துக் கொண்டார். எலியா அவள் போதகர் என்று யேசபேல் ஒத்துக்கொள்ள விரும்பவேயில்லை. ஆனால் அவள் எப்படியும் அந்த அடையாளத்தைப் பெற்றுக்கொள்ள தேவன் கவனித்துக் கொண்டார். இன்றைக்கு இந்த நாடும் அவ்வாறே உள்ளது. நீதியும் நேர்மையுமுள்ள தேவன், நடக்க இருப்பவைகளை, எங்காவது ஒரு அடையாளத்தை தமது வார்த்தையின் மூலம் அளிக்காமல், அவை நடக்கும்படி விடமாட்டார். அவர் எப்பொழுதுமே ஒரு அடையாளத்தைக் கொடுத்து வந்திருக்கிறார். அதை நாம் எதிர்நோக்குபவர்களாக இருக்க வேண்டும். வேதத்தை நன்றாக புரிந்து கொண்டுள்ள எவரும், அதை எப்படி எதிர்நோக்க வேண்டும் என்பதை அறிந்துள்ளனர் என்று நான் உறுதியுள்ளவனாயிருக்கிறேன். 30வரவிருக்கும் நியாயத்தீர்ப்புக்கு நோவா தன் காலத்திலிருந்த ஜனங்களுக்கு அடையாளமாகத் திகழ்ந்தான். நோவா தன் காலத்தில் மூடமதாபிமானியாகக் கருதப்பட்டான். அவன் ஒரு தீர்க்கதரிசி. அவன் புத்தி சுவாதீனம் இல்லாதவனாக கருதப்பட்டான். அவன் ஆண்டு தோறும் சுத்தியலைக் கொண்டு அடித்து, பூமியில் ஊற்றுகளைத் தவிர வேறு தண்ணீர் இல்லாத போதே, பேழையை உண்டாக்கினான். அவன் ஒன்றை முன்னுரைத்தான், அது மாமிச சிந்தைக்கு கேலியாகத் தோன்றினது. அவன், ''ஆகாயத்திலிருந்து தண்ணீர் பொழியப் போகிறது'' என்றான். அநேகர் அவனிடம், ''அது எங்குள்ளது என்று எங்களுக்குக் காண்பி“ என்று கேட்டிருப்பார்கள். ''விஞ்ஞானம், மேலே தண்ணீர் இல்லை என்று என்னால் நிரூபிக்க முடியும்'' என்று கூறியிருக்கும். இருப்பினும், வானத்திலிருந்து மழை பெய்யும் என்று தேவன் அவனிடம் கூறியிருந்தால், அந்த வார்த்தை நிறைவேறுவதை தேவன் கவனித்துக்கொள்வார். பார்வைக்கு தண்ணீர் இல்லாத போதே, ஆகாயத்தில் மேகம் எதுவும் இல்லாத போதே, ஒரு துளி மழையும் பெய்யாதிருந்த போதே, அந்நேரத்தில் மழை என்று ஒன்று இருக்கவில்லை - நோவா மழைக்காக ஒரு பேழையை எந்நேரமும் உண்டாக்கிக் கொண்டிருந்தான். இந்த தீர்க்கதரிசி என்ன கூறினானோ அதை விசுவாசித்தான் என்பதற்கு அது ஜீவனுள்ள சாட்சியாகத் திகழ்ந்தது. ஏனெனில், அவன் அதற்கென்று ஆயத்தம் பண்ணிக் கொண்டிருந்தான். அவ்வாறே, தான் பேசுகிறது இன்னதென்று உண்மையில் விசுவாசிக்கும் எந்த மனிதனும் அதற்கென்று தன்னை ஆயத்தப்படுத்துவான். 31நோவாவின் காலத்தைக் குறித்து கூறினதை ஒருநிமிடம் இங்கு நிறுத்துகிறேன். மனுஷகுமாரனுடைய வருகையிலும் அப்படி இருக்கும்“ என்று இயேசு கூறினார். இன்று சபைகள் தாங்கள் கூறுவதை விசுவாசிப்பார்களானால், அவர்கள் அதை செயல்படுத்துவார்கள். கிறிஸ்து எந்த நேரத்திலும் வருவார் என்று நாம் பிரசங்கித்து, அதே சமயத்தில் கோடிக்கணக்கான டாலர்கள் செலவழித்து பிரமாண்டமான கட்டிடங்களைக் கட்டி நம் ஸ்தாபனங்களை ஏன் இவ்வாறு பரப்ப வேண்டும்? நாம் எவ்வாறு தொடர்ந்து... நமது சபையோர் தேவனுடைய வல்லமையை விட்டுப் பிரிந்து, உலக காரியங்களில் பிரவேசித்து, அதை சபைக்குள் கொண்டு வந்து கலப்பதை நாம் எவ்வாறு அனுமதிக்க முடியும்? நாம் புகழைத் தேடி, பெரும்பாலான ஜனங்களின் கருத்தை ஆதரித்து, ஸ்தாபனங்களிலுள்ள கருத்து வேற்றுமைகளை பயன்படுத்திக் கொண்டு, அடுத்துள்ள ஸ்தாபனத்தைக் காட்டிலும் நமது ஸ்தாபனம் அதிக வளர்ச்சியடைய வேண்டுமென்று முயல்கிறோம். அப்படியானால், நாம் பிரசங்கிப்பதை எவ்வாறு செயல்படுத்த முடியும்? உலகம் அதை காண்கிறது; அவர்கள் அதை அறிந்திருக்கின்றனர். எனவே, மார்க்கம் என்பது ஏதோ ஒரு ஒழுங்கைச் சார்ந்திருத்தல் அல்லது ஒரு சங்கத்தை சார்ந்திருத்தல் என்பது போல ஆகிவிட்டது. மார்க்கம்... கிறிஸ்துவின் இரட்சிப்பு ஒரு சங்கம் அல்ல; அது ஏதோ ஒன்றைச் சேர்ந்துகொள்வதல்ல. அது ஜீவனுள்ள அனுபவம். 32நோவா, தான் உரைத்ததை செயல்படுத்தி பேழையை உண்டாக்கிக் கொண்டிருந்தான். அவன், “இந்த அநீதியுள்ள சந்ததியின் மேல் நியாயத்தீர்ப்பு வெள்ளத்தின் உருவில் வரப்போகிறது. தேவன் வானத்திலிருந்து மழையைப் பொழிந்து. பூமி முழுவதையும் வெள்ளத்தால் மூழ்கடிப்பார்” என்றான். அவன் அதை சொன்னது மாத்திரமல்ல, அதிலிருந்து தப்பிக்க அவன் ஒரு வழியை உண்டுபண்ணி, அதற்குள் வரும்படி ஜனங்களை அழைத்தான். அவர்களோ அவனுக்கு செவிகொடாமற் போனார்கள். ஆனால், நோவா தீர்க்கதரிசி என்னும் முறையில் அந்த சந்ததிக்கு அடையாளமாயிருந்தான். ஆனால் அந்த அடையாளம் மற்றவர்களால் பொல்லாப்பாக பேசப்பட்டது. அவனுக்கு பைத்தியம் பிடித்துவிட்டதென்றும் ஏதோ ஒன்றை உண்டாக்கிக் கொண்டிருக்கிறான் என்றும் கருதப்பட்டது... அதற்கு உபயோகம் உண்டாகும் என்று எவ்வித அத்தாட்சியும் எங்கும் இருக்கவில்லை. முன்பு இருந்ததும் இல்லை. இன்றைக்கும் ஜனங்கள் அவ்வாறே எண்ணியுள்ளனர். அணுகுண்டு விழும்போது தங்களைப் பாதுகாத்துக்கொள்ள பாதுகாக்கும் ஸ்தலம் (fall out shelter) கட்டிக்கொள்ள அவர்கள் ஆலோசனை செய்யக்கூடும். ஆனால் பூமியில் ஒரு மரமும், ஒரு குன்றும் விடப்படாத நிலையில் பாதுகாக்கும் ஸ்தலத்தால் என்ன பயன்? ஆனால் கிறிஸ்தவர்களாகிய நமக்கோ பாதுகாக்கும் ஸ்தலம் ஒன்றுண்டு. சில வாரங்களுக்கு முன்பு ஒரு ஞாயிறு இங்கு கூறினது போல், அல்லது வழியில் வந்து கொண்டிருந்த போது நினைத்தது போல், “இது அணுகுண்டு சேதத்திலிருந்து பாதுகாக்கும் ஸ்தலம் அல்ல: (fall out shelter). ஆனால், ''உள்ளே நுழைந்து கொள்ளும் பாதுகாப்பு ஸ்தலம்'' (fall in sheler). நாம் அதற்குள் - கிறிஸ்து என்னும் தேவனுடைய பாதுகாப்பு பேழைக்குள் நம்முடைய முழு இருதயத்தோடும். முழு ஆத்துமாவோடும், முழு மனதோடும் நுழைந்து கொள்கிறோம். 33நோவா அவன் காலத்தில், அவனுடைய பிரசங்கத்தின் காரணமாகவும், ஜனங்களுக்கு முன்பாக ஒரு அடையாளத்தை செய்து, அவர்களை எச்சரித்த காரணமாகவும் ஒரு பைத்தியக்காரன் என்று கருதப்பட்டான். பேழையை மிதக்கப்பண்ண தண்ணீர் இல்லாத போதே, அவன் பேழையை உண்டு பண்ணி உலகம் ஆக்கினைக்குள்ளானதென்று தீர்த்தான். எபிரேயர்; 11ம் அதிகாரம், அவன் உலகம் ஆக்கினைக்குள்ளானதென்று தீர்த்ததாக கூறுகிறது. அவன் உலகத்தை ஆக்கினைக்குட்படுத்தி, ஒன்றை ஆயத்தம் பண்ணி, அவனுடைய வீட்டாரை வரவிருந்த நியாயத்தீர்ப்பிலிருந்து காப்பாற்றி, அதற்கு அவனே அடையாளமாகத் திகழ்ந்தான். என்ன ஒரு மகிமையான காரியம்! 34அவனுக்கு பின்பு உண்டாயிருந்த ஒரு காலத்தில் வேறொரு அடையாளம் தோன்றியது. அது தான் தீர்க்கதரிசியாகிய மோசே. அது இஸ்ரவேலருக்கு தேவன் அளித்த அடையாளம். இஸ்ரவேல் ஜனங்கள் நானூறு ஆண்டுகளாக அடிமைத்தனத்தில் இருந்தனர். அவர்கள் விடுவிக்கப்படுவதற்கு சற்று முன்னதாக தேவன் அவர்களுக்காக ஒரு அடையாளத்தை ஆயத்தம் பண்ணினார். மோசே இஸ்ரவேலருக்கு விடுதலையின் அடையாளமாகவும் எகிப்தியருக்கு நியாயத்தீர்ப்பின் அடையாளமாகவும் இருந்தான். நோவா அவனுடைய ஜனங்களுக்கு விடுதலையின் அடையாளமாகவும், இழந்து போன உலகத்துக்கு, அவிசுவாசிக்கு நியாயத்தீர்ப்பின் அடையாளமாகவும் இருந்தான். உலகத்தை மூச்சுத்திணறச் செய்து அதை மூழ்கடித்த அதே தண்ணீர் நோவாவை காப்பாற்றுவதற்கு ஒரு அமைப்பாக இருந்தது. அவனை இரட்சித்த ஒன்றே ஒன்று நியாயத்தீர்ப்பே. இன்றைக்கு சபையை இரட்சிப்பதும் நியாயத்தீர்ப்பே. தேவன் தூக்கு நூலினால் நியாயத்தீர்ப்பை அளிக்கிறார். நோவா பிரசங்கித்துக் கொண்டே வந்தான். அவன் ஒரு அடையாளமாக இருந்தான். 35நானூறு ஆண்டுகளுக்குப் பிறகு இஸ்ரவேல் ஜனங்கள் விடுதலைக்காக கதறினர். தேவன் காண்பிப்பதை அவருடைய ஜனங்கள் ஏற்றுக்கொள்ள ஆயத்தமாயுள்ள வரைக்கும், தேவன் தம்மை ஒருபோதும் வெளிப்படுத்திக் காண்பிப்பதில்லை. இப்பொழுது... ஓ, இங்கு என்ன கூறலாம் என்றால், தேவன் எவ்வளவாக இந்த தேசத்தை நிர்வாணமான நிலையில் விட்டுவிட்டார்!அவர்களுக்கு நன்றாகத் தெரியும். செய்தித்தாள்கள் திரும்பத்திரும்ப அதை வெளியிட்டன. அவருடைய வருகையின் அடையாளங்கள் தோன்றிவிட்டன. இருப்பினும் அவர்கள் அதை அசட்டை செய்து, தங்கள் வழிகளில் சென்று கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு சாக்கு போக்குக்கு இடமில்லை. நாம் முடிவில் வந்திருக்கிறோம். ஜனங்கள் தீர்க்கதரிசி வேண்டும் என்று கேட்கும் போது மாத்திரமே தேவன் தீர்க்கதரிசிகளை அனுப்புகிறார். ஜனங்கள் அடையாளத்துக்கு ஆயத்தமாயிருக்கும் போது மாத்திரமே தேவன் தமது அடையாளத்தை அனுப்புகிறார். ஆனால் காரியம் என்னவெனில், ஜனங்கள் ஒருபோதும்... அவர்கள் உணர்ச்சியை விரும்பும் ஒரு நிலையை அடைகின்றனர், அல்லது “வானத்திலிருந்து எங்களுக்கு ஒரு அடையாளத்தைக் காண்பியும்” என்று சொல்லி ஏதோ ஒரு அடையாளத்தை விரும்புகின்றனர். ஆனால் தேவன் ஒரு அடையாளத்தை அனுப்பும்போது, அவர்கள் அதைக் காண மறுக்கின்றனர். அது ஞானிகளின், கல்விமான்களின் கண்களுக்கு மறைக்கப்பட்டு, கற்றுக்கொள்ள மனதுடைய பாலகர்களுக்கு வெளிப்படுத்தப்படுகிறது. 36அவர்கள் அந்த அடையாளத்தை அசட்டை செய்கின்றனர். ஏற்ற குழந்தை பிறந்த போது, இஸ்ரவேல் ஜனங்கள் அவர்கள் அடிமைத்தனத்தில் வாழ்ந்து கொண்டிருந்த காலம் எத்தனை ஆண்டுகள் என்பதைக் கணக்கிட்டு, “உன் ஜனங்கள் நானூறு வருஷம் அந்நிய தேசத்தில் அந்நியராய் சஞ்சரிப்பார்கள். அதன் பிறகு அவர்களை வெளியே கொண்டு வருவேன்'' என்னும் கர்த்தருடைய வார்த்தையை நினைவுகூர்ந்து. எவ்வளவாய் அதை அறிந்தவர்களாயிருக்க வேண்டும்! ஏற்ற குழந்தை பிறந்த போது, அந்த நேரம் வந்துவிட்டது என்பதை அவர்கள் உணர்ந்திருக்க வேண்டும். மோசேயின் பெற்றோர் அம்ராமும், யோகெபேத்தும் ராஜாவின் கட்டளைகளுக்கு பயப்படவில்லை. அவர்கள் முதலைகள் இருந்த நதியில் அவனைப் போட்டார்கள். ஒரு முதலையும் கூட அவனைக் கடிக்கவில்லை. அங்கு அடையாளம் இருந்ததை இஸ்ரவேல் ஜனங்கள் கண்டனர். ஆனால் அவர்கள் அதை அசட்டை செய்தனர். அவர்கள் அதற்கு ஆயத்தமாயிருக்கவில்லை. தேவன் மோசேயைக் கொண்டு வந்து, பார்வோனின் அரண்மனையில் வைத்து. பார்வோன் அவனை வளர்க்கும்படி செய்து, (அவர் தேவன்) காரியங்களை எவ்விதம் செய்கிறார் என்பதைக் காண்பிக்க அவனுக்கு தான் பெறக்கூடிய கல்வியனைத்தும் அளித்து, அதன் பிறகு அவனை வனாந்தரத்தின் பின்புறத்துக்கு கொண்டு சென்று, அவன் கற்ற அனைத்தையும் மறக்கும்படி செய்கிறார். 37முன்பு பார்வோன் அவனுக்குப் பயிற்சி அளித்தான். இப்பொழுது தேவன் அவனுக்குப் பயிற்சி அளிக்கிறார். பார்வோன் நாற்பது ஆண்டுகள் அவனுக்குப் பயிற்சி அளித்தான், அதன் பிறகு தேவன் அவனுக்கு நாற்பது ஆண்டுகள் பயிற்சி அளித்து, அதையெல்லாம் மறக்கப் பண்ணுகிறார் - மனிதனின் பயிற்சியும் தேவனின் பயிற்சியும், பார்வோன் குமாரனை தலைவனாகவும், அரசியல்வாதியாகவும் போர் வீரனாகவும் செய்து அவனை அடுத்த பார்வோனாக நியமித்து, அவன் எகிப்தை உயர்ந்த நிலையில் வைத்து, மற்ற தேசங்களை வீழ்த்தி, அவர்கள் பார்வோனுக்கு கப்பம் கட்டச் செய்ய வேண்டும் என்னும் நோக்கத்துடன் அவனுக்குப் பயிற்சி அளித்தான். ஆனால் தேவன் அவனை வனாந்தரத்தின் பின்புறத்துக்குக் கொண்டு சென்று, அதையெல்லாம் அவனை விட்டு எடுத்துப்போட்டு. ஐந்தே நிமிடங்களில் எரியும் முட்செடியிலிருந்து அவர் ஜீவனுள்ள தேவன் என்பதை அவனுக்குக் காண்பித்தார். அவனிலிருந்த பயம் அனைத்தும் அவர் நீக்கிப்போட்டு, அவனை ஆயத்தப்படுத்தினார். அவன் ஒரு அடையாளமாயிருந்தான். 38தேவன் தமது ஜனங்கள் ஜெபிக்கும்படி விரும்புகிறார். இஸ்ரவேல் ஜனங்கள் மிகவும் அவதியுற்று, அதற்கு மேல் தாங்க முடியாது என்னும் நிலையை அடைந்தது. அவர்களுடைய காலம் நிறைவேறி, அவர்கள் நினைத்ததைக் காட்டிலும் சுமை அதிகமானதை கண்டபோது, அவர்கள் ஜெபிக்கத் தொடங்கினர். ஜனங்கள் ஜெபிக்கத் தொடங்கின போது, தேவன் செவிகொடுத்தார். அது தேவனுடைய வார்த்தை நிறைவேறுவதற்கான நேரமாயிருந்தது. எனவே அம்ராமும், யோகெபேத்தும், அது தேவனுடைய வார்த்தை நிறைவேறுவதற்கான நேரம் என்பதை அறிந்த போது, அவர்கள் தேவனிடம் ஜெபத்தை ஏறெடுத்தனர். பாரத்தை உடையவர்கள் தான் வழக்கமாக ஜெபம் பண்ணுவார்கள். அவர்கள் கேட்டதைப் பெற்றுக்கொள்வார்கள். ஜெபிக்கிறவர்கள், அப்படி செய்யும்படி தேவனால் நியமிக்கப்பட்டவர்கள். 39சபைக்கு வருவதற்கென அவசரமாக ரொட்டி, “டோஸ்டை'' இன்று காலை மேசையில் தின்று கொண்டிருந்த போது, நாங்கள் பேசிக் கொண்டிருந்தோம். அப்பொழுது புற்று நோயிலிருந்து சுகம் பெற்ற ஒருவர் (இங்கிருந்து சிறிது தூரத்தில் வசிப்பவர்) மீண்டும் புகை பிடிப்பதைக் குறித்து கூறப்பட்டது. நான், ”என்ன பரிதாபம்“ என்றேன். அப்பொழுது யாரோ, மீண்டும் சிகரெட்டு பிடிப்பது என்பது மிகவும் பயங்கரமான செயல் என்றார்கள். நான், ''எனக்கு தெரியும். அது ஒரு பிசாசு“ என்றேன். நான், அது ஒரு பிசாசு. தேவனுடைய வல்லமை ஒருவன் மேல் தங்கியிருந்தாலொழிய, அவன் சிகரெட்டு பிடிப்பதை நிறுத்த முடியாது'' என்றேன். என் இளவயதில், இரண்டு பேர்களை எனக்குத் தெரியும். இருவரும் தேவனுடைய மனிதர்களாக விரும்பினர். அவர்களில் ஒருவரை நான் கிறிஸ்துவினிடம் வழி நடத்தினவுடனே, ஒரு சிகரெட்டை பற்றவைக்க முயன்றார். அவர் ஒரு நாளில் ஐந்தாறு பாக்கெட்டுகள் சிகரெட்டு பிடிப்பது வழக்கம். ஒரு சிகரெட்டு புகைத்து முடித்தவுடனே, வேறொன்றை பற்றவைத்து, இப்படியாக நாள் முழுவதும் புகைத்துக் கொண்டிருப்பார். ஆனால் இரட்சிக்கப்பட்டவுடன், அவர் சிகரெட்டைப் பற்றவைக்க முயன்ற போது, ஏதோ ஒன்று அவரைச் செய்ய அனுமதிக்கவில்லை. அவர் அடுப்பினருகில் சென்று, சிகரெட்டு புகைப்பதை வேதாகமம் கண்டிக்கிறது என்பதை அறியாமலேயே, அடுப்பைத் திறந்து சிகரெட்டு பாக்கெட்டை அதற்குள் போட்டுவிட்டார். அத்துடன் அது முடிவடைந்தது. 40கிறிஸ்தவனாக விரும்பின மற்றவரோ தன்னாலானவரைக்கும் முயன்று பார்த்தார்; அவர் தேவனிடம் கதறினார். அவர் இரண்டு, மூன்று வாரங்கள் சிகரெட்டு புகைப்பதை விட்டுவிட்டு, மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பிவிடுவார்... அவருக்கு மனநிலை கோளாறு ஏற்பட்டது. அவர் புழக்கடைக்கு ஓடி, ஒரு தகரத்தை எடுத்து தலையை அடித்துக் கொண்டு, வேகமாக வீட்டுக்குள் ஓடி, சிகரெட்டு பாக்கெட்டை எடுத்துக் கொண்டு, மாலை நேரம் வீட்டை விட்டு வெளியே செல்வதற்கு முன்பு ஒரு பாக்கெட் சிகரெட்டுகளை ஒன்றன் பின் ஒன்றாக புகைத்து விடுவார். பாருங்கள், ஒருவர் அழைக்கப்பட்டார். “என் பிதா ஒருவனை இழுத்துக் கெள்ளாவிட்டால், அவன் என்னிடத்தில் வரமாட்டான். பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும்.'' அந்த எச்சரிக்கையின் அர்த்தம். என்ன? அது ஒருவருக்கு ஜீவனாயிருந்தது. அவர் அதைக் கண்டார். தேவன் அதை வெளிப்படுத்தினாலொழிய உங்களால் அதை காண முடியாது. அது ஞானிகளின் கல்விமான்களின் கண்களுக்கு மறைக்கப்பட்டு, கற்றுக்கொள்ளக் கூடிய பாலகருக்கு வெளிப்படுகிறது. அது உண்மை. அம்ராமும், யோகெபேத்தும், அந்த நேரம் வந்துவிட்டது, அது சமீபத்து விட்டது என்பதை அறிந்திருந்தனர். ரோமர்; 9:16 41அதைக் குறித்து நான் பேசும்போது, இதைக் கூற விரும்புகிறேன். விரும்புகிறவனாலும் அல்ல, ஒடுகிறவனாலும் அல்ல, இரங்குகிற தேவனாலேயாம். (ரோமர்; 9:16). அது உண்மை. அது தேவன். எனவே இன்று... ஓ, இது ஆழமாகப் பதியட்டும்! இன்று தேவன் உங்களை அழைத்து, உங்களை உலகத்தின் காரியங்களினின்று வேறுபிரித்து, மகிமையுள்ள தேவனுடைய வல்லமை உங்களை பரிசுத்தப்படுத்தியிருந்தால், நீங்கள் உலகத்திலுள்ளவர் அனைவரிலும் மிகுந்த மகிழ்ச்சியுள்ள நபராக இருக்க வேண்டும். அவர்களால் முடியுமானால் அந்நிலையை அடைய லட்சக்கணக்கானோர் காத்திருக்கின்றனர், ஆனால் அவர்களால் முடியாது. அதை அவர்களால் பெற முடியாது. சபை வெளியே அழைக்கப்பட்டு, பிரிக்கப்படும் நாள் இதுவே. இது முன்பிருந்தததைக் காட்டிலும் வித்தியாசமானது. ஆம்! 42ஜனங்கள் ஜெபிக்க ஆரம்பித்தனர். இஸ்ரவேல் ஜனங்கள் ஜெபிக்கத் தொடங்கின் போது, தேவன் ஒரு தீர்க்கதரிசியை ஆயத்தமாக வைத்திருந்தார். தேவன் இவ்வாறு எல்லா காலங்களிலும் தீர்க்கதரிசியை ஆயத்தமாக வைத்திருந்தார். ஏனெனில் அவர் எப்பொழுதுமே ஜனங்களைக் காட்டிலும் சற்று முன்னால் இருப்பவர். அவர் அந்த மனிதனை ஆயத்தமாக வைத்திருந்தார், ஆனால் ஜனங்கள் தீர்க்கதரிசி வேண்டும் என்று ஜெபிக்கும் வரைக்கும் அவர் காத்துக் கொண்டிருந்தார். இன்றைக்கு இது எத்தகைய உதாரணமாயுள்ளது! இன்று நமக்குத் தேவை ஒரு எழுப்புதல் பிரசங்கியல்ல, எல்லா குழுக்களையும் ஒன்றாக இணைக்கத் திறனுள்ள ஒரு பெரிய ஸ்தாபனத்தை சேர்ந்த மனிதன் அல்ல. இன்றைக்கு நமக்குத் தேவை உலகத்தை கண்டித்துணர்த்தும் ஒரு செய்தியைக் கொண்ட, தேவனால் அனுப்பப்பட்ட ஒரு தீர்க்கதரிசியே. ஜனங்கள் அதற்கு ஆயத்தமாயிருப்பார்களானால், தேவன் அந்த மனிதனை ஏற்கனவே வைத்திருக்கக்கூடும். நான் என்ன கூறுகிறேன் என்பதை நீங்கள் அறிந்திருக்கிறீர்கள். அந்த மனிதனை அவர் ஒருக்கால் உலகில் எங்காவது வைத்திருக்கக் கூடும். ஆனால் ஜனங்கள் அவர் தேவையென்று கேட்க வேண்டும். தேவன் எதையும் உங்கள் தொண்டையில் திணிப்பதில்லை. நீங்கள் அதை விரும்பிக் கேட்க வேண்டும், நீதியின் மேல் பசிதாகமுள்ளவர்கள், பாக்கியவான்கள்; அவர்கள் திருப்தியடையவார்கள்“ (மத். 5:6). 43மோசே அடையாளம் கண்டு கொள்ளப்பட்ட பிறகு - ஜனங்கள் தங்களுக்கு ஒரு தலைவன் தேவை என்பதை கண்டு கொண்ட பிறகு, ஜெபிக்கத் தொடங்கினர். அவர்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டு செல்ல தலைவன் ஒருவனை அனுப்ப வேண்டுமென்று அவர்கள் தேவனிடம் முறையிட்டனர். அப்பொழுது அவர் ஒரு மனிதனை - ஒரு தீர்க்கதரிசியை - அனுப்பினார். அது அவர் அடையாளமாயிருந்தது. இந்த மனிதன் ஒரு தீர்க்கதரிசியாயிராமல், ''நான் போர் புரிவதில் சிறந்த மேதை'' என்று உரிமைகோரியிருந்தால், அந்த மனிதனை நம்பாமலிருக்க இஸ்ரவேல் ஜனங்களுக்கு உரிமை இருந்தது. எனெனில் தேவன் ஒவ்வொரு முறையும் தவறாமல் ஒரு தீர்க்கதரிசியை அனுப்பி வருகிறார். அப்படி அவர் அனுப்பாமலிருந்த ஒரு முறையாவது எனக்கு வேதத்திலிருந்து காண்பியுங்கள். அவர் எப்பொழுதுமே ஒரு தீர்க்கதரிசியை கர்த்தர் இவ்விதம் உரைக்கிறார் என்பதுடன் அனுப்புகிறார். தாவீது இஸ்ரவேல் ஜனங்கள் பெற்றிருந்தவர் அனைவரிலும் போர்புரிவதில் மிகச் சிறந்த மேதையாக இருந்த போதிலும், அவன் அதேசமயத்தில் ஒரு தீர்க்கதரிசியாக விளங்கினான். நிச்சயமாக அவன் அப்படியிருந்தான். அவன் தீர்க்கதரிசியாகிய தாவீது. 44தேவன் அனுப்பப் போகும் தீர்க்கதரிசிக்கு செவி கொடுக்க வேண்டுமெனும் வாஞ்சை ஜனங்களின் இருதயத்தில் உண்டாகும் வரைக்கும் அவர் காத்திருந்தார். அவர்களில் ஒரு சாரார் அத்தகைய வாஞ்சை உள்ளதாக கூறிக் கொண்ட போதிலும், உண்மையில் அவர்களுக்கு வாஞ்சை இருக்கவில்லை. அவர்கள் கூறினது உண்மையல்ல என்று பின்னர் நிரூபிக்கப்பட்டது. அவர்கள் உணர்ச்சி வசப்பட்டு கூச்சலிட்டனர். அவர்களோடு கூட பல ஜாதியான ஜனங்கள் (mixed multitude) சென்றதாக வேதம் கூறுகிறது (யாத்; 12:38). அது என்ன செய்தது? வனாந்தரத்தில் தொல்லையை விளைவித்தது. ஒவ்வொருமுறையும் ஒரு அற்புதம் நிகழந்த போது... ஓ, இதை என்னால் ஆழமாகப்பதியச் செய்ய முடிந்தால் நலமாயிருக்கும். ஒவ்வொரு முறையும் தேவன் ஒன்றை அனுப்பின் போது, ஏதோ ஒரு மாம்சப்பிரகாரமான போலிச் செயல் அதனுடன் ஒவ்வொரு முறையும் தோன்றினது. எப்பொழுதுமே அதை, “பாவனை விசுவாசிக்கத்தக்கதாக அது ஜனங்களுக்கு நல்லதாக காணப்பட்டது. ஆனால் உண்மையான தேவனுடைய தீர்க்கதரிசி எவனும் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதில் நிலைத்திருக்கிறான். அவன் தேவனால் அனுப்பப்பட்டிருந்தால், வேதத்தைவிட்டு ஒருக்காலும் விலகமாட்டான். மோசே வேதத்தில் முற்றிலுமாக நிலைத்திருந்தான். தேவன், அவர்களை நான் வெளியே கொண்டு வருவேன்“ என்றார். அவர் மோசேயிடம், அந்த வேலையைச் செய்ய உன்னை அனுப்புகிறேன்'' என்றார். மோசேக்கு ஒரு அனுபவம் உண்டாயிருந்தது. அவன் தேவனை சந்தித்தான். அவன் கர்த்தருடைய வார்த்தையைப்பெற்றிருந்தான். தேவன் தீர்க்கதரிசிகளை அனுப்பும் காரணமே, அவர்கள் கர்த்தருடைய வார்த்தையை உடையவர்களாயிருக்கின்றனர் என்பதால், கர்த்தருடைய வார்த்தை தீர்க்கதரிசிகளிடத்தில் வருகிறது. ஒருவன் கர்த்தருடைய வார்த்தையைக் கொண்டிராவிட்டால், அவன் தீர்க்கதரிசியல்ல. 45காலங்கள் தோறும் மாம்சப்பிரகாரமான போலியாட்கள் எழும்பி, அவர்கள் தீர்க்கதரிசிகள் என்று உரிமை கோரி வந்துள்ளனர். ஆனால் அவர்கள் எப்பொழுதுமே தேவனுடைய வார்த்தையை விட்டுவிலகிச் செல்கின்றனர். ஆனால் உண்மையான தீர்க்கதரிசி வார்த்தையில் முற்றிலும் நிலைத்திருக்கிறான். நான் கூறினதை மறந்து விடாதீர்கள்! உண்மையான தீர்க்கதரிசி கர்த்தர் உரைக்கிறதாவது என்பதில் நிலைத்திருக்கிறான். கடைசி நாட்களில் நடக்கவிருப்பதைக் குறித்து தேவன் நம்மை எச்சரித்திருக்கிறார். ஆனால் உண்மையான உழியக்காரன், உண்மையான தீர்க்கதரிசி, கர்த்தர் உரைக்கிறதாவது என்பதில் நிலைத்திருக்க ஒருபோதும் தவறமாட்டான். மோசே கர்த்தருடன் நிலைத்திருந்தான். அவன் ஒரு அடையாளமாயிருந்தான். இஸ்ரவேல் ஜனங்கள் விடுவிக்கப்படும் நாள் நெருங்கிவிட்டது என்பதற்கு அவன் இஸ்ரவேலருக்கு அடையாளமாகவும், எகிப்தியரின் முடிவு நெருங்கிவிட்டது என்பதற்கு அவன் எகிப்தியருக்கும் அடையாளமாயிருந்தான். அவ்வாறே அவர்கள் - பார்வோனின் சேனை அனைத்தும் - சிவந்த சமுத்திரத்தில் மூழ்கி இறந்தனர். அவர்களுடைய இராணுவ பலம் முடிவை அடைந்தது. ஒரு தேசத்தின் முடிவுக்கு தீர்க்கதரிசி அடையாளமாகத் திகழ்ந்தான். 46அதை சிந்தித்துப் பாருங்கள்! தேவன் எவ்வளவு பெரியவர் என்றும் அவர் எப்படிப்பட்ட எளிய விதத்தில் கிரியை செய்கிறார் என்றும்! கல்லாதவர் அதை புரிந்துக்கொள்ள முடியுமென்றால், கற்றவர் அதை நிச்சயம். புரிந்துக்கொள்ள வேண்டும். எகிப்தின் சேற்றுக்குழியில் வேலை செய்த அடிமைகள், அது தேவனிடத்திலிருந்து வந்த தீர்க்கதரிசி என்றும், அந்த நேரம் சமீபத்து விட்டதென்றும் புரிந்து கொண்ட போது, பார்வோனின் அரண்மனையிலிருந்தவர்கள் இன்னும் எவ்வளவு அதிகமாக புரிந்து கொண்டிருக்க வேண்டும்! ஆனால் அப்படிப்பட்டவர்கள் தான் அதை புரிந்துகொள்வதில்லை. அப்படிப்பட்டவர்களே அதை எப்பொழுதும் இழந்து விடுகின்றனர். இஸ்ரவேல் புத்திரர் கடந்து செல்வதை மோசே சன்னலின் வழியாக நோக்கிய வண்ணம் நின்று கொண்டிருந்தான்... இஸ்ரவேல் ஜனங்களுக்கு... பார்வோனுக்கு அவர்கள் அடிமைகளாகவும் நாய்களாகவும் காணப்பட்டனர். ஆனால், மோசேக்கு அவர்கள் தேவனால் தெரிந்துக் கொள்ளப்பட்டவர்களாக காட்சியளித்தனர். மோசே கிறிஸ்துவின் நிமித்தம் வரும் நிந்தையை தானாகவே தெரிந்து கொண்டு, அநித்தியமான பாவ சந்தோஷங்களைப் பார்க்கிலும் இதை அதிக பாக்கியமென்று எண்ணி, இனிவரும் பலன் மேல் நோக்கமாயிருந்ததாக வேதம் உரைக்கிறது. (எபி; 11:25-26). 47அவர்கள் மண் பிசைகிறவர்கள் அல்ல; அவர்கள் வாக்குத்தத்தத்தைக் கொண்டிருந்த ஜனங்கள் என்பதை மோசே அறிந்து கொண்டான். அவனும் தான் யாரென்பதை அறிந்திருந்தான். அவனால் அதை அவர்களிடம் கூற முடியவில்லை; அவர்கள் அதை அடையாளம் கண்டுக்கொள்ள வேண்டும். அவன் செய்ய வேண்டிய வேலை என்னவென்று அறிந்திருந்தான். தேவன் அவனை ஒரு நோக்கத்துக்காக எழுப்பினார் என்பதை அவன் அறிந்திருந்தான். ஆனால் அவன் அவர்களுக்கு அதை எடுத்துக் கூறவில்லை. அவர்கள் அதைஅடையாளம் கண்டுகொள்ளும் வரைக்கும், அவன் யாரென்று வெளிப்படையாக அறிவிக்கவில்லை. அவர்கள் அடையாளத்தைக் கண்டபோது அவனை அறிந்து கொண்டனர். தேவன், நான் இஸ்ரவேலருக்கு ஒரு அடையாளத்தைக் கொடுப்பேன். இந்த கோலை எடு; அதை சர்ப்பமாக மாற்று. அவர்கள் அதற்கு செவிகொடாமற்போனால், உன் கையை மார்பின் மேல் போட்டு அதை வெளியே எடு; அதனால் உண்டான குஷ்டத்திலிருந்து உன்னை சுகமாக்கிக்கொள். அப்பொழுது அவர்கள் விசுவாசிப்பார்கள். அவர்கள் அதற்கும் செவிகொடாமற் போனால், நீல நதியின் தண்ணீரை மொண்டு வெட்டாந்தரையில் ஊற்று. அப்பொழுது எகிப்திலுள்ள தண்ணீர் அனைத்தும் இரத்தமாக மாறும் என்றார். அது ஒரு தேசிய அடையாளம். அப்பொழுது ஜனங்கள் விசுவாசிப்பார்கள். தேவனுடைய அடையாளத்தை அவர்கள் காணும் போது அதை ஏற்றுக்கொள்ள ஆயத்தமாயுள்ளவர்கள் அதை விசுவாசிப்பார்கள். ஆனால் தேசமோ வேறுவிதமான அடையாளத்தை பெறவேண்டும். எனவே, அவர் எல்லோருக்கும் அடையாளத்தைக் கொடுத்தார். 48தேசத்தின் முடிவை அறிவிக்க தேவன் ஒரு மனிதனை, தாழ்மையுள்ள ஒரு மனிதனை, ஒரு தீர்க்கதரிசியை அடையாளமாக உபயோகித்தார். தேவனே, வேறொருவரை எங்களுக்கு அனுப்பும்; வேறொருவரை எங்களுக்கு எழுப்பும் தேவனுடைய ஜனங்கள் இவ்வாறு ஜெபம் செய்வார்களானால், அவர் அவனை எழுப்புவார். ஜனங்களுக்கு அந்தபாரம் உண்டாக வேண்டும். அவர்கள் விழித்தெழும்ப வேண்டும். அவர்கள் உணர வேண்டும். நாம் வாழும் காலம் என்னவென்றும், நம்மைச் சுற்றிலும் உள்ள நிலை என்னவென்றும், அவர்கள் அறிந்து கொண்டு விழித்தெழும்ப வேண்டும். ''நீங்கள் எப்பொழுதும் போலவே வாழ்ந்து, நான் அடுத்த ஆண்டு புது வீடு கட்ட வேண்டும். ஜோன்ஸ் குடும்பத்தினர் வைத்துள்ளதைக் காட்டிலும் ஒரு நல்ல காரை வாங்க வேண்டும். நான் இதை செய்ய வேண்டும்...'' என்று கூறுவீர்களானால். ஒ, இப்படியாக நீங்கள் சிந்தித்துக் கொண்டிருந்தால்... அது நல்லது தான். ஆனால் சகோதரனே, இவையனைத்தும் அழிந்து போகும் என்பதை நீ உணர வேண்டும். இயேசு, “சரீரத்தை அழிக்க வல்லவருக்கு பயப்படாதிருங்கள் (ருஷியாவின் அணுகுண்டுக்கு...) இந்த சரீரத்தை சில நிமிடங்களுக்குள் புழுதியாக மாற்ற வல்லவருக்கு பயப்படாதிருங்கள். ஆனால் அந்தவிதமாக உங்கள் சரீரத்தை மாற்றி, உங்கள் ஆத்துமாவை நரகத்தில் அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்” என்றார் (மத்;10:28). அது தான். 49என் தாயார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்த போது, அங்கிருந்த ஒரு மருத்துவரிடம் நான் பேசிக்கொண்டிருந்தேன். அவர் என்னிடம், விஞ்ஞானம், உடல்நலனைக் குறித்து எவ்வளவு பெரிய சாதனை புரிந்துள்ளதென்றும், உடலில் மருந்தை ஏற்றினால், அது எவ்வாறு ஒரு குறிப்பிட்ட கிருமியைக் கொன்று, ஜீவ கிருமியைக் காக்கிறது என்றும் விளக்கினார். நான், அது அற்புதமானது. அது மிகவும் அருமையானது என்றேன். நான் சிறிது நேரம் அவர் கூறுவதைக் கேட்டுக் கொண்டிருந்து விட்டு அவரிடம், “டாக்டர், அது நல்லது. அதை நான் பாராட்டுகிறேன். அது மிகவும் அருமையானது. அதற்காக நான் தேவனுக்கு நிச்சயம் நன்றியுள்ளவனாயிருக்கிறேன். ஆனால் பாருங்கள். சிருஷ்டிக்கப்பட்ட ஒன்றைக் குறித்து கண்டுபிடிக்க உங்கள் வாழ்நாள் முழுவதையும் கழிக்கிறீர்கள். அதை சிருஷ்டித்தது யார் என்பதைக் குறித்து நீங்கள் சிறிது நேரமாவது சிந்தித்ததுண்டா? அதை சிருஷ்டித்தது யார்? அதை உருவாக்கினது யார்? தேவனே அதை உருவாக்கினவர். சிருஷ்டிப்பைக் காட்டிலும் சிருஷ்டிகர் எவ்வளவு பெரியவர்! நாம் சிருஷ்டிப்புக்கு இவ்வளவு முக்கியத்துவம் செலுத்துகிறோம். ஆனால் வானத்தையும், பூமியையும், சரீரத்தையும், ஜீவனையும் சிருஷ்டித்தவரைக் குறித்து நாம் நினைப்பதேயில்லை. அவர் விரும்பும் எந்த நேரத்திலும் இதை அழித்து போடக்கூடும். ஏனெனில், ''இது அவருடையது” என்றேன்.'' 50ஆராய்ச்சி செய்வதற்கு மனித சரீரம் மிகவும் அற்புதமானது. அதை நாம் பாராட்டுகிறோம். அவர்கள் ஒரு மனிதனின் கண்ணை எடுத்து வேறொரு மனிதனுக்கு பொருத்த முடியும். அவர்கள் கண்கள் இணைக்கப்பட்டுள்ள மெல்லிய நரம்புகளைப் பிரித்து, ஒரு மனிதனின் கண் குழியிலுள்ள கண்ணை எடுத்து, வேறொரு மனிதனின் கண் குழியில் அதை பொருத்தும் போது, அந்த மனிதனுக்கு பார்வை கிடைக்கிறது. அது மிகவும் அற்புதமானது. முன்பெல்லாம் பிரசவத்தின் போது, தாயால் குழந்தையை பிரசவிக்க முடியாத நிலை ஏற்படுமானால் தாயும், குழந்தையும் இறந்துவிடுவது வழக்கம். அது உண்மை. ஆனால் இப்பொழுதெல்லாம் இதைக் குறித்து நீங்கள் கேள்விப்படுவது அபூர்வம் - ஒருக்கால் கேள்விப்படவே முடியாது. தாய்க்கு பிரசவத்தின் போது இத்தகைய நிலை ஏற்படுமானால், அவர்கள் தாயை ஒரு அறைக்குள் கொண்டு சென்று, அவளுக்கு சிறிது மயக்கம் கொடுத்து, குழந்தையை வெளியே எடுத்துவிடுகிறார்கள். அதை நாம் பாராட்டுகிறோம். 51எனக்கு ஒரு அமைப்பைக் காண்பியுங்கள்... நகருக்கு தண்ணீரை அளிக்கும் இந்த அமைப்பில், ஏதாவது ஒரு 'வால்வை' (Valve) முடிவிட்டு, மெயின் வால்வுக்கு என்ன நடக்கிறதென்று கவனியுங்கள். அது உடைந்துவிடும். ஆனால் நாம் காலையோ அல்லது கையையோ வெட்டிவிடுகிறோம். தேவன் அற்புதவிதமாக இரத்தத்தை வேறு வழியாக கடக்கப் பண்ணி அந்த நபரின் உயிரைக் காப்பாற்றுகிறார். அப்படி யார் செய்ய முடியும்? என்னிடம் சொல்லுங்கள் பார்க்கலாம்? தண்ணீரை ஒரு 'வால்வ்' பம்ப் செய்து கொண்டிருக்கும் போது ஒரு குழாயை, மெயின் லயினை எங்காவது மூடிவிட்டால் என்ன நடக்கிறது? அதை ஒருமுறை செய்து என்ன நடக்கிறதென்று பாருங்கள். அது வேறு வழியாகச் செல்வதற்கு வழியேயில்லை. எனவே, அது அழுத்தத்துடன் அந்த வால்வை அடைந்து அந்த வால்வ் உடைந்துவிடும். தேவன் இந்த இரத்தம் தானாகவே உடனடியாக வேறு வழியாகச் செல்ல வழி உண்டாக்காமல் இருந்திருப்பாரானால், அந்த இரத்தம் இருதயத்தை அடைந்து நீங்கள் இறந்துவிடுவீர்கள். ஒவ்வொருமுறையும் நீங்கள் விரலை நசுக்கிக்கொள்ளும் போதும், அது உடனடியாக மரணத்தை விளைவித்திருக்கும். ஒவ்வொருமுறையும் உங்கள் உடலில் அறுப்பு ஏற்பட்டு, அதன் விளைவாக இரத்தக்குழாய் திறந்து இரத்தம் வெளிவருமானால், அது உடனடியாக மரணத்தை விளைவிக்கும். உங்கள் விரல் அறுபட்டால், நீங்கள் இறந்துவடுவீர்கள். அவ்வளவு தான். இரத்தம் இருதயத்தை அமுத்தத்துடன் அடைந்து உங்களைக்கொன்று விடும். ஆனால் தேவன்... அது அற்புதமானதென்று நாம் கருதுகிறோம். நாம் நினைக்கிறோம். அது அற்புதமானதென்றும், எவ்வாறு மருத்துவ விஞ்ஞானம் அந்த இரத்தக் குழாய்களை கட்டி, இரத்தம் வெளியே வராமல் நிறுத்த முடிகிறது என்பதையும் நாம் பாராட்டுகிறோம். அதெல்லாம் மிகவும் அருமையானதே! ஆனால் அந்தவிதமாக அதை உருவாக்கினது யார்? பாருங்கள், நாம் சிருஷ்டிப்பு அனைத்தையும் கண்டுவிட்டு, அதை சிருஷ்டித்தவரை மறந்துவிடுகிறோம். நாம் இயற்கையில் காண்பவைகளின் மேல் கண்ணோட்டம் செலுத்தி ஆவிக்குரியவைகளை மறந்துவிடுகிறோம். அப்படித்தான் நாம் செய்கிறோம். 52இப்பொழுது, தேவனுடைய தீர்க்கதரிசிகள், அவர்கள் தேவனுடைய வார்த்தையைக் கொண்டுள்ளனர். ஆகையால் தான் ஜனங்கள் அவர்களை நம்புகின்றனர். ஆகையால் தான் தேவன் மோசேயிடம் என்ன கூறினார் என்றால்... அவர் ஆதியாகமத்திலும், யாத்திராகமத்தில் பலவிடங்களிலும், வேதாகமம் முழுவதிலும், “உங்களுக்குள்ளே ஒரு தீர்க்கதரிசியானாலும் ஆவியைப் பெற்றவனாகிலும் எழும்பி... என்றார். நாம் எப்படி இவைகளை அறிந்துக்கொள்வது? அவர், ''அவன் ஒன்றைத் தீர்க்கதரிசனமாக உரைத்து அது நிறைவேறுமானால், அவனை விசுவாசியுங்கள்'' என்றார். பாருங்கள்? அது ஒரு அடையாளம். அவர் தமது வார்த்தையை, அரசியல் தலைவர்களுக்கல்ல, சர்வாதிக்காரிகளுக்கல்ல தீர்க்கதரிசிகளுக்கு அளிக்கிறார். க்ரூஷேவ் இவ்வுலகிற்கு அடையாளமல்ல. இல்லை, ஐயா! ஹிட்லர் இவ்வுலகிற்கு அடையாளமாயிருக்கவில்லை. ஆனால் எங்கோ, எங்காவது ஓரிடத்தில், தேவன் தமது தாழ்மையுள்ள தீர்க்கதரிசியை வைத்து, அந்த நேரத்துக்காக காத்திருக்கச் செய்கிறார். அவனே அடையாளமாயிருக்கிறான்! அவனே அடையளமாயிருந்து, உலகத்தை ஆக்கினைத் தீர்ப்புக்குட்படுத்தி, சபையைக் காப்பான் - தீர்க்கதரிசி. 53எலியா அவன் காலத்தில் அடையாளமாக விளங்கினான் - தீர்க்கதரிசியாகிய எலியா... அவன் தேவனுடைய வார்த்தையின் அடையாளமாகத் திகழ்ந்தான். மோசேயை விசுவாசித்த இஸ்ரவேலருக்கு விடுதலையும் எகிப்துக்கு நியாயத்தீர்ப்பும். எலியா வாழ்ந்த பாவம் நிறைந்த காலத்தில், இஸ்ரவேல் ஜனங்கள் தேவனை விட்டுப் பின்வாங்கி பாவத்துக்கு சென்று விட்டிருந்தனர். அவர்கள் ஒழுங்கை மறந்துவிட்டனர். அவர்கள் தேவனால் வழி நடத்தப்பட்டதையும், மகத்தான யோகோவா சிவந்த சமுத்திரத்தைப் பிளந்து எகிப்திலிருந்து அவர்களை வெளியே கொண்டு வந்ததையும், அவர்கள் மத்தியில் மோசே என்னும் பெரிய தீர்க்கதரிசி இருந்ததையும் மறந்துவிட்டனர். நாமும் கூட மறந்துவிடுகிறோம். மெதோடிஸ்டுகளாகிய நீங்கள் ஜான் வெஸ்லியை மறந்துவிட்டீர்கள். லூத்தரன்களாகிய நீங்கள் மார்டின் லூத்தரை மறந்துவிட்டீர்கள். பாப்டிஸ்டுகளாகிய நீங்கள் ஜான் ஸ்மித்தை மறந்து விட்டீர்கள். நம்மில் அநேகர் அவர்கள் அனைவரிலும் மிகப் பெரியவரான, சார்லஸ் ஃபின்னியை மறந்துவிட்டோம். 54ஃபின்னியின் ஊழியத்தில் இரட்சிக்கப்பட்டவர்களில் தொண்ணூற்றேழு சதவிகிதம் பேர் நிலைத்திருந்ததாக கூறப்படுகிறது. முடியின் ஊழியத்தில் இரட்சிக்கப்பட்டவர்களில் எழுபத்தைந்து சதவிகிதம் பேர் ஒரு ஆண்டில் பின்மாற்றம் அடைந்தனர். பரிசுத்தரின் குழுவாகிய வெஸ்லியின் குழு தொடர்ச்சியாக பின்மாற்றம் அடைந்து கொண்டேயிருந்தது. ஆனால் ஃபின்னிக்கு, தொண்ணூற்றேழு சதவிகிதம் பேர் இருந்தனர். சிறு உருவம் படைத்த, மெலிந்த, வழுக்கை தலையுடைய அவர் பிரசங்க பீடத்துக்கு சென்று அங்கு கூடியிருந்தவர்களை இப்படி பார்த்தால் ஆண்களும், பெண்களும் மயங்கி விழுவார்களாம். ஏனெனில், பரிசுத்த ஆவி அவரைப் பீடிக்கும் வரைக்கும் அவர் ஒரு நாள் புதரில் தங்கியிருந்தார். அது தான்! ஏறக்குறைய இருபது ஆண்டுகளுக்கு முன்பு, வெஸ்லியின் மூலமாகவும் மற்றவர் முலமாகவும் உண்டான எழுப்புதல் முடிவு பெற்று நியாயத்தீர்ப்பு வருகிறது என்பதற்கு அவர் அடையாளமாகத் திகழ்ந்தார். அவர் அடையாளமாயிருந்தார்... அந்த பாவமுள்ள சந்ததிக்கு. 55அங்கு எலியா தன்னந்தனிமையாக தைரியமாகவும், கண்டிப்பாகவும் நின்று கொண்டிருந்தான் (ஆமென்!). யாருமே அவனுடன் கூட இருக்கவில்லை. ஆனால் அவன் தேவனுடைய அடையாளமாயிருந்தான். மற்ற குருவானவர்கள் அனைவரும் நவீனம் என்னும் போக்கில் சென்று ஆகாபுடன் சேர்ந்து கொண்டனர். அவர்கள் அந்த சந்ததியில் நவீனமடைந்தனர். ஆகாபும் அவனுக்குண்டாயிருந்த அனைவரும் சபை முழுவதையுமே கத்தோலிக்க மார்க்கத்துக்குள் - கத்தோலிக்க மார்க்கத்துக்கல்ல, ஏறக்குறைய அது போன்ற ஒன்று - விக்கிரகாராதனைக்குள் கொண்டு வந்து, அவர்கள் தங்கள் விருப்பப்படி நடந்துகொள்ளவும். சிலர் இந்த விதமாக தொழுதுகொள்ளவும், “நீங்கள் என்னவேண்டுமானாலும் செய்யலாம் என்பது போன்ற சுதந்திரத்தை அவர்களுக் களித்து, அவர்களை அப்படிப்பட்ட நிலைக்கு கொண்டு வந்துவிட்டனர். 56எலியா அங்கு கர்த்தர் உரைக்கிறதாவது என்பதுடன் எவ்வளவு தைரியமாக நின்று கொண்டிருந்தான்! ஓ தேவனே, அப்படிப்பட்ட மனிதனை எங்களுக்குத் தாரும். யேச்பேலிடம் அவளுடைய நிலைமையை எடுத்துக் கூற அவன் அஞ்சவேயில்லை. அவன் ஆகாபுக்கு அஞ்சவில்லை. அவன் தவறாக புரிந்து கொள்ளப்படுவானோ என்று அஞ்சவேயில்லை. அவன் தைரியமாக ஆகாபிடம் நடந்து சென்று, “என் வாக்கின்படியேயன்றி வானத்திலிருந்து பனியும் கூட பெய்யாது என்றான். ஆமென். அவன் யார்? பாவமுள்ள அந்த சந்ததிக்கு அவன் அடையாளமாயிருந்தான். இஸ்ரவேலர் அதை கண்டார்களா? இல்லை. அவர்கள் அவனைப் பார்த்து நகைத்து, அவனைக் கேலி செய்தனர். பஞ்சம் வரப்போகிறதென்றும், தொல்லை, பசி, பட்டினி உண்டாகுமென்றும் அவன் முன்னுரைத்தான். அவன் தனிமையாக கர்த்தர் உரைக்கிறதாவது என்பதுடன் நின்று கொண்டு தைரியமாக தீர்க்கதரிசனம் உரைத்தான். அவன், “கர்த்தாவே, அவர்கள் உண்மையான அனைவரையும் கொன்று போட்டார்கள். அவர்கள் அனைவரையும் கொன்று போட்டார்கள். உம்முடைய வார்த்தையில் நிற்பவர்களில் நான் ஒருவன் மாத்திரமே மீதியாயிருக்கிறேன்” என்றான். தொல்லைக்குக் காரணம் என்ன? தேவனுடைய வார்த்தையே. 57எலியா வார்த்தையில் நிலைத்திருக்க விரும்பினான். அவன் உண்மையான தீர்க்கதரிசி. மற்ற தீர்க்கதரிசிகள், “ஓ, அதனால் பாதகமில்லை. யேகோவா அதைக் குறித்து கவலை கொள்வதில்லை'' என்றனர். யோகோவா கவலைகொள்கிறார்! ''அது அவருடைய வார்த்தையாக இருக்க வேண்டும். எலியா அந்த வார்த்தையின் மேல் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதுடன் தைரியமாக நின்று கொண்டிருந்தான். ஒருநாள் தேவன் அவனிடம் ஒரு சிறு இரகசியத்தைக் கூறினார். அவர், எலியாவே, நீ சாட்சி கூறினதன் விளைவாக எனக்கு ஏழாயிரம் பேர் இங்கிருக்கிறார்கள். அவர்கள் வெளியே வந்து அதை உரிமைகோர அவர்களுக்குப் போதிய தைரியமில்லை. அவர்கள் புதர்களில் ஒளிந்து கொண்டிருக்கிறார்கள். இருப்பினும் அவர்களுடைய இருதயத்தில், அவர்கள் என் ஊழியக்காரர்கள். அவர்கள் தங்கள் முழங்காலை பாகாலுக்கு முன்பாக முடக்கவில்லை. அவர்களுக்கு வெளியே வர பயமாயுள்ளது. ஆனால், நான் ஒரு அடையாளத்தை உனக்குக் கொடுக்கிறேன். நீயே அடையாளம். அங்கு என் வார்த்தையில் உறுதியாய் நில். நான் உன்னைக் கவனித்துக்கொள்வேன். அவர்களுக்கு ஒரு அடையாளத்தைக் கொடு'' என்றார். அல்லேலூயா! தேவனே, தேவனுடைய வார்த்தைக்கு அடையாளமாயுள்ள அப்படிப்பட்ட ஒருவரை எங்களுக்கு அனுப்பும்!தேவன் அளித்துள்ள ஒவ்வொரு வாக்குத்தத்தமும் அந்த நபரில் நிறைவேறும். ஏனெனில், அவர் ஒரு அடையாளமாயிருப்பார் மறக்கப்பட்ட அடையாளமாக. ஒ, ஆகாப் பெரிய ராஜாவாக இருந்து, எல்லா தேசங்களும் அவனுக்குப் பயப்பட்டதனால், அது போதும் என்று அவர்கள் எண்ணியிருந்தனர். ஆனால் எலியா வார்த்தைக்கு அடையாளமாயிருந்தான். உண்மையான தீர்க்கதரிசி வார்த்தைக்கு அடையாளமாயிருக்கிறான். அவன் வார்த்தைக்கு அடையாளமாயிருந்த காரணத்தால், அவர்கள் அவனை நம்பவில்லை. அவன் அவர்களுக்கு எந்த வகையிலும் உபயோகமாயிருக்கவில்லை. 58தேவன் அவனை கர்மேல் பர்வதத்திலிருந்து கேரீத் ஆற்றண்டைக்கு அனுப்பின பிறகு, அவன் அங்கு காகங்களால் போஷிக்கப்பட்டான். ஆற்றின் தண்ணீர் வற்றின போது. அவன் இந்த விதவையின் வீட்டுக்குச் சென்றான். ஒரு பிரசங்கி செல்வதற்கு அது எப்படிப்பட்ட இடம்! இருப்பினும், தேவன் அவனுக்குக் கட்டளையிட்டதால் அவன் அங்கு சென்றான். அவர், “உன்னைப் போஷிக்க அவளுக்குக் கட்டளையிட்டேன்'' என்றார். அவள் ஒரு அடையாளமாயிருந்திருக்க வேண்டும்... அவளுக்கு ஒரு அப்பத்தைச் சுட்டு அவளும் அவளுடைய மகனும் புசிக்க போதிய மாவு இருந்த போது, அதை சுட்டு எடுக்க போதிய கலசம் - போதிய எண்ணெய் கலசத்தில் இருந்தபோது அவன் ஒரு அடையாளமாக இருந்திருக்க வேண்டும். அவள், இங்கு நான் இரண்டு சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டிருக்கிறேன்“ என்றாள். 59அந்த பயங்கரமான, மிக வெப்பமான காலை வேளையில், முகத்தில் முடி வளர்ந்து, நரைத்த மயிர் பின்னால் தொங்கி, பிரகாசிக்கும் வழுக்கை தலையைக் கொண்ட ஒரு வயோதிபன் வாசலின் மேல் சாய்ந்து கொண்டு, “குடிக்கக் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வா என்று சொல்லிவிட்டு,” அதன் கூட ஒரு அப்பத்தையும் கொண்டு வா“ என்றான். அவள், “என்னிடம் கொஞ்சம் மாவு தான் இருக்கிறது. எனக்கும், என் மகனுக்கும் ஒரு சிறு அப்பம் சுட, நான் இரண்டு சுள்ளிகளைப் பொறுக்கிக் கொண்டிருக்கிறேன். அதை புசித்துவிட்டு நாங்கள் சாகப்போகிறோம் என்றாள். அவன், பயப்படாதே. கர்த்தர் உரைக்கிறதாவது என்றான். அப்படிப்பட்ட மனிதன் தான் நமக்குத் தேவை. ''சகோதரியே, அது ஒருக்கால் நடக்கக் கூடும். அது நிறைவேறக் கூடும். எனக்குத் தெரியாது'' என்று சொல்பவன் அல்ல. இல்லை, இல்லை! எலியா உறுதி கொண்டிருந்தான். “கர்த்தர் உரைக்கிறதாவது.'' தேவன் பூமியில் மழையைப் பெய்யப் பண்ணும் வரைக்கும் பானையிலுள்ள மாவு குறைந்து போவதுமில்லை, கலசத்திலுள்ள எண்ணெய் தீர்ந்து போவதுமில்லை. ஆமென்! பார்த்தீர்களா? அது அவளுக்குப் போதிய அடையாளமாக இருந்திருக்கும். 60“அவள் இன்றைய சபைக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறாள். எலியா அவளிடம் சிறிது நேரம் தங்கின பிறகு... அவளுக்கு ஒரு சிறு பையன் இருந்தான். அவன் வியாதிப்பட்டான். அவன் பயங்கரமாக வியாதிப்பட்டு அவனுடைய மூச்சு நின்றுபோனது. அவன் இறந்து போனான். அவள் என்ன செய்தாள்? சபை ஏற்கனவே இந்த அடையாளங்களைக் கண்டுள்ளது. ஆனால் என்ன? சிறு கஷ்டம் உண்டானவுடனே, அவள் சபையின் மேல் பழி சுமத்துகிறாள். அவள் எலியாவின் மேல் பழி சுமத்தினாள். அவள், தேவனுடைய மனிதனே, என் பாவங்களை என் ஞாபகத்துக்குக் கொண்டு வந்து, என் மகனின் உயிரைப் போக்கவே நீர் வந்திருக்கிறீர் என்றாள். எலியா அந்த பையனை மாடியிலுள்ள தன் படுக்கை அறைக்குக் கொண்டு சென்று, தன் படுக்கையில் கிடத்தி, அவன் மேல்கிடந்து, “கர்த்தராகிய தேவனே (அல்லேலூயா!) இந்த பையனின் ஆத்துமாவைத் திரும்ப அனுப்பும்” என்றான். அந்த குழந்தை உயிர் பெற்று எழுந்தது. அவன் அதை கீழே கொண்டு வந்தான். அந்த ஸ்திரீ குழந்தையை உற்று நோக்கினாள். அதன் பிறகு அவனை நோக்கினாள். அங்கு ஏதோ ஒன்று இருந்ததென்று அவள் கண்டு கொண்டாள். அவள், தேவனுடைய வார்த்தை உம்முடைய - வாயில் இருக்கிறதென்று இதன் மூலம் அறிகிறேன்“ என்றாள். ஆமென்! அவன் அந்த விதவைக்கு அடையாளமாயிருந்தான். உயிரோடெழுப்பக்கூடிய அல்லது கொல்லக்கூடிய தேவனுடைய வல்லமை அவளுடைய மகனை உயிரோடெழுப்பினதை அவள் கண்ட போது, ”நீர் தேவனுடைய மனிதன் என்று. இதன் மூலம் அறிந்து கொண்டேன் என்றாள். அவள் அதை அறிந்து கொண்டாள். இன்று தேசங்கள் அன்று செய்தது போல் இதைப் பார்த்து நகைக்கும். அவர்கள் அதை விசுவாசிக்க மாட்டார்கள். ஆனால் அந்த ஸ்திரீயோ வித்தியாசமாக அறிந்திருந்தாள். அது அங்கு அடையாளமாக இருந்தது. மரித்துப்போன அவளுடைய மகனை மீண்டும் உயிரோடெழுப்பினதற்கு அவன் அடையாளமாயிருந்தான். தீர்க்கதரிசிகள் எப்பொழுதுமே தேவனுடைய அடையாளங்களாயிருந்தனர். 61அதன் பிறகு எலியா பலப்பரீட்சைக்கு அழைத்து, “தேவன் தெய்வமானால், அவரைச் சேவியுங்கள். பாகால் தெய்வமானால், அவனைச் சேவியுங்கள்...'' என்றான். இந்த நாள் எலியாவுக்கு ஒரு அற்புதமான நாளாய் இருக்குமல்லவா? அரசியல் தெய்வமானால், அதைச் சேவியுங்கள்! நமக்கு அரசியலில் என்ன உள்ளது? நாம் என்ன செய்துவிட்டோம்? நமக்கு ஊழலைத் தவிர வேறெதுவுமில்லை. நமக்கு ஒன்றுமேயில்லை. நம்முடன் நட்புறவு கொண்டிருந்த நாடுகள் ஏறக்குறைய அனைத்தையும் நாம் இழந்துவிட்டோம். சென்ற வாரத்தில் மேலும் இரண்டு, மூன்று நாடுகளை நாம் கம்யூனிஸத்துக்கு இழந்துவிட்டோம். நாம் ஜனங்களின் மேல் வரி செலுத்தி அந்த வரிப்பணத்தை அந்த நாடுகளிலுள்ள ஜனங்களுக்கு உணவு கொடுக்க அனுப்புகிறோம். இந்த நாடுகள் வளர்ச்சியடைந்தவுடன், கம்யூனிஸத்துக்கு திரும்பிவிடுகின்றன. அது மாய்மாலம். அது உண்மை! 62நாம் கிறிஸ்தவர்களென்று அழைத்துக் கொள்கிறோம். நாம் கிறிஸ்தவர்களைப் போல் இருப்போம் - மற்றவர்களைப் போஷிக்காமலும் இவ்விதமான செயல்களில் ஈடுபடாமலும் இருப்போம். அதற்கும், இதற்கும் சம்பந்தமேயில்லை... நல்மனது கொண்ட எவனும் அதை செய்வான். அது மார்க்கம். அது இரட்சிப்பு அல்ல. அநேகர் மார்க்கத்தையும், இரட்சிப்பையும் குழப்பிக்கொள்கின்றனர். மார்க்கம் விதவைகனையும், ஏழைகளையும் போஷிக்கிறது. அது மார்க்கம். ஆனால் இரட்சிப்பு என்பது புதுபிறப்பு, அது மறுபடியும் பிறத்தல். அது வித்தியாசமானது. முகம்மதிய மார்க்கம் ஒரு மார்க்கம். அநேக மார்க்கங்கள் உள்ளன. 63கர்மேல் பர்வதத்தில் எலியா பலபரீட்சைக்கு அழைத்த அந்த நாளிலே, அவன் ஸ்தாபனங்களின் ஆலயத்தைச் சேர்ந்த ஆகாபின் ஆயிரக்கணக்கான ஆசாரியர்களை கர்மேல் பர்வதத்துக்கு வரும்படி அழைத்து, “இங்கு வாருங்கள்! இங்கு என்னைச் சந்தியுங்கள். நான் அந்த கூட்டம் முழுவதற்கும் எதிராக நிற்பேன்” என்றான். அவன் என்ன செய்தான்? அவன் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதைப் பெற்றிருந்தான். அவன் பயப்படவேயில்லை. அவன், ஒரு காளையை பலிபீடத்தில் கிடத்தி, பாகாலை நோக்கிக் கூப்பிடுங்கள். அக்கினியினால் உத்தரவு அருளும் தேவனே தேவன்“ என்றான். எனவே அவர்கள் காலையிலிருந்து மாலை உணவுக்குப் பிறகும் கூட பலிபீடத்தின் மேல் குதித்தனர். அவர்கள் தங்கள் உடல்களைக் கீறிக் கொண்டனர். கூச்சலிட்டனர், கதறினர். எலியா இங்கும் அங்கும் நடந்து, “இன்னும் கொஞ்சம் அதிகமாக கூச்சலிடுங்கள். ஒருவேளை அவன் மீன் பிடிக்கப் பயணம் சென்றிருப்பான், அல்லது வேறெதற்காவது சென்றிருப்பான்” என்றான். அவன் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதைப் பெற்றிருந்தான். அவன் திருப்தி கொண்டிருந்தான். அவனிடம் தேவனுடைய வார்த்தை இருந்தது. சகோதரனே, சகோதரியே, ஒரு மனிதனுக்கு தேவனுடைய வாக்குத்தத்தத்தைத் தவிர வேறென்ன வேண்டும்? தேவன் அதை செய்வதாக வாக்களித்திருந்தார். அவன் ஆபிரகாமைப் போல், தேவன் வாக்குத்தத்தம் பண்ணினதை நிறைவேற்ற வல்லவராயிருக்கிறார் என்று முழு நிச்சயமாய் நம்பினான். தேவன் அவ்வாறு உரைத்திருந்ததால், அவர் அதை செய்வாரென்று அவன் அறிந்திருந்தான். 64எனவே, அவன் பாகால் தீர்க்கதரிசிகளை வரும்படி அழைத்தான். அவர்கள் தங்கள் உடல்களைக் கீறிக் கொண்டு நாள் முழுவதும் அந்திப்பலி நேரம் வரைக்கும் கூச்சலிட்டு கதறினர். அதன் பிறகு எலியா... அவன் எப்படி செய்தான் என்பதைக் கவனியுங்கள். அவன் முதலாவதாக பன்னிரண்டு கற்களை உருட்டி ஒன்றாகச் சேர்த்தான். தேவன் பிரிந்திருக்கவில்லை. ஸ்தாபனங்கள் சபைகளைப் பிரிக்கின்றன, தேவன் அல்ல. ஒருவர், ''நீங்கள் கிறிஸ்தவரா?'' என்று கேட்டால், ''நான் பாப்டிஸ்டு'' என்கிறார். அவர் ஒரு பன்றி என்று சொல்வது போன்றது அது. “நான் மெதோடிஸ்டு.'' அது தேவனுக்கு மறுபடியும் பன்றியைப் போன்றது. 'நீங்கள் கிறிஸ்தவரா? கிறிஸ்தவராயிருக்க, நீங்கள் கிறிஸ்துவைப் போலிருந்து, தேவன் உங்களுக்குள் வாசம் செய்யும் கூடாரமாக, பெந்தெகொஸ்தே நாளில் விழுந்த பரிசுத்த ஆவியை உங்களுக்குள் பெற்றவர்களாக இருக்க வேண்டும். ஏதோ ஒரு வகையான உணர்ச்சியல்ல, உண்மையான பெந்தெகொஸ்தேவைக் குறிப்பிடுகிறேன். பாருங்கள்? உண்மை. “நான் பெந்தெகொஸ்தேகாரன் , நான் ஒருத்துவக்காரன், நான் திரித்துவக்காரன்”, “நான்... ஓ, என்னே! நீங்கள் வேறு ஏதோ ஒன்று என்று சொல்வது போன்றது அது. தேவனுக்கு அது ஒன்றுமில்லை. அது பிரிக்கிறது. அங்கு குருவானவர்களினிடையே அப்படித்தான் இருந்தது. ஆனால் எலியாவோ பன்னிரண்டு கற்களை ஒன்றாக உருட்டி, அவர்கள் எல்லார் மேலும் ஒரே தேவன் இருக்கிறார் என்பதைக் காண்பித்தான். அவன் அவைகளை ஒன்றாக உருட்டினான். 65அவைகளை ஒன்றாக சேர்த்த பிறகு அவன் ஒரு காளையைக் கொன்று பலிபீடத்தின் மேல் அடுக்கியிருந்த விறகு கட்டைகளின் மேல் கிடத்தினான். அவன், “இதில் போலியான செயல் ஒன்றுமில்லை என்று உறுதிகொள்ள, போய் பன்னிரண்டு குடம் தண்ணீர் கொண்டு வாருங்கள்” என்றான். அவன் விறகுக் கட்டைகளின் மேல் தண்ணீர் ஊற்றி, அது தண்ணீரில் ஊறும்படி செய்தான். ஓ? அல்லேலூயா! தேவன் தேவனாயிருக்கிறார் என்பதை அவன் காண்பிக்க விரும்பினான். ஏன்? ஏனெனில், அவன் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதைப் பெற்றிருந்தான். அவன் ஒரு தீர்க்கதரிசி. அவன் தேவனுடைய வார்த்தையை உடையவனாயிருந்தான். அந்த நாளிலே அவர்கள், நீங்கள் இயேசுவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுள்ளதற்காகவும், இன்னும் வெவ்வேறு காரியங்களுக்காகவும் உங்களை சபையைவிட்டுப் புறம்பாக்குவதாகக் கூறினால், அது மூடத்தனம்! அது கர்த்தர் உரைக்கிறதாவது. 66அன்றொரு இரவு ஒரு அருமையான நபர் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். அவர் என் தோளின் மேல் கை போட்டு, “சகோ. பிரான்ஹாமே, உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். நீங்கள் மாத்திரம் நீங்கள் போதிக்கும் சில காரியங்களைவிட்டு விடுவீர்களானால்...'' என்றார். நான், ''எதை?'' என்று கேட்டேன். அவர், ''ஞானஸ்நானத்தைக்'' குறித்த உங்கள் போதகத்தை. சிக்காகோவிலும் சுற்றுப் புறங்களிலுமுள்ள சபைகள் நீங்கள் வர வேண்டுமென்று மிகவும் ஆவல் கொண்டுள்ளன. ஆனால், நீங்கள் ஞானஸ்நானத்தை குறித்து பேசி வீடுவீர்களோ என்று அவர்கள் பயப்படுகின்றனர்'' என்றார்... நான், ''நிச்சயமாக அதைக் கூறுவேன். நான் நிச்சயம் கூறுவேன்“ என்றேன். “அவர்கள் அந்த ஒரு விஷயத்தில் மாத்திரம் உங்களுக்கு எதிராயிருப்பதாகக் கூறுகின்றனர்'' என்றார். நான், ''அப்படியானால் அவர்கள் எனக்கு எதிராயிருக்கவில்லை. அதைக் கூறினது நானல்ல, தேவன் அதைக் கூறினார். அது தவறென்று யாராகிலும் நிரூபிக்கும்படிக்கு சவால்விடுகிறேன்“ என்றேன். பாருங்கள்? அவர், “நல்லது. பாருங்கள், நீங்கள் எப்படியாயினும் இந்த விஷயத்தில் இணங்கி அவர்களுடன் ஐக்கியங்கொள்ள வேண்டும் என்றார்.'' ஆகாபைச் சேர்ந்தவர்களும் எலியா அதை தான் செய்ய வேண்டுமென்று நினைத்தனர். தேவன் ஒருக்காலும் ஒப்புரவாகமாட்டார். இல்லை ஐயா! அவர் ஒப்புரவாவதேயில்லை. அவர் கேட்டார். அவர், “சகோ. பிரான்ஹாமே, உங்களை ஒன்று கேட்க விரும்புகிறேன். கர்த்தருடைய தூதன்... நாங்கள் எல்லோரும் கர்த்தருடைய தூதனை விசுவாசிக்கிறோம். கர்த்தருடைய தூதன் உங்களிடம் அது உண்மையென்று சொன்னாரா? என்று கேட்டார். நான், அதைக் குறித்து கர்த்தருடைய தூதன் என்ன சொன்னாலும் எனக்குக் கவலையில்லை. அவர் கர்த்தருடைய தூதனானால் அதை நிச்சயம் ஆமோதிப்பார். அவர் அதற்கு முரணாக எதையாகிலும் கூறினால் அவர் கர்த்தருடைய தூதனாக இருக்க முடியாது. தூதன் என்ன கூறின போதிலும், “வானத்திலிருந்து வருகிற தூதன் வேறொரு சுவிசேஷத்தைப் பிரசங்கித்தால் அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன் என்று பவுல் கூறியுள்ளானே'' என்றேன். 67இங்கு தூதர்கள் மற்றவர்களைக் குறித்து.... சிலர் மாம்சப்பிரகாரமாக பெருமை கொண்டு தூதர்களைக் குறித்து ஏதோ ஒன்றைக் கூறுகின்றனர். ஜோசப் ஸ்மித், ப்ரகாம் யங், அட்வென்டிஸ்டுகளினிடையே காணப்படும் வெவ்வேறு கொள்கைக்காரர், தூதர்கள் கூறினதாக விதவிதமான காரியங்களைக் கூறுகின்றனர். ஆனால் அது தேவனுடைய வார்த்தைக்கு முரணாகவே இருந்து வந்துள்ளது. தேவன் தமது வார்த்தையை ஆதரிப்பார். அது அவருடைய வார்த்தை. நான் அவரிடம், “அது தேவனுடைய வார்த்தை!எனக்குத் தெரிந்த அனைத்தும் அவராலே கற்றுக் கொடுக்கப்பட்டது என்பது உறுதி. நான் எந்த வேதாகமப் பள்ளிக்கும் செல்லவில்லை. அது அவரிடத்திலிருந்து எனக்கு வருகிறது. அது முரணாக இருக்குமானால், அது முரணாக இருக்கும் பட்சத்தில், தூதன் கூறுவதை நான் விசுவாசிக்க மாட்டேன். ஏனெனில், அது தேவனுடைய வார்த்தையே முதன்மை ஸ்தானம் வகிக்க வேண்டும், மற்றவை அனைத்தும் பொய்” என்றேன். தேவனுடைய வார்த்தையில் நிலைத்திருங்கள். 68எனவே எலியா அங்கு சென்ற போது, அவன் விறகு கட்டைகளின் மேல் பன்னிரண்டு குடம் தண்ணீரை ஊற்றி, அவை தண்ணீரில் நன்றாக ஊறும்படி செய்தான். அவன் பரபரப்படையாமல் பலிபீடத்தை விட்டு இறங்கினான். ஏன்? தேவன் பொய் சொல்லமாட்டார். தேவன் அவனிடம் ஏற்கனவே கூறியிருந்தார். அவன், ஆபிரகாமின் தேவனே, ஈசாக்கின் தேவனே, இஸ்ரவேலின் தேவனே. நீரே தேவன் என்றும், நான் உம்முடைய ஊழியக்காரன் என்றும், உம்முடைய கட்டளையின்படி இதைச் செய்தேன் என்று, இந்த நாளில் எல்லோரும் அறிந்துகொள்ளட்டும். இது கர்த்தர் உரைக்கிறதாவது! நீர் எனக்குக் கட்டளையிட்டதால் இதைச் செய்தேன். இது உம்முடைய வார்த்தையின்படி உள்ளது. நீரே தேவன் என்று அறிந்துகொள்ளட்டும்“ என்றான். தேவனுடைய அக்கினி இறங்கி, பலியைப்பட்சித்து, தண்ணீரில் ஊறியிருந்த விறகுக் கட்டைகளை எரித்து, கற்பாறைகளையும், மற்றவைகளையும் எரித்துப்போட்டது. அப்பொழுது இஸ்ரவேலிலிருந்த ஏழாயிரம் பேர், ''தேவன் தேவனாயிருக்கிறார்'' என்றனர். 69எலியா - அந்த சிறிய, வயோதிப, மெலிந்த, தோல் சுருங்கின சரீரம், கையில் தடியைப் பிடித்துக் கொண்டு, ஒரு பக்கத்தில் எண்ணெய் கலசத்தை தொங்கவிட்டுக் கொண்டு, ஆட்டுத் தோல் துண்டை தன் மீது சுற்றிக் கொண்டு, செல்வதைக் காண எவ்வளவு அழகாயுள்ளது! இன்று அவன் இப்படி தெருவில் நடந்து சென்றிருந்தால், அவர்கள் அவனை சிறையில் அடைத்திருப்பார்கள். ஆனால், அதே சமயத்தில் அவர்கள் பெண்கள் குட்டை கால் சட்டை அணிந்து செல்வதை அனுமதிக்கின்றனர். ஆனால் இதையோ அவர்கள் நிச்சயம் அனுமதிக்கமாட்டார்கள் (பாருங்கள்?), யாராவது ஒருவர் இப்படி செல்வதை. எனவே... இதோ அவன் அங்கே மலையிலிருந்து இறங்கி வருகிறான். இந்த தடி... 70கர்மேல் பர்வதம் என்பது வனாந்தரத்தின் மத்தியில் ஒரு காலியான இடத்தில் காணப்படும் ஒரு சிறு குன்று அல்ல. அது ஒரு பெரியமலை. அது இந்த கோணத்தில் தொடர்ச்சியாக சென்று, உயர்ந்து காணப்பட்டு, கடலை நோக்கின வண்ணம் உள்ளது. எலியாவும், கேயாசியும் அதன் உச்சிவரைக்கும் ஓடிச் சென்றனர். எலியா முகங்குப்புற விழுந்து, அவனுடைய முதுகு மேற்கிலிருந்த சூரியனை நோக்கியிருந்தது. அவன் தேவனை நோக்கிக் கதறினான். மூன்று வருடம் ஆறு மாதங்களாக பனி கூட பெய்யவில்லை. அவன் கேயாசியிடம், “நீ போய் ஏதாகிலும் காண முடிகிறதா என்றுபார், சமுத்திரத்திலிருந்து மேகம் எழும்புகிறதா என்று பார்” என்றான். கேயாசி மலையின் மேல் நின்று கொண்டு, இந்த பக்கம் நோக்கி, “நான் ஒன்றையும் காணவில்லை'' என்றான். அவன் மலையிலேயே இருந்து கொண்டு, தேவனே, இந்த ஜனங்கள் மனந்திரும்பி உம்மிடம் திரும்பியிருந்தால்; இந்த மூடத்தனமான. அனைத்திலிருந்தும் விலகி உமது வார்த்தைக்குத் திரும்ப அவர்கள் ஆயத்தமாயிருந்தால், நீர் உம்முடைய வார்த்தைக்கு மறு உத்தரவு அருளும் தேவனாயிருப்பீர்“ என்றான். 71அதையே இன்று நான் கூற விரும்புகிறேன். இந்த ஸ்தாபனங்களை எல்லாம் உடைத்தெறியுங்கள். இந்த ஸ்தாபன வேறுபாடுகளை மறந்துவிடுங்கள். ஜனங்கள் தேவனுடைய வார்த்தைக்கு திரும்பட்டும் - வெட்டப்பட்ட அந்த கோட்டுக்கு (hewing line). அப்பொழுது நான்... அக்கினியினால் மறு உத்தரவு அருளும் தேவன் ஒருவர் இருக்கிறார் என்பதை உங்களுக்கு நிரூபிப்பேன். நான் ஜனங்களைக் கேட்டுக்கொள்வது என்னவென்றால்... தேவனை நோக்கிக் கூப்பிடுங்கள். தேவன் தாமே... ஒரு நபரைக் கேளுங்கள். ஜனங்கள் ஒரு தீர்க்கதரிசிக்காக தேவனை நோக்கிக் கூப்பிடுவார்களானால், தேவன் அவரை காட்சிக்கு அனுப்புவார். அப்படி செய்யும்படி தேசத்துக்கு சவால்விடுகிறேன். நீங்கள் முகங்குப்புற விழுந்து விடுவிக்கும் ஒருவரை அனுப்பும்படி. தேவனை நோக்கிக் கூப்பிட்டு என்ன நடக்கிறதென்று பாருங்கள். ஒரே ஒருமுறை அப்படி செய்து பாருங்கள். தேவன் மறு உத்தரவு அருளுவார். தேவன் எப்பொழுதுமே அதை செய்கிறார். 72எலியா முகங்குப்புற விழுந்து, தேவனே, இன்று அது நடக்கட்டும். இந்த ஜனங்கள் ஒரு காலத்தில் உமக்கு எதிராயிருந்தார்கள். அவர்கள் வெவ்வேறு ஸ்தாபனங்களில் பிரிந்திருந்தார்கள். ஆனால், நீர் தேவன் என்று இன்று நிரூபித்து விட்டீர். ஜனங்கள் பாகாலை அகற்றும் என்று கூறினர். நான் பாகாலின் தீர்க்கதரிசிகள் பதினாயிரம் பேரைக் கொன்றேன். கர்த்தாவே, அவர்கள் வழியிலிருந்து அகன்றுவிட்டனர். எல்லா விதமான தடைகளும், எங்களை பிரித்து வைத்திருந்த சிறு தடைகள், போய் விட்டன“ என்றான். மெதோடிஸ்டு பாப்டிஸ்டுடன் ஆராதிக்க பிரியப்படுவார். பாப்டிஸ்டு பெந்தெகொஸ்தே ஜனங்களுடன் ஆராதிக்க பிரியப்படுவார், உத்தம இருதயம் கொண்ட விசுவாசமுள்ள அந்த ஏழாயிரம் பேர். அவர்களால் அப்படி செய்ய முடியாது. அப்படி செய்தால் அவர்கள் தங்கள் சபைகளிலிருந்து துரத்தப்படுவார்கள். இருப்பினும், அவர்களில் சிலர் கவலை கொள்வதில்லை. அவர்கள் எப்படியும் வருகின்றனர். அது உண்மை. 73அவர்கள் அனைவரும் அந்ததப் பெண்ணத்தை உடைத்தெறிந்து விட்டு, “நாங்கள் கோட்பாடுகளையும், எங்கள் பிரமாணப் புத்தகத்திலுள்ளவைகளையும் மறந்துவிட்டு, கர்த்தருடைய வார்த்தைக்கு திரும்புகிறோம்'' என்று கூறுவார்களானால், அப்பொழுது என்ன நடக்கிறதென்று பாருங்கள். தேவன் அவர்கள் மத்தியில் ஒரு தீர்க்கதரிசியை எழும்பப் பண்ணுவார். அவர் நிச்சயம் அப்படி செய்வார். அவர்கள் ஏற்றுக்கொள்ள ஆயத்தமாயிருந்தால், தீர்க்கதரிசியை தேவன் அவர்களிடம் அனுப்புவார். முதலாவதாக அவர்கள் ஜெபிக்க வேண்டும். தேவன் அதற்காக காத்திருக்கிறார். ஜனங்களுக்கு அதில் ஒரு பங்கு இருக்க வேண்டும் என்று தேவன் விரும்புவது விசித்திரமல்லவா? இயேசு அறுப்புக்கு ஆயத்தமாயிருந்த பயிர்களைக் கண்டபோது, “அறுப்புமிகுதி, வேலையாட்களோ கொஞ்சம். நீங்கள் அறுப்புக்கு எஜமானை வேண்டிக் கொள்ளுங்கள் (அது அவர்), அறுப்புக்கு வேலையாட்களை அனுப்பும்படி என்னிடம் வேண்டிக்கொள்ளுங்கள்'' என்றார். (மத்; 9:37-38). நீங்கள் ஏற்க வேண்டிய ஒரு பாகமும் அதில் உண்டு. தேவன் தம்முடைய சபை அவரை நோக்கிக் கூப்பிடுவதற்காக காத்துக் கொண்டிருக்கிறார். அவர் எக்காலத்தும் அவ்வாறே செய்து வந்திருக்கிறார். தமது ஊழியக்காரனை செயல்படுத்த, ஜனங்கள் தம்மை நோக்கிக் கூப்பிட வேண்டுமென்று தேவன் இன்று காத்துக் கொண்டிருக்கிறார். ஜனங்கள் ஜெபம் பண்ணும் வரைக்கும் ஊழியக்காரன் செயல்பட முடியாது. இஸ்ரவேல் ஜனங்கள் முகங்குப்புற விழுந்து, தங்களை மீட்க ஒருவனை அனுப்ப வேண்டுமென்று விண்ணப்பம் பண்ணின வரைக்கும். அவர்களால் அற்புதங்களும், அடையாளங்களும் நடப்பதைக் காண முடியவில்லை. தேவன் அவர்களை மீட்பதற்கென ஒருவனை வைத்திருந்தார். இஸ்ரவேல் ஜனங்கள் ஜெபம் பண்ணும் வரைக்கும், தேவன் ஒரு தீர்க்கதரிசியை வனாந்தரத்தில் நாற்பது ஆண்டுகள் வைத்திருந்து அதற்காக காத்திருந்தார். அவர்கள் ஜெபம் பண்ணத் தொடங்கினவுடனே, தேவன் மீட்பனை அனுப்பினார். இன்றைக்கும் ஜனங்கள் ஒன்றுகூடி ஜெபம் செய்வார்களானால், தேவன் அதையே செய்வார். சரி! எலியா அந்த கள்ளத் தீர்க்கதரிசிகளுக்கும், ஆகாபுக்கும். அவன் தேவனுடைய ஊழியக்காரன் என்னும் அடையாளமாயிருந்தான். அவன் தேவனுடைய தீர்க்கதரிசி. அவன் விருப்பப்படி அவனால் வானத்தை திறக்கவும், முடவும் முடியும் என்பதன் மூலம் அவன் இஸ்ரவேலுக்கு அடையாளமாயிருந்தான். அவன் நிச்சயம் அப்படியிருந்தான். வானத்தை முடக்கூடிய ஒருவரை எனக்குக் காண்பியுங்கள் பார்க்கலாம். தேவனைத் தவிர வானங்களைத் திறக்கக் கூடிய ஒருவரை எனக்குக் காண்பியுங்கள் பார்க்கலாம். தேவனுடைய வார்த்தை - தேவனுடைய வார்த்தை தீர்க்கதரிசிகளிடத்தில் உள்ளது. 74மிகாயா யோசபாத்துக்கு அடையாளமாயிருந்தான். தேவன் உண்மையான தீர்க்கதரிசியை ஆயத்தமாய் வைத்திருக்கிறார் என்பதற்கு மிகாயா, யோசபாத்துக்கு அடையாளமாயிருந்தான். இப்பொழுது கவனியுங்கள்! ஆகாபுக்கு நானூறு தீர்க்கதரிசிகள் இருந்தனர். அவன் அந்த நானூறு தீர்க்கதரிசிகளையும் அழைத்து வந்தான். அவர்கள் அனைவரும் ஒரு மனதுடன் ஒரே காரியத்தைக் கூறினர். இருப்பினும், தேவனுடைய மனிதனாகிய யோசபாத்தின் இருதயத்தில், ஏதோ தவறுள்ளதென்று தோன்றினது. அவன், “நாம் விசாரித்து அறிய இன்னும் ஒருவன் இல்லையா? என்று கேட்டான். அங்கு நானூறுபேர் நின்று கொண்டிருந்த போதிலும்! ஆகாப், இவர்கள் எல்லோரும் தீர்க்கதரிசிகள், யேகோவாவின் தீர்க்கதரிசிகள். இவர்களிடையே மெதோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்கள், ஒருத்துவக்காரர், ஓ என்னே, என்னே, திரித்துவக்காரர் போன்ற வெவ்வேறு ஸ்தாபனத்தினர் உள்ளனர். அவர்கள் எல்லோரையும் இங்கு நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம். ''அவர்கள் ஒருமுகமாக, இது மிகப்பெரிய தேசம் என்கின்றனர். நாம் பயப்படத் தேவையில்லை'' என்றான். ஒரு சிறுவன் கல்லறையின் வழியாக நடந்து செல்லும்போது, அவனுடைய பயத்தை மறைக்க விசில் அடித்துக் கொண்டு செல்வதுபோல், யோசபாத், “இன்னும் ஒருவன் இல்லையா?என்றான். ஆகாப், ஓ, ஆமாம். இன்னும் ஒருவன் இருக்கிறான். ஆனால் அவனை நான் வெறுக்கிறேன். அவன் எப்பொழுதும் இந்த தேசத்தைக் குறித்து பொல்லாப்பையே தீர்க்கதரிசனம் உரைக்கிறான். நமக்கு கெடுதி உண்டாகப் போகிறது என்று அவன் எப்பொழுதும் கூறிக் கொண்டிருக்கிறான் என்றான். 75யோசபாத், ''அவன் கூறுவதைக் கேட்கப்பிரியப்படுகிறேன்“ என்றான். ஒ, ஆமாம்! அவன் யார்? ஒரு அடையாளம். எத்தனை ஸ்தாபனங்கள் இருந்தபோதிலும், வார்த்தையில் நிலைத்திருக்கும் ஒரு தீர்க்கதரிசியை தேவன் இன்னமும் வைத்திருக்கிறார். ஆகாபுக்கு அழிவு நிச்சயம் என்பதை யோசபாத் அறிந்திருந்தான். ஏனெனில், தேசங்களுக்கு அடையாளமாயிருந்த உண்மையான தீர்க்கதரிசியாகிய எலியா, “நாய்கள் உன் இரத்தத்தை நக்கும்” என்று உரைத்தான்... அது உண்மை. யேசபேலுக்கும் அவனுக்கும் அழிவு வந்து கொண்டிருந்தது என்பதை யோசபாத் அறிந்திருந்தான். அவன் அதை அறிந்திருந்தான். பாருங்கள்? 76மிகாயா - மிகாயா சென்னான்... அவர்கள் மிகாயாவிடம் வந்து, நான் உனக்கு சொல்லுகிறேன், அடுத்த சங்கத்தில் நீ சேர விரும்பினால், நீ செய்ய வேண்டியது என்னவென்று உனக்குச் சொல்லுகிறேன், மற்ற போதகர்கள் அனைவரும் உரைத்தது சரியென்று ஒத்துக்கொள். பார்? நீ ஆகாபிடம், ''யுத்தத்துக்குப் போங்கள்'' என்று சொல். நீ மற்ற போதகர்கள் கூறினதுடன் இணங்குவதாக சொல்லிவிடு. அப்பொழுது நாங்கள் என்ன செய்வோமென்றால், உன்னை நாங்கள்... அதை மாத்திரம் நீ செய்வாயானால், (பாருங்கள்?) நீ கூறும் சிலவற்றை விட்டுவிட்டு ஒப்புரவாகி விடுவாயானால், உன்னை எங்கள் ஸ்தாபனத்தில் சேர்த்துக்கொள்வோம். அவர்கள் சொல்வதையே நீயும் சொல்லி, அவர்களுடன் இணங்கிவிடும் என்றனர். ஹ-ஹா! உண்மையான தேவனுடைய தீர்க்கதரிசி தேவனுடைய வார்த்தையை விட்டு விலகுவதை உங்களால் நினைத்துப் பார்க்க முடிகிறதா? நீங்கள்... நல்லது, இந்த ஆசாமிகள், “நாங்கள் தரிசனம் கண்டோம்'' என்றனர். இந்த நானூறு தீர்க்கதரிசிகளும், எங்களுக்குத் தெரியும். நாங்கள் தீர்க்கதரிசிகள். எங்களுக்குத் தெரியும், ஏனெனில் நாங்கள் தீர்க்கதரிசிகள்” என்றனர். மிகாயா, “நீங்கள் தரிசனம் கண்டதைக் குறித்து நான் சந்தேகப்படவில்லை. அதைக் குறித்து நான் சிறிதளவும் சந்தேகப்படவில்லை. ஆனால், அது தேவனுடைய வார்த்தையுடன் ஒத்துப்போகவில்லை” என்றான். ஆமென்! அவன், நானும் கூட ஒரு தரிசனம் கண்டேன்“ என்றான். ஆமென்! ஓ, இரக்கம். அவன் அடையாளமாயிருந்தான். அவன் அடையாளமாயிருந்தான். அவன், ”இஸ்ரவேல் ஜனங்கள் மேய்ப்பனில்லாத ஆடுகளைப் போல மலைகளிலே சிதறப்பட்டதை நான் ஒரு தரிசனத்தில் கண்டேன்“ என்றான். அந்த பெரிய கண்காணிப்பாளன், பேராயர். அவனிடம் நடந்து வந்து அவனை வாயில் அடித்து, தேவனுடைய ஆவி எந்த வழியாய் என்னை விட்டு உன்னோடே பேசும்படி வந்தது?“ என்றான். அவன், “நீ சிறையிலிருக்கும் போது அதைக் காண்பாய்” என்றான். ஆகாப், “இவனைச் சிறைச்சாலையிலே வைத்து, இடுக்கத்தின் அப்பத்தையும் இடுக்கத்தின் தண்ணீரையும் இவனுக்குச் சாப்பிடக்கொடுங்கள். நான் சமாதானத்தோடே திரும்பி வரும்போது, இவனைக் கவனித்துக் கொள்வேன்'' என்றான். மிகாயா கர்த்தர் உரைக்கிறதாவது என்பதுடன் அங்கு நின்று கொண்டு, “நீர் திரும்பி வருவீரானால், தேவன் என்னைக் கொண்டு பேசினதில்லை'' என்றான். அது தான்! அவன் யார்? மற்ற யேகோவாவின் தீர்க்கதரிசிகளைப் போல் இவனும் ஒரு அடையாளமாயிருந்தான். தேவனுடைய தீர்க்கதரிசிகள் தேவனுடைய வார்த்தையில் நிலைத்திருப்பார்கள். 77நீங்கள் பிதா, குமாரன், பரிசுத்த ஆவிஎன்னும் பட்டங்களினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றுரைக்கும் ஒருதீர்க்கதரிசி உங்களுக்கு இருப்பானானால், அவன் கள்ளத் தீர்க்கதரிசி. முன்றுகடவுள்கள் உண்டு என்றுரைக்கும் ஒரு தீர்க்கதரிசி உங்கள் நடுவில் இருப்பானானால்,அவன் கள்ளத் தீர்க்கதரிசி. அதை ஆதரிக்கும் வேதவாக்கியம் எது வுமே கிடையாது. அதுஉண்மை! உண்மையான தேவ னுடைய தீர்க்கதரிசி அந்த வார்த்தையில் நிலைத்திருப் பான்.அவனுடைய தரிசனம் அந்த வார்த்தைக்கு முரணாக இருக்குமானால், அவன் தேவனிடத்திலிருந்துவந்த உண்மையான தீர்க்கதரிசி அல்ல. வேதத்தில் எவருமே பிதா, குமாரன், பரிசுத்தஆவி என்னும் பட்டங்களினால் ஞானஸ்நானம் பண்ணப்படவில்லை. 78சிறையிலிருந்த பவுலைப் பாருங்கள் - அந்த கோண மூக்கும், வழுக்கை தலையும் கொண்ட யூதன். அவன் இருபது ஆண்டுகள் ரோமச் சிறைச்சாலையில் சிறைவாசம் செய்தான். அவன் இந்த நிரூபங்களை எழுதினான். “சபையில் பெண்கள் அமைதியாயிருக்க வேண்டும். அவர்கள் பேச நான் உத்தரவு கொடுப்பதில்லை என்றுபவுல் கூறினதைக் குறித்து பெண் பிரசங்கி என்ன நினைத்திருப்பாள் என்று நினைக்கிறீர்கள்? அவர்கள் அவன் மேல் கோபப்பட்டிருப்பார்கள் என்று நினைக் கிறேன். பவுல், “இதை விட்டுவிடுங்கள், அதை விட்டுவிடுங்கள், அதை...'' என்று கூறக் கேட்ட பேராயர்கள் அவனைக் குறித்து என்ன நினைத்திருப்பார்கள்? சிறைவாசம் செய்யும் இவன் யார் இதையெல்லாம் கூற? என்று கேட்டிருப்பார்கள். ஆனால், பவுல் இயேசுவை சந்தித்திருந்தான். அவன் பேசுவது என்ன என்பதை அறிந்திருந்தான். ஆனால் பவுலின் மரணத்துக்குப் பிறகு, அவனைச் சார்ந்த அதே குழு பேராயர்களையும் உயர் பதவியிலுள்ளவர்களையும் அமைத்துக் கொண்டு, முடிவில் நிசாயா ஆலோசனை சங்கத்தின் போது கத்தோலிக்க சபை உருவாகி, தேவனுடைய வார்த்தையிலிருந்து விலகிச் சென்றது. அங்குதான் பிதா, குமாரன், பரிசுத்த ஆவி கொள்கை உண்டானது. அது தவறென்று நிரூபிக்க நான் எவருக்கும் எந்த இடத்திலுள்ளவர்களுக்கும், எந்த தேசத்திலுள்ளவர்களுக்கும் சவால்விடுகிறேன். 79கர்த்தர் உரைக்கிறதாவது, பிதா, குமாரன், பரிசுத்த ஆவி என்னும் பட்டப்பெயர்களை உபயோகித்து கொடுக்கப்படும் ஞானஸ்நானம் தவறாகும். கர்த்தர் உரைக்கிறதாவது, இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றிராத இங்குள்ளவர்களுக்கும், இந்த ஒலிநாடாவைக் கேட்கப் போகிறவர்களுக்கும், மறுபடியும் இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெறும்படி கட்டளையிடுகிறேன். அப்; 5:9ல், இல்லை 19:5ல் பவுல், “நீங்கள் விசுவாசிகளான பிறகு பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா? என்று கேட்டான் (அப்; 19:3). அவர்கள், ''பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை'' என்றார்கள். அவன் அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள்?“ என்றான் அவர்கள், ''நாங்கள் ஞானஸ்நானம் பெற்றோம்“ என்றனர். ஆனால் கிறிஸ்தவ ஞானஸ்நானம் அல்ல! பிதா, குமாரன், பரிசுத்த ஆவி கிறிஸ்தவ ஞானஸ்நானம் அல்ல! வேதாகமத்தில் எந்த கிறிஸ்தவனும் அந்த வகையில் ஞானஸ்நானம் பெறவில்லை, வேதாகமத்துக்குப் பிறகு அநேக நூற்றாண்டுகளாகவும் கூட. அது கத்தோலிக்க பிரமாணமேயன்றி கிறிஸ்தவ உபதேசம் அல்ல. வேதத்தில் எனக்குக் காண்பியுங்கள். அது ஒரு மோசடி. அது பிசாசின் கிரியை. அந்த வகையில் ஞானஸ்நானம் பெற்றவர்கள் அவ்வாறு உள்ளனர் என்று நான் கூறவில்லை. இதைக் குறித்து நன்றாக அறிந்திராத அநேகர் தேவனுக்கு இன்று அங்குள்ளனர். ஆனால், அந்த நேரம் வந்துவிட்டது. அன்று தேவன் கிரியை செய்தது போல, இன்றும் அவர் கிரியை செய்ய வேண்டுமென்று நாம் எதிர்பார்ப்போமானால், நாம் வார்த்தைக்கு திரும்ப வேண்டியவர்களாயிருக்கிறோம். 80என் தாயார் மரணத்தருவாயிலிருந்த போது அவர்கள் மரிக்கும் முன்பு - நான் அவர்களிடம், “அம்மா, நான் கிறிஸ்தவனாவதற்கு முன்பு, என் சிறு வயது முதற்க்கொண்டே நான் தேவனைத் தேடவும், நாடவும் தொடங்கினேன்.'' தரிசனங்களின் மூலம் தேவன் ஒருவர் இருக்கிறார் என்பதை நான் அறிந்து கொண்டேன். என் வாழ்க்கையில் நடந்தவை அனைத்தும் உங்களுக்குத் தெரியும். கத்தோலிக்க சபையானது, ''நாங்கள் தான் சபை. வேதம் என்ன கூறினாலும் பரவாயில்லை. அது உண்மையென்று நாங்கள் நம்புகிறோம். ஆனால் நாங்கள் தான் சபை. நாங்கள் கூறுவதெதுவோ, தேவன் அதை பரலோகத்தில் கட்டுகிறார்'' என்று கூறுவதாக அறிந்து கொண்டேன். அவர்கள் அப்படித்தான் செய்கிறார்கள். அது ஒரு ஸ்தாபனம். லூத்தரன்கள், கத்தோலிக்கர்கள் கூறுவது தவறு. ''நாங்கள் இந்தவிதமாக விசுவாசிக்கிறோம்” என்றனர். இவ்விதம் அப்படிப்பட்ட நூற்றுக்கணக்கான ஸ்தாபனங்கள் உள்ளன. நமக்கு எப்படி விசுவாசம் இருக்க முடியும்? அவர்களில் யார் கூறுவது உண்மை? என்றேன். 81ஒன்றே ஒன்று தான் உண்மையாயிருக்க முடியும். அப்பொழுது நான் அதை அறிந்திருக்கவில்லை. நான் தொடர்ந்து, அம்மா, நான் வேதாகமத்துக்கு சென்று, ஆதி அப்போஸ்தலர்கள் எந்த விதமான சபையைப் பெற்றிருந்தனர், அவர்கள் எவ்வாறு போதித்தனர். அவர்கள் என்ன செய்தனர் என்பதை கண்டு கொண்டேன். அவர்கள் செய்த விதமாகவே, வேதம் கூறின் விதமாகவே, நானும் செய்யத் தொடங்கினேன். அப்பொழுது அவர்களுக்குக் கிடைத்த அதே பலன் எனக்கும் கிடைத்தது“ என்றேன். ஆமென்! ”புட்டிங்கை'' (pudding) சாப்பிடுவதன் மூலமே அது உள்ளது என்பதை நிரூபிக்க முடியும். இந்த பழமொழியை உபயோகித்ததால் என்னை மன்னிக்கவும், அது உண்மை! அவர்களுக்குக் கிடைத்த அதே பலன் எனக்கும் கிடைத்தது. ஆம்! 82வெவ்வேறான தொளாயிரம் வழிகளில், இந்த வழியாக செல்வதும், அந்த வழியாக செல்வதுமானதன் பேரில் உங்கள் நம்பிக்கையை வைக்க முடியாது. வேதத்தில் உள்ளதில் ஒரு வார்த்தையும் கூட மாற்றுகிற எந்த மனிதனும். அதனோடு ஒரு வார்த்தையைக் கூட்டினால் அல்லது அதிலிருந்து ஒரு வார்த்தையை எடுத்துப்போட்டால், அவனுடைய பங்கு ஜீவ புஸ்தகத்திலிருந்து எடுத்துப் போடப்படும் என்று இயேசுவே கூறியுள்ளதாக நான் வேதத்தில் காண்கிறேன். அவனுடைய பெயர் அங்கிருக்கும், ஆனால் அது எடுக்கப்படும் என்பதை அது காண்பிக்கிறது. ஓ, நாம் இந்த வார்த்தைக்குத் திரும்பி வரவேண்டும். “வானமும், பூமியும் ஒழிந்துபோம், என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை. ஆம் ஐயா! எல்லா மனிதருடைய வார்த்தைகளும் பொய், என் வார்த்தைகளே உண்மை என்றார் இயேசு (ரோமர்; 3:4). ஆம். ஒ, என்னே! ஆம்! 83வார்த்தையில் நிலைத்திருந்து எக்காரணத்தைக் கொண்டும் ஒப்புரவாகாத ஒரு உண்மையான தீர்க்கதரிசியை தேவன் வைத்திருப்பார் என்று யோசபாத் அறிந்திருந்தான். இல்லை, ஐயா! அவன் அதில் நிலைத்திருக்கிறான். நானூறு பேர் தங்கள் தீர்க்கதரிசனங்களுடன் அவனுக்கு எதிராக நின்றனர். ஆனால் அவன் உரைத்தது அதே அடையாளத்தைக் கொண்ட தேவனுடைய வார்த்தையாகும். இன்றைக்கு நான் கூறுவது என்னவெனில், இன்று நமக்குத் தேவை, யார் என்ன கூறின போதிலும், ஸ்தாபனம் என்ன கூறின போதிலும் அதை பொருட்படுத்தாமல் தேவனுடைய வார்த்தையில் நிலைத்திருக்கக் கூடிய ஒரு மனிதன், ஒரு தீர்க்கதரிசி நமது நடுவில் எழும்புவதே. 84மிகாயாவுக்கு எவ்வித ஒத்துழைப்பும் இருக்கவில்லை. மோசேக்கு எவ்வித ஒத்துழைப்பும் இருக்கவில்லை. நோவாவுக்கு எவ்வித ஒத்துழைப்பும் இருக்கவில்லை. அவர் கள் யாருக்குமே ஒத்துழைப்பு இருக்கவில்லை. எல்லோருமே அவர்களுக்கு விரோதமாயிருந்தனர். ஆனால், பொல்லாத நாட்களில் தேவன் நியாயத்தீர்ப்பை அனுப்புவதற்கு முன்பு அவர்கள் அடையாளமாக இருக்கின்றனர். தேவன் தமது வார்த்தையை காக்கிறார், தமது ஜனங்கள் அவருடைய வார்த்தையைக் கைக்கொள்ள வேண்டுமென்று விரும்புகிறார். கர்த்தருக்கு ஸ்தோத்திரம்! இப்பொழுது முடிக்கப் போகும் நேரத்தில், சில நிமிடங்கள். கூர்ந்து கவனியுங்கள். 85தேவனால் அனுப்பப்பட்ட ஒரு மனிதன் இருந்தான், அவன் பெயர் யோவான். அவன் தீர்க்கதரிசி என்னும் அடையாளமாக இருந்தான். இயேசு தம்மை வெளிப்படுத்துவதற்கென பூமிக்கு வருவதற்கு முன்பு, தமக்கு முன்னே ஒரு தீர்க்கதரிசியை அனுப்பினார். அவர் அப்படி செய்தாரா? அவர் ஒரு தீர்க்கதரிசியை அனுப்பினார். அவன் பழைய ஏற்பாட்டின் எலியாவின் வல்லமையைக் கொண்டவனாய் வருவான் என்று தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டிருந்தது. இயேசு வரப்போகிறார். மேசியா வரப்போகிறார் என்பதற்கு அவன் தீர்க்கதரிசி என்னும் அடையாளமாக இருக்க வேண்டியவனாயிருந்தான். 86யோவான் வனாந்தரத்திலிருந்து புறப்பட்டு வந்தபோது, மேசியா வந்து கொண்டிருக்கிறார் என்பதற்கு அவன் அடையாளமாயிருந்தான். யோவான் தோன்றின போது, இஸ்ரவேல் ஜனங்கள் தங்கள் தீர்க்கதரிசியின் மூலமாக அறிந்திருக்க வேண்டும். அங்கு தான் அவர்கள் அதை இழந்து போகின்றனர். அவர்கள் தங்கள் தீர்க்கதரிசிகளை விசுவாசிப்பதில்லை. அவர்கள் விசுவாசிப்பதில்லை... பெந்தெகொஸ்தே நாளில் பேதுரு கூறினது சரியென்று நாங்கள் விசுவாசிக்க மாட்டோம். அவர்கள் சரியென்று அதை விசுவாசிப்பதில்லை. பேதுரு கூறினதையே பவுல் கூறின போதிலும் அவர்கள் பவுல் கூறினதையும் விசுவாசிப்பதில்லை. பவுல், வானத்திலிருந்து வருகிற தூதன் வேறு வார்த்தையைப் பிரசங்கித்தால், அவன் சபிக்கப்பட்டவனாயிருக்கக்கடவன் என்றான். அவர்கள் அதை விசுவாசிப்பதில்லை! பாருங்கள்? அவர்கள் அதை விசுவாசிப்பதில்லை! அவர்கள் தங்கள் தீர்க்கதரிசிகளை விசுவாசிக்கவில்லை. அவர்கள் தீர்க்கதரிசிகளை அறிந்திருந்தார்களானால், “கர்த்தருக்கு வழியை ஆயத்தம் பண்ணுங்கள் என்று வனாந்தரத்திலே ஒரு சத்தம் உண்டாயிருக்கும்” (ஏசாயா;40:3,5) என்று ஏசாயா உரைத்திருந்ததை அறிந்திருப்பார்கள். அவர்கள் அதை அறிந்திருக்க வேண்டும். அவன் ஒரு தீர்க்கதரிசி. அவன் தீர்க்கதரிசிகளுக்குள் பிரபுவாகத் திகழந்தான். அவன் அவர்களிடம் உரைத்தான். ஆனால் அவர்களோ அதை விசுவாசிக்கவில்லை. இல்லை, இல்லை! அவன், “மேசியா வரப்போகிறார் என்று முன்னுரைத்தான்.'' 87இந்த மனிதன் தேவனால் அனுப்பப்பட்டவனாயிருந்தான். ஓ சகோதரனே, அவனை பெரிய கூட்டம் பின்பற்றவில்லை. தேவன் எலியாவுக்குச் செய்தது போல், இவனையும் ஒரு சிறு கூட்டம் ஜனங்கள் பின்பற்றும்படி செய்தார். தேவனே அந்த கூட்டத்தை அவனுக்கு அருளினார். அவன் அதை எந்த அரசியல் ஸ்தாபனத்திலிருந்தும் பெற்றுக்கொள்ளவில்லை. அவன் வார்த்தையைப் பிரசங்கித்தான், தேவனுடைய வார்த்தையில் நிலைத்திருந்தான். தேவன் அவனுக்கு ஒரு சிறு மந்தையை அருளினார். அவ்வாறே எலியாவும், தேவனுடைய வார்த்தையில் நிலைத்திருந்தான், தேவன் அவனுக்கு ஒரு சிறு மந்தையை அருளினார். இந்த மனிதனுக்கு ஒத்துழைப்பு எதுவுமில்லை. அவனை யாரும் பின்பற்றவில்லை, எந்த ஒத்துழைப்பும் இல்லை. அவன் எந்த ஸ்தாபனத்தையும் சேர்ந்திருக்கவில்லை. அவன் எதையும் கேட்கவில்லை, எதற்கும் பயப்படவில்லை. யோவான் அப்படிப்பட்டவனாயிருந்தான். ஏன்? அவன் தேவனால் அனுப்பப்பட்ட மனிதனாயிருந்தான். ஆகையால் தான், அவனால் நிற்க முடிந்தது. மேசியா வரப்போகிறார் என்று ஜனங்களுக்கு நிரூபித்த எலியாவாக அவன் இருந்தான். அவன், ''கர்த்தருக்கு வழியைச் செவ்வை பண்ணுங்கள்'' என்று. ஏசாயா தீர்க்கதரிசி சொன்னபடியே நான் வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன்“ என்றான். 88அங்கு பரிசேயர்களும், சதுசேயர்களும் நின்றுகொண்டு அவர்களுடைய அங்கிகளைக் குறித்து வாக்குவாதம் செய்தனர். அவர்கள் இவ்விதம் வாக்குவாதமும், வீண் சந்தடியும் செய்து கொண்டிருந்த வேளையில், மேசியா அவர்கள் நடுவில் நடந்து வந்தார். யோவான், “இதோ அவர்” என்றான்... அல்லேலூயா! அவனைக் கவனியுங்கள்! அவன் அவரை இன்னும் அறிமுகப்படுத்தவில்லை. அவர் இங்கிருக்கிறார். அவர் இப்பொழுது உங்கள் நடுவிலே நிற்கிறார்'' என்று மாத்திரம் கூறினான். அந்த நேரத்தில் வானம் முழங்கினது. இயேசு தண்ணீருக்குள் நடந்து வந்தார். தேவ ஆவியானவர் புறாவைப் போல் இறங்கி வந்து. ''இவர் என்னுடைய நேசக்குமாரன், இவரில் வாசமாயிருக்கப் பிரியமாயிருக்கிறேன்'' என்று வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானதாக யோவான் சாட்சியாக அறிவித்தான். ஓ, என்னே, என்னே! யோவான், அவர் பெருகவும் நான் சிறுகவும் வேண்டும் என்றான் (யோவான்;3:30). ஓ, என்ன ஒரு தீர்க்கதரிசி! இஸ்ரவேலுக்கு ஒரு அடையாளம்! ஆம், ஐயா! 89அவன் தகப்பன் ஒரு ஆசாரியன். இருப்பினும் அவன் தேவனால் அனுப்பப்பட்ட மனிதனாயிருந்தான். ஓ, ஆமாம்! அவன் தகப்பன் சகரியா ஒரு ஆசாரியன். ஆனால் நீங்கள் கவனித்தீர்களா, அந்த தீர்க்கதரிசி அவர்களுடைய ஸ்தாபனங்களுடன் சம்பந்தம் கொள்ள தேவன் அனுமதிக்கவில்லை. அவனுடைய தகப்பன் அவனை வேதசாஸ்திரப் பள்ளிக்குக் கொண்டு சென்று. இன்னின்ன மகத்தான ஸ்தாபனத்தில் அவனைப் பெரிய போதகராக்கி, அவன் பெறக்கூடாத பயிற்சியை அவனுக்குத் தந்திருக்கக் கூடும். ஆனால் தேவனோ, அவனுடைய ஆத்துமா கறைபட அனுமதிக்கவில்லை. உங்களுக்கு விளங்குகிறதா? அவன் மற்ற ஸ்தாபனங்களுடன் கலந்துக்கொள்ள அவர் அனுமதிக்கவில்லை. அவன் எந்த வகுப்பினரையும் சேர்ந்திருக்கவில்லை. பரிசேயர், சதுசேயர், ஏரோதியர், எந்த வகுப்பையும் தேவன் அதை அனுமதிக்கவேயில்லை. 90அவனுடைய பிறப்பு வினோதமானது. அவன் வினோதமான பிள்ளையாக இருந்தான். அவன் ஒரு தீர்க்கதரிசி. அவனுடைய தகப்பன் ஒரு ஆசாரியன். ஆனால் தேவனோ, அவன் மாயமாலமுள்ள பரிசேய மார்க்கத்துடன் கலந்துகொள்ள அனுமதிக்கவில்லை. அவர் என்ன செய்தார்? அவனை வனாந்தரத்துக்குக் கொண்டு சென்று அங்கு பயிற்சி அளித்தார். என்ன ஒரு பயிற்சி! ஆமென்! அவர் அவனுக்கு அனுபவத்தின் மூலம் பயிற்சி அளித்தார். அதுவே சிறந்தது. தேவனை அறிந்து... அவன் வெளியே வந்தபோது, அவனுடைய ஊழியம் என்னவென்று அவன் திட்டவட்டமாக அறிந்திருந்தான். தேவன் அந்த ஊழியத்தை உறுதிப்படுத்தினார். அவர் எங்கு அதை உறுதிப்படுத்தினார்? நதிக்கரையில் நீங்கள் இரண்டும் - இரண்டும், நான்கு என்று கூற முடிந்தால்... நதிக்கரையில் அவன், “கர்த்தருக்கு வழியை ஆயத்தம் பண்ணுங்கள். அவருடைய பாதைகளைச் செவ்வைப் பண்ணுங்கள், என்று வனாந்தரத்திலே கூப்பிடுகிறவனுடைய சத்தமாயிருக்கிறேன்” என்றான். 91யோவான் தேவனால் அனுப்பப்பட்ட மனிதனாயிருந்தான். அவன் இந்த காரியங்களினால் கறைபட தேவன் அனுமதிக்கவில்லை. அவன் தேவனால் வனாந்தரத்தில் பயிற்சி அளிக்கப்பட்டான். அவர் அவனுக்கு பள்ளிகளில் வேதசாஸ்திரம் கற்பித்து அப்படிப்பட்ட பயிற்சி அளிக்கவில்லை. அவர் அவ்வாறு செய்திருந்தால், இன்றைக்கு அவர்கள் பலவிதமான போதகங்களைக் கற்று பள்ளிகளை விட்டு வெளிவருவது போல அவனும் வெளி வந்திருப்பான் - பலவிதமான பள்ளிகள். பிரஸ்பிடேரியன், பாப்டிஸ்டு, மெதோடிஸ்டு பள்ளிகள் மாத்திரமல்ல, பெந்தெகொஸ்தே பள்ளிகளும் கூட அவை மற்ற வேதசாஸ்திரப் பள்ளிகளைப் போலவே மோசமாக விளங்குகின்றன. 92அவனுடைய வருகை.... ஏசாயாவிலிருந்த ஆவி அதை முன்னுரைத்தது. யோவானின் வருகை ஏசாயா;40:3ல் முன்னுரைக்கப்பட்டது. நான் என் தூதனை எனக்கு முன்பாக அனுப்புவேன். அவன் வழியை ஆயத்தம் பண்ணுவான்... அது மல்கியா; 3... அவர் தமது தூதனை அவருக்கு முன்பாக அனுப்புவாரென்று மல்கியா;3 உரைக்கிறது. அந்த தீர்க்கதரிசி - அந்த கடைசி தீர்க்கதரிசி - அவனைக் குறித்து முன்னுரைத்தான். கடைசி காரியம் அவனைக் குறித்து பேசினது. ஞாபகம் கொள்ளுங்கள். மேசியா வெளிப்படும் முன்பு, எலியா இஸ்ரவேல் புத்திரரிடம் வருவான் என்று பழைய ஏற்பாட்டின் கடைசி புத்தகம் முன்னுரைக்கிறது. 93நீங்கள் ஆயத்தமாயிருக்கிறீர்களா? வேதாகமத்தின் கடைசி புத்தகமாகிய வெளிப்படுத்தின விசேஷம். அவன் கடைசி நாட்களில் புறஜாதி சபைக்கு திரும்ப வருவதைக் குறித்து நமக்குக் காண்பிக்கிறது - ஒரு அடையாளம். அவர்கள் எவ்வளவாக அதை காணத் தவறுகின்றனர். கர்த்தருடைய பெரிதான இரண்டாம் வருகைக்கு முன்பு அவன் மறுபடியும் வருவான் என்று தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டுள்ளது. அவன் கடைசி நாட்களில் இங்கிருப்பான் என்று மல்கியா; 4ம் அதிகாரமும், வெளிப்படுத்தல்; 3ம் அதிகாரமும் நமக்கு உரைக்கின்றன. அவன் தேவன் தனக்கு கொடுத்த அந்த சிறுமந்தைக்காக வாயிலில் நிற்பான். அவன் கடைசி நாட்களில் வருவான். தேவன் அவ்வாறு கூறியுள்ளார். புறஜாதி தேசத்துக்கு இனி காலம் செல்லாது என்பதற்கு அவன் அடையாளமாயிருப்பான். 94ஞாபகம் கொள்ளுங்கள். அவன் காட்சியில் தோன்றும் போது, காலம் சமீபமாயிருக்கும். அவனை அனுப்ப நாம் தேவனிடத்தில் ஜெபிப்போம். காலம் சமீபமாயுள்ளது! யோவானின் ஊழியம் முடிவடைந்தவுடன், மேசியா தம்மை வெளிப்படுத்தினார். அவ்வாறே கடைசி நாட்களில் வரவிருக்கும் இந்த மகத்தானவன் தன் ஊழியத்தை முடித்தவுடன், மேசியா தம்மைக் காண்பிப்பார். அது அப்படித்தான் இருக்கும். காலம் சமீபித்துவிட்டது. எனவே நாம் ஜெபிப்போம். நாம் ஜெபிக்கத் தொடங்குவது நல்லது. 95இக்காலத்திற்கென தேவனால் அளிக்கப்பட்ட அடையாளம் அவர் யாரென்பதை நிரூபிக்கும். எல்லோரும் அதை அறிவார்கள். தேவன் அதை உறுதிபடுத்துவார். இதற்கு முன்பு நடக்காத விதத்தில் அவன் அடையாளங்களையும், அற்புதங்களையும் காண்பிப்பான். நான் அசைப்பதையும், குலுக்குவதையும், அந்நியபாஷை பேசுவதையும் குறிப்பிடவில்லை. அவன் தேவனுடைய வார்த்தையை திரும்பக் கொண்டு வருவான். ஏன்? அவன் வருவான் என்று மல்கியா; 4ம் அதிகாரத்திலும், வெளிப்படுத்தல்; 3ம் அதிகாரத்திலும் தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டுள்ளது. எனவே, அவன் வருவான். அவன் வருவதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது. அவன் நிச்சயம் வருவான் (ஆமென்!). அவன் இங்கிருப்பான். ஆமென்! ஜனங்கள் இன்று முகங்குப்புற விழுந்து தேவனிடம் கதறட்டும். அப்பொழுது என்ன நடக்கிறதென்று பாருங்கள். அப்பொழுது அவன் வல்லமையுடன் புறப்பட்டு வருவதைக் காண்பீர்கள். ஆம், ஐயா! வேதத்தின்படி அவனுடைய அடையாளச் செய்தி திருப்புகிறதாய்... அவனுடைய செய்தி எப்படி... அவனை எப்படி நாம் அறிந்து கொள்வது? அவன் தான் சரியானவன் என்று நாம் எப்படி அறிவது? 96உங்களுக்குத் தெரியுமா, இஸ்ரவேல் ஜனங்கள் ஒருமுறை அப்படி கேட்டார்கள். அது உபாகமம்; 20ம் அதிகாரம், 30ம் வசனம் என்று நினைக்கிறேன். ''அவர்கள், அவன் தான் சரியானவன் என்று நாங்கள் அறிந்து கொள்வது எப்படி?'' நாங்கள் எப்படி அறிந்து கொள்வோம்? என்றனர். நாம் அவனை அறிந்து கொள்வோம் என்று தேவன் கூறியுள்ளார். அவன் என்ன செய்வான்? அவன் பிள்ளைகளுடைய இருதயங்களை ஆதியிலிருந்த மூல பெந்தெகொஸ்தே செய்திக்குத் திருப்புவான். ஓ, என்னே! அடையாளம், உண்மையான அடையாளம், அசட்டை பண்ணப்படுகிறது. அவர்கள் அதைக் காணத்தவறுகின்றனர். அவர்கள் எப்பொழுதுமே அவ்வாறு செய்கின்றனர். உண்மையான சபைக்கு, உண்மையான செய்திக்குத் திரும்புவோம். 97அவன் தைரியமாக, எவ்வித பயமுமின்றி, கர்த்தர் உரைக்கிறதாவது என்பதைக் கொண்டவனாய், ஸ்தாபனங்களுக்கு எதிராக தனியாக நிற்பான். அவன் எந்த ஸ்தாபனத்துடனும் ஒப்புரவாகமாட்டான். அவன் அவர்களுடைய செல்வாக்கை எக்காரணத்தைக் கொண்டும் தேடமாட்டான். அவன் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதுடன் வார்த்தையில் நேராக நிற்பான். தேவன் அவனுடைய ஊழியத்தை அடையாளங்களினாலும் அற்புதங்களினாலும் உறுதிபடுத்தி வார்த்தையை மகத்தான விதத்தில் வெளிப்படுத்தி, அதை ஜனங்களுக்கு அளிப்பார். எப்படிப்பட்ட ஒரு நாள் சமீபமாயுள்ளது! போல... பெந்தெகொஸ்தே நாளில் பேதுருவும், யோவானும் நின்றது போல அவன் நிற்பான். பெந்கொஸ்தே நாளில் அவர்கள் பரிசுத்த ஆவியினால் நிறைந்த பிறகு, அவர்கள் சனகரீம சங்கத்துக்கு முன்பாக நின்றனர். அவர்கள் மிகுந்த தைரியத்துடன் அங்கு நின்றனர். சனகரீம் சங்கத்தினர், “நீங்கள் இனி ஒருபோதும் இயேசுவின் நாமத்தில் போதிக்கக் கூடாதென்று உங்களுக்குக் கட்டளையிடுகிறோம்” என்றனர். அப்பொழுது பேதுருவும், யோவானும், “உங்களுக்குச் செவிகொடுக்கிறதா, அல்லது தேவனுக்குச் செவிகொடுக்கிறதா, எது நியாயமென்று நீங்களே நிதானித்துப் பாருங்கள் என்றனர். (அப்; 4:19). படிப்பறியாதவர்கள். பேதமையுள்ளவர்கள்! ஆமென்! தேவனுடைய... அவர்கள் தீர்க்கதரிசிகள். அவர்கள் தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்ட தீர்க்கதரிசிகள். அவர்கள் பரிசுத்த ஆவியின் அடையாளங்களாக விளங்கினர். அவர்கள் தீர்க்கதரிசிகள். அவர்கள் அறிந்திருந்தனர். 98அவர்கள் யோவானைப் போன்றவர்கள். அவர்கள் பெந்தெகொஸ்தே நாளில் மேலறைக்குச் சென்று ஒன்றைக் கண்டு கொண்டனர். அவர்கள் இன்றுள்ள பெரும்பாலான போதகரைப் போல், தற்புகழ்ச்சியுள்ளவர்களாய், தங்களுக்கு எவ்வளவு பெரிய ஸ்தாபனம் உள்ளதென்றும், அவர்களுடைய குழுக்களில் எவ்வளவு அங்கத்தினர் உள்ளனர் என்று பெருமையடித்துக் கொள்ளவில்லை. “ஓ, நாங்கள் ஒரு பெரிய ஸ்தாபனம். நாங்கள் பெரியமிஷனரி ஊழியம் செய்கிறோம். ”ஓ, இரக்கம்! ஒ, மற்றவர்களுக்குள்ளதைக் காட்டிலும் எங்களுக்குள்ள கூட்டம் மிகப்பெரிது. அது என்ன? அது அரசியல் செல்வாக்கு. அடுத்த இரண்டு, மூன்று நிமிடங்கள் நீங்கள் கூர்ந்து கவனிக்க விரும்புகிறேன். 99அரசியல் செல்வாக்கு நிச்சயமாக. சில நிமிடங்களுக்கு முன்பு நான் ஒன்றைக் கூறினேன். நான் என்ன பேசுகிறேன் என்று நீங்கள் அறிவீர்கள். தீர்க்கதரிசனமாக உரைக்கப்பட்ட ஒரு அடையாளம். அதை நான் தனியே விட்டுவிட்டேன், அதை உங்கள் மடியில் வைத்துவிட்டேன். பாருங்கள்? நல்லது. நீங்கள் மாத்திரம் அல்ல, இதை ஒலிநாடாவில் கேட்பவர்களே, அது உங்கள் மடியிலும் உள்ளது! உங்களுக்கு விருப்பமானதைச் செய்யுங்கள். நீங்கள் ஜெபம் செய்து தேவன் காட்சியில் அசைவதைக் காணுங்கள். அவர் தமது வார்த்தையை நிறை வேற்றுவதைக் கவனியுங்கள். அவர் காத்துக் கொண்டிருக்கிறார். 100அணுகுண்டுகளும்; பென்டகனில் ஜனங்கள் பயந்து போய், என்ன செய்வததென்று திகைத்துக் கொண்டிருக்கும் போது, வானத்தில் பறக்கும் தட்டுகள் போன்ற மர்மமான அடையாளங்கள் காணப்படும் போது, தேவன் முன்னறிவித்தயாவும் நிறைவேறிக் கொண்டிருக்கும் போது, எலியா காட்சியில் தோன்றும் நேரம் வந்துவிட்டது - அவன் எங்கோ இருக்கிறான். ஜனங்கள், அந்த சிறுமந்தை. தேவன் அவனுக்கு அளிக்கப்போகும் அந்த மீதியானவர்கள், தேவனை நோக்கிக் கூப்பிடட்டும். அப்பொழுது என்ன நடக்கிறதென்று கவனியுங்கள். தேசீய பலப்பரீட்சை உண்டாகும். அவர்கள் முன்பு கண்டிராத வகையில் வல்லமை உண்டாகும். ஆனால் தொல்லை என்னவெனில், இந்த முறை அவர்களுக்கு காலதாமதம் ஏற்பட்டிருக்கும். கதவுகள் அடைபட்டிருக்கும். எனவே, நாம் முடிவுகாலத்தில் இருக்கிறோம் என்பதை நினைவு கூருங்கள். ஜெபம் செய்யுங்கள்! 101இன்று நாம் ஊழியம் என்றழைப்பதைப் பாருங்கள். நமக்கு என்ன உள்ளது? (முடிக்கும் தருணத்தில் இதைக்கூற விரும்புகிறேன்), நமக்கு என்ன உள்ளது? நமக்கு ஒன்றுமேயில்லை. நமது மிகப்பெரியத் தலைவர்களில் சிலர், மிகப்பெரிய சுவிசேஷகர்கள்... நமது மிகப்பெரிய சுவிசேஷகர்களில் ஒருவர், “என் ஊழியத்தில் இரட்சிக்கப்பட்டவர்களில் பத்து சதவிகிதம் பேர் ஓராண்டில் நிலைத்திருந்தால், நான் நன்றியுள்ளவனாயிருப்பேன்'' என்றார். ஆனால், ஃபின்னியின் காலத்தில் தொண்ணூற்றேழு சதவிகிதம் பேர் நிலை நின்றனர். பவுலுக்கு நூறுடன் நூறு சேர்ந்து கொண்டே வந்தது - நூறோடு நூறு. ஒருவன் இரட்சிக்கப்பட்டால், சகோதரனே, அவன் பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்டு வேறொருவனுக்கு அதை அறிவித்து, அவன் போய் மற்றொருவனுக்கு அறிவித்து. இவன் சென்று இன்னும் ஒருவனுக்கு அதை அறிவித்து, இப்படியாக அது லட்சக்கணக்கில் சென்றது. ஏன்? அவர்கள் ஒன்றைப் பெற்றிருந்தனர். அவர்கள் வார்த்தையில் நிலை நின்றனர். 102இன்றைக்கு நாம் திரளான கூட்டத்தைக் குறித்து மாத்திரம் சிந்தித்துக் கொண்டிருக்கிறோம். அது என்ன? அரசியல் ஸ்தாபனம். ஒரு நகரத்துக்கு பெரிய சுவிசேஷகர் வருவாரானால், அதற்கு முன்பு வருவது யார்? ஒரு கூட்டம் மனிதர். அவர்கள்... மெதோடிஸ்டுகள், பாப்டிஸ்டுகள், பிரஸ்பிடேரியன்கள் எல்லோருமே சேர்ந்து கொண்டு குறைகூறி... அவருக்கு இதை தான் பிரசங்கிக்கத் தெரியும், அதை பிரசங்கிக்கத் தெரியாது. இதை பிரசங்கிக்கத் தெரியாது. ஆனால், அதை பிரசங்கிக்கத் தெரியும் என்கின்றனர். நமக்கு என்ன உள்ளது? அவர்கள் அங்கு நடந்து சென்று... ஸ்திரீகள், (நான் பெந்தெகொஸ்தேகாரரைக் குறித்துப் பேசுகிறேன்) ஸ்திரீகள் பீடத்துக்கு சென்று ஜனங்கள் பீடத்தண்டை வரும்படி கெஞ்சுகின்றனர்... நான் எப்பொழுதுமே பீட அழைப்புக்கு விரோதமானவன். இதை நான் வெளிப்படையாகக் கூறுவது நலம். எனக்கு அதில் நம்பிக்கையில்லை. அப்படிப்பட்ட ஒன்று வேதத்தில் இல்லை. தேவன் ஒரு மனிதனை அழைத்தாலொழிய, அவன் எப்படி வரமுடியும்? தேவன் அழைத்திருந்தால், அவனை நீங்கள் வராதபடி தடை செய்ய முடியாது. தேவன் அவனை அழைத்திருந்தால், நீங்கள் அழைக்க வேண்டிய அவசியமேயில்லை. பீட அழைப்பு என்பது மெதோடிஸ்டு கருத்து. அது உண்மை! பீட அழைப்பு... அவர்கள் ஜனங்களைப் பிடித்துக் கொண்டு, “ஜான், உன் தாயார் நீண்ட நாட்கள் முன்பு மரித்துப்போனார்கள், உனக்குத் தெரியும்...'' ''ஒ, பூ ஹு; ஆம் சகோதரனே, பூ ஹ.'' அது மனமாற்றம் அல்ல. 103சில நாட்களுக்கு முன்பு ஒரு இரவில் லூயிவில்லில் ஓரு சம்பவம் நடந்தது. இறந்து போன ஸ்திரீ சவப்பெட்டியில் வைக்கப்பட்டு, அது மேடையின் மேல் வைக்கப்பட்டு, ''நூற்றுக்கணக்கானவர்கள் பீடத்தண்டை வாருங்கள்'' என்று அழைப்பு விடுக்கப்பட்டது. சுவிசேஷம் என்பது பயமுறுத்தும் ஒன்றல்ல. அது அனுதாப உணர்ச்சியல்ல. அது உறுதி கொள்வதனால் ஏற்படும் மனமாற்றம். இந்தக் கூட்டங்களில் இந்தப் பெரிய சுவிசேஷகர்களை கவனிப்பீர்களானால், என்னுடைய தாழ்மையான, சிறு ஊழியத்திலும் கூட, நானும் கூட இதற்கு விலக்கு அல்ல... சில நேரங்களில் அங்கு சென்றதைக் குறித்து நான் வெட்கமடைந்ததுண்டு. அது உண்மை! நாம் என்ன செய்கிறோம்? அங்கு நின்று கொண்டு, பீட அழைப்புவிடுத்து, அவர்களை வருந்தி அழைக்கிறோம். சிறு பெண்கள் வாயில் 'மெல்லும் பசையை' (chewing gum) மென்று கொண்டே, “பார், பார், நான் போகிறேன்...'' என்று சொல்லி அங்கு வருகின்றனர் (சகோ. பிரான்ஹாம் பாவனை செய்து காட்டுகிறார் - ஆசி). இந்த ஸ்திரீகள் குட்டை தலைமயிருடனும் வர்ணம் தீட்டப்பட்ட முகங்களுடனும், பெந்தெகொஸ்தேகாரர் அங்கு வந்து, திரும்பிச் சென்று, அவர்கள் அந்நியபாஷை பேசினதாக கூறிக் கொண்டு, தங்கள் கூந்தலை வளரவிடாமல், அவர்கள் முன்பு செய்தவைகளையே செய்து வருகின்றனர். இது மனமாற்றம் என்றா கூறுகிறீர்கள்? இது தேவனைப் பரிகாசம் செய்வதாகும். தலைமயிரைக் கத்தரித்துக் கொள்வது பாவமும் அவமானமான செயலாகும் என்று வேதம் கூறுகிறது. தலைமயிரைக் கத்தரித்துக் கொண்டுள்ள பெண் எப்படி முகத்தில் வர்ணம் தீட்டிய பெண்ணைக் குறை கூறலாம்? இதை நீங்கள் கேட்பது நலம். கோடாரியானது மரங்களின் வேரருகே வைக்கப்பட வேண்டிய நேரம் வருகிறது. நல்ல கனி கொடாத மரமெல்லாம் வெட்டுண்டு தள்ளப்படும். விஷயம் என்ன? அது தவறு. ஏனெனில் நமது நவீன. போதகர்கள் என்று அழைக்கப்படுகிறவர்கள்... திரளான கூட்டம், பிரபலமானவர்கள், பெரிய ஸ்தாபனங்கள் ஆனால் ஆப்பிரிக்க பழங்குடி மகனுக்கு எகிப்திய இரவுகளைக் குறித்து தெரியாதது போல், இவர்கள் தேவனை அறியாமலிருக்கின்றனர். அது வரும்போது... அவர்கள் அங்கு சென்று... 104பெந்தெகொஸ்தே நாளில் மேலறைக்குச் சென்ற ஜனங்கள், “உன்னதத்திலிருந்து வரும் பெலனால் தரிப்பிக்கப்படும் வரைக்கும் நாங்கள் இங்கே இருக்க வேண்டுமென்று இயேசு கட்டளையிட்டார். சகோதரரே, நாம் ஏற்கனவே ஒன்பது நாட்கள் இங்கு இருந்துவிட்டோம். இதை விசுவாசத்தினால் ஏற்றுக்கொள்வோம். நாம் பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொண்டு விட்டோம். நாம் வெளியே செல்வோம்... நாம் இங்கு இருந்துவிட்டோம்.'' இயேசு கட்டளையிட்டதை நாம் நிறைவேற்றி விட்டோம் என்று கூறியிருந்தால், அவர்களுக்கு அந்த அனுபவமே இருந்திருக்காது. 105உங்களிடம் ஒன்றைக் கூற விரும்புகிறேன். இது ஒலிநாடாவில் பதிவு செய்யப்படுகிறதென்று அறிவேன். இருந்தாலும், இதை கூறுகிறேன். கவனியுங்கள், நான் ஒன்றைக் கூறப்போகிறேன். அது அவமானம், ஜனங்கள் முயற்சி செய்தல். பரிசுத்த ஆவி உடல் நடுக்கத்தை உண்டாக்குமென்று நான் நம்புவதில்லை. அந்நியபாஷை பேசுதல், அழுதல், கூச்சலிடுதல் பரிசுத்த ஆவியைப் பெற்றதன் அத்தாட்சி என்று நான் நம்புவதில்லை. இவையாவும் உணர்ச்சி வசப்படுவதனால் விளையும் செயல்கள். பரிசுத்த ஆவி இதை செய்ய முடியுமென்று நம்புகிறேன். ஆனால், பரிசுத்த ஆவி என்பது நமது சரீரமாகிய கூடாரத்தில் வாசம் செய்யும் தேவன். பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டதாக உரிமைகோரும் அநேகர் இதைக் குறித்து ஒன்றுமே அறிந்திருக்கவில்லை என்பது என் கருத்து. நீங்கள் தேவனைச் சந்தியுங்கள்! 106இன்றைய பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன், மெதோடிஸ்டு கூறுவது போல் அவர்கள் பெந்தெகொஸ்தே நாளில் கூறியிருந்தால்! நான், “நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டீர்களா?'' என்று கேட்டால், “ஓ, ஆமாம், அதை விசுவாசத்தினால் பெற்றுக் கொண்டோம். விசுவாசத்தினால், அல்ல! அதுவல்ல. அது உணர்ச்சி. நீங்கள் சூரிய அஸ்தமனத்தைக் காண விரும்பி, அங்கு நின்று கொண்டு, சூரியன் மறைவதைக் கண்டு, உணர்ச்சிவசப்பட்டு அழுது, உங்கள் கன்னங்களில் கண்ணீர் வடிகிறது. அது தேவன் அல்ல. அது உங்களுக்குள் இருக்கும் உணர்ச்சி. யாராகிலும் வியாதியாயிருந்து இறந்து போன செய்தியை கேட்கும்போது, நீங்கள் கூச்சலிட்டு கதறுகிறீர்கள். அது தேவன் அல்ல. அது மனித உணர்ச்சி. எப்படி தேவன்... 107பந்து விளையாட்டின் போது ஜனங்கள் மிகுந்த மகிழ்ச்சி கொண்டு, அவர்களுடைய உதடுகள் துடிப்பதை நான் கண்டிருக்கிறேன். எனவே, என்னிடம் அதை பற்றி கூற வேண்டாம். நமக்குத் தேவை எழுப்புதல், இரட்சிப்பு. பெந்தெகொஸ்தேகாரர் வந்து, ஜனங்களின் உணர்ச்சியை தூண்டிவிட்டு, அவர்கள் அந்நியபாஷை பேசினால், பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டதாக அவர்களிடம் கூறுகின்றனர். அவர்களில் சிலர் அதன் பிறகு எல்லாவிதமான வாழ்க்கையும் வாழ்கின்றனர். சகோதரனே, கவனி. பெந்தெகொஸ்தே நாளில் அப்படி இருக்கவில்லை. அவர்கள் அந்நியபாஷை பேசுவதன் பேரிலோ, வேறெதன் பேரிலோ சார்ந்திருக்கவில்லை. அவர்கள் ஒருமனப்பட்டவர்களாய் ஓரிடத்தில் கூடியிருந்தபோது, தேவன் உண்மையாகவே அவர்கள் நடுவில் இறங்கி வந்தார். அவர்கள் அக்கினி நாவுகள் ஒவ்வொருவருடைய தலையின் மேலும் தொங்குவதை கண்டனர். தேவன் அங்கிருந்தார்! அது விசுவாசத்தினால் பெற்றுக்கொள்ளுதலோ அல்லது ஒருவகையான உணர்ச்சியோ அல்ல. அவர்கள் பரிசுத்த ஆவியினால் நிறைந்து, வெளியே சென்று அந்நிய பாஷைகளில் பேசத் தொடங்கினர். ஆனால் முதலில் அவர்கள் தேவனைச் சந்தித்தனர். இன்றைக்குள்ள தொல்லை, அது தான். ஜனங்கள் தங்கள் உணர்ச்சியைத் தூண்டிவிட்டு, உணர்ச்சி வசப்படுகின்றனர். அது பரிசுத்த ஆவி அல்ல. பரிசுத்த ஆவி என்பது சரீரமாகிய கூடாரத்தில் வாசம் செய்யும் தேவன். அப்பொழுது உங்களுடைய வார்த்தைகள் அவருடைய வார்த்தையாயிருக்கும். நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், இன்று நமக்குத் தேவை என்னவெனில், அழைப்பே. ஜனங்கள் உள்ளே செல்கின்றனர்... ஸ்திரீகள் இப்படி உள்ளே சென்று, அந்நியபாஷை பேசி, வெளியே வருகின்றனர். அவர்களுடைய சபைகள் உள்ள இடங்களுக்கு நீங்கள் செல்வீர்களானால்... 108பில்லி இங்கு இருந்திருந்தால் நலமாயிருக்கும். அன்றொரு நாள் ஏதோ ஓரிடத்திலுள்ள ஒரு ஸ்திரீயிடமிருந்து எனக்கு கடிதம் வந்தது. அவள், “நான் ஒரு குறிப்பிட்ட பெரிய ஸ்தாபனத்தை சேர்ந்தவள் (பெந்தெகொஸ்தேகாரரின் மிகப்பெரிய ஸ்தாபனம், பெரிய திரித்துவ ஸ்தாபனம்)... சகோ. பிரான்ஹாமே, பெண்களாகிய நாங்கள் அனைவரும் எங்கள் தலைமயிரைக் கத்தரித்துக் கொள்கிறோம். எனக்கு நீண்டு கறுத்த கூந்தல் இருந்தது. அது எனக்குப் பிரியமாயிருந்தது. ஏனெனில், அது தேவனால் அளிக்கப்பட்டதென்று நம்பினேன். நான் அழகுபடுத்தும் பொருட்கள் எதையும் முன்பு உபயோகித்ததில்லை. ஆனால், எங்கள் சபையோ அது நாகரீகமற்றது என்கிறது. நான் தலைமயிரைச் சுருட்டி பின்னால் கொண்டை கட்டினால் அவர்கள், ''பார், உன் பின்னால் காற்று போன டயர் உள்ளது. உன் தலைக்குப் பின்னால் காற்றுப் போன டயரை தொங்கவிட்டுக் கொண்டிருக்கிறாய் என்று கேலி செய்கின்றனர். முடிவில் என் கணவர், ''நீயும் மற்றவர்களைப் போல், ஏன் உன் தலை மயிரைக் கத்தரித்துக் கொள்ளக் கூடாது? என்று சொல்லிவிட்டார் என்று எழுதியிருந்தாள். அவளுக்கு பதில் கடிதம் ஒன்று எழுதுகிறேன். அவள், ”உங்கள் ஒலிநாடாக்களில் ஒன்றைக் கேட்டேன். இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் கொடுக்கப்படும் ஞானஸ்நானம் தான் கிறிஸ்தவ ஞானஸ்நானமா? என்று கேட்டிருந்தாள். அவளுக்கு என்ன கிடைக்கப்போகிறதென்று உங்களுக்குத் தெரியும், இல்லையா? ஊ, ஊ, ஆம்! அவள், ''சகோ. பிரான்ஹாமே, எனக்குச் சொல்லுங்கள், நான் பசியாயிருக்கிறேன். நான் என்ன செய்தேன், என்று அறிய விரும்புகிறேன்“ என்றாள். 109நான், ''பின்வாங்கிப் போன உன் கணவன் மீதும், நீ கூட தொழுது கொண்டிருக்கிற தேவபக்தியற்ற அந்த குழுவின் மீதும் பெருத்த அவமானம். அந்த கூட்டத்தை விட்டு வெளியே வா!'' என்று சொல்லப் போகிறேன். உண்மை! தேவன் மாறமுடியாது. தேவன் ஒன்றைக் கூறினால், அந்த அர்த்தத்தில் தான் அதை கூறுகிறார். பின்வாங்கிப் போன எத்தனையோ போதகர்கள், ஒரு பெரிய ஸ்தாபனம் அல்லது குழுவைப் பெற எண்ணி, மற்றவர்களுடன் ஒத்துப்போனால், அதைக் குறித்து எனக்குக் கவலையில்லை. நமக்குத் தேவை உண்மையான இரட்சிப்பைப் பிரசங்கம் செய்கிறவர்களே. தங்கள் மனைவிகள் அவ்வாறு செய்ய அனுமதிக்கும் கணவன்மார்களின் கிறிஸ்தவ அனுபவத்தைக் குறித்து எனக்கு சிறிதளவும் நம்பிக்கையில்லை. உண்மை! மனந்திரும்புங்கள், அல்லது அழிந்து போங்கள்! ஓ, என்னே! 110அவர்கள் அப்படி உள்ளே சென்று, சபைகளை சேர்ந்து கொண்டு, பெந்தெகொஸ்தே சபைகளை வெளியே வந்து, சிறிதளவும் மாறாமல், முன்பிருந்தது போலவே இருக்கின்றனர். அவர்கள் சற்றேனும் மாறுவதில்லை. ஒ, இரக்கம்! அது என்ன? நவீன யேசபேல்கள். முகத்தில் வர்ணம் தீட்டிக் கொண்ட ஸ்திரீ வேதத்தில் ஒருத்தி மாத்திரமே. தேவன் அவளை நாய்கள் தின்னும்படி செய்தார். நவீன யேசபேல்கள் தங்கள் ஆகாபுகளின் கழுத்துப் பட்டையை பிடித்து இழுக்கின்றனர். தன் மனைவி குட்டைகால் சட்டை அணிந்து தெருக்களில் செல்ல அனுமதிக்கும் பெண்மைத்தனம் கொண்ட எந்த மனிதனும்; உடலோடு ஒட்டிக் கொள்வதைப் போல் அவ்வளவு இறுக்கமான உடைகளை அவள் அணிந்து செல்வாளானால் (நான் சிரிப்புக்காக இதைக் கூறவில்லை. நகைச் சுவைக்கு இது இடமில்லை. இது தேவனுடைய வார்த்தை! அது உண்மை!) அவளால் நடக்க முடியாதபடி அவ்வளவு இறுக்கமான உடை அணிந்து தெருவில் நடந்து சென்று, யாராகிலும் ஒருவன் அவளைக் கண்டு ஏதாவதொன்று சொன்னால், அவனிடம் நீங்கள் சண்டைக்குப் போகிறீர்கள். அவள் அப்படி செய்ய அனுமதித்ததற்காக, உங்களைக் கன்னத்தில் அறைய வேண்டும் (அது உண்மை!) நீ யாரென்பதை, அது காண்பிக்கிறது. அது முற்றிலும் உண்மை. 111நமக்குத் தேவை சுவிசேஷமே. தேவனே, வார்த்தைக்கு திரும்பியுள்ள ஒருவனை காட்சியில் எழும்பப்பண்ணு வீராக! தலைமயிர் கத்தரித்துள்ள எந்த ஸ்திரீயும் சபைக்கு வந்து ஜெபம் செய்வதும் கூட நாணயமான செயல் அல்ல என்று தேவன் கூறியுள்ளார். தலைமயிர் கத்தரித்துக் கொள்ளும், எந்த பெண்ணையும் விவாகரத்து செய்துவிட கணவனுக்கு பூரண உரிமையுண்டு. அவள் கனவீனமுள்ள பெண் என்று வேதம் கூறுகிறது. அவள் தன் கணவனுக்கு கனவீனமாயிருக்கிறாள். அவள் ஒருக்கால் அதை அறியாமலிருக்கலாம். குட்டை கால் சட்டை அணியும் எந்தப் பெண்ணும் கனவீனமுள்ளவள். ஒருக்கால் அவள் அறியாமலிருக்கலாம். பெண்ணே, உன்னை நான் புண்படுத்தவில்லை. உன்னை அக்கினி கடலிலிருந்து, நரகத்திலிருந்து காப்பாற்ற முயல்கிறேன். மனந்திரும்பு! “நல்லது,'' நான் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்கிறேன் எனலாம். அது உண்மையானால், இப்படி நடந்து கொள்வாயா? அதை செய்யக்கூடாது என்று உரைத்துள்ள தேவன் உனக்குள் வாசம் செய்தால், இப்படி நீ நடந்துகொள்ள முடியுமா? 112“நல்லது, நான் அந்நியபாஷை பேசினேன்” எனலாம். பிசாசுகள் அந்நியபாஷை பேசுவதை நான் கண்டிருக்கிறேன். ஆப்பிரிக்காவில் மண்டை ஓட்டிலுள்ள இரத்தத்தைக் குடித்து, அந்நியபாஷை பேசி பிசாசைக் கூப்பிடுவதை நான் கண்டிருக்கிறேன். பெண் மந்திரவாதிகளும், ஆண் மந்திரவாதிகளும் அந்நியபாஷை பேசி அதற்கு அர்த்தம் உரைப்பதை அவர்கள் முகாம்களில் நான் கண்டிருக்கிறேன். மேசையின் மீது வைக்கப்பட்ட எழுது கோல்கள் அந்நிய பாஷையில் எழுதி, ஒரு மனிதன் அங்கு வந்து அதற்கு அர்த்தம் உரைத்து, அது உண்மையாயிருப்பதை நான் கண்டிருக்கிறேன். எனவே, அந்நிய பாஷைகளைக் குறித்து நீங்கள் என்னிடம் கூற வேண்டாம். அது அதிகமாக நம்மிடையே காணப்படுகிறது. தேவன் அந்நிய பாஷையில் பேசுகிறார் என்பதை நான் விசுவாசிக்கிறேன். ஆனால், அதன் பேரில் சார்ந்திருக்க வேண்டாம்! “நான் மனுஷர் பாஷைகளையும், தூதர் பாஷைகளையும் பேசினாலும் பரிசுத்த ஆவி எனக்கிராவிட்டால், நான் ஒன்றுமில்லை. நான் மலைகளைப் பெயர்த்தாலும்...'' என்று பவுல் கூறியுள்ளான். 113அநேகர், ''ஒ, இவர் மிகப்பெரிய தேவனுடைய மனிதர். அவர் செய்யும் பெரிய அற்புதங்களை நீங்கள் காண வேண்டும்'' என்கின்றனர். ஏன், பிசாசுகள் சுகப்படுத்துகின்றன, பிசாசுகள் சென்று அப்படிப்பட்ட அற்புதங்களைச் செய்கின்றன. பெண் மந்திரவாதிகள் அப்படி செய்கிறார்கள் என்று எனக்குத் தெரியும். அவள் தனக்கருகே ஒரு துண்டை விரிக்கிறாள். அவர்கள் அதில் காசு போடுகின்றனர். அவள் தலையின் பின்பாகத்திலிருந்து ஒரு முடியை எடுத்து, இரத்தத்தில் தோய்த்து அதை எரிகிறாள்... அந்த ஜனங்கள் உத்தமமானவர்கள் அதை விசுவாசிக்கின்றனர். அது அந்த மந்திரவாதியல்ல. ஜனங்கள் மந்திரவாதியின் மூலம் தேவனை அணுகுவதாக விசுவாசிக்கின்றனர். 114அந்நாளில் அநேகர் என்னிடம் வந்து, ''நான் பெரிய சுகமளிக்கும் கூட்டங்களை நடத்தினேன் என்று சொல்வார்கள்“ என்று இயேசு கூறவில்லையா? அதுவல்ல அடையாளம். நாம் முடிவில் இருக்கிறோம் என்பதற்கு அது ஒரு அடையாளம். மத்தேயு; 24ம் அதிகாரம், 24ம் வசனத்தில், 24:24ல் இயேசு அவர், “கடைசி நாட்களில் கள்ளத்தீர்க்கதரிசிகள் எழும்பி, கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்கதாகப் பெரிய அடையாளங்களையும், அற்புதங்களையும் செய்வார்கள்” என்று கூறவில்லையா? ஆனால், தெரிந்து கொள்ளப்பட்டவர்களோ வார்த்தையில் நின்று கொண்டிருக்கிறார்கள்! உண்மையான அடையாளம் எதுவென்று அவர்களுக்குத் தெரியும். 115தேவனுடைய விசுவாசத்தை மறுதலித்து, அப்படிப்பட்ட காரியங்களைச் செய்யும் ஒருவன், தான் கர்த்தரிடத்திலிருந்து வந்த தீர்க்கதரிசி என்று எப்படி கூற முடியும்? எப்படி ஒரு மனிதன்... அவன் ஒருக்கால் ஆகாப், யோசபாத் காலத்திலிருந்த மிகாயா எதிர்த்து நின்ற தீர்க்கதரிசிகளில் ஒருவனைப் போல் இருக்கக்கூடும். ஆனால், வார்த்தையில் நின்று கொண்டிருந்த ஒருவனை அவர்கள் பெற்றிருந்தனர். எலியா... ஆகாப் தன் முடிவை அடைவான் என்பதாக கர்த்தருடைய வார்த்தை எழுதி வைக்கப்பட்டிருந்தது. மிகாயா கண்ட தரிசனம் அதனுடன் ஒத்துப்போனது. தன்னை ஆவிக்குரியவன் அல்லது தீர்க்கதரிசி என்று எண்ணிக்கொள்ளும். எந்த மனிதனும் இதிலுள்ள ஒவ்வொரு வார்த்தையும் உண்மையென்று ஒப்புக்கொள்கிறான். அவன் எப்படி திரித்துவக்காரனாய் இருக்க முடியும்? அவன், பிதா, குமாரன், பரிசுத்த ஆவியின் நாமத்தில் ஞானஸ்நானம் கொடுத்து, அதே சமயத்தில் ஆவியின் அபிஷேகம் பெற்றுள்ளதாக எப்படி கூறிக்கொள்ள முடியும்? அவன் ஆவியின் அபிஷேகம் பெற்றவனாயிருந்தால், ஜனங்களுக்கு எப்படி அந்த தவறான காரியத்தை போதிக்க முடியும்? முடியவே, முடியாது. அது கூடாத காரியம். அது எல்லோராலும் விரும்பப்படத்தக்க ஒன்றல்ல என்பதை உணருகிறேன். நாம் மக்களின் நன் மதிப்பைப்பெற விழைவதில்லை. நாம் உத்தமமாயிருக்க விரும்புகிறோம். 116இப்பொழுது, யேசபேலும் ஆகாபும்... ஆம், ஐயா! ஏன்? அவர்கள் ஏன் அப்படி செய்கின்றனர்? ஸ்திரீகள் ஏன் தலைமயிரைக் கத்தரித்துக் கொண்டும், அழகுபடுத்தும் பொருட்களை உபயோகித்தும், ஆண்களுக்கு முன்னால், குட்டை கால் சட்டை அணிந்தும் செல்ல வேண்டும்? அவர்களுடைய கணவர்களும் அதற்கு சம்மதிக்கின்றனர். ஏனெனில், அவர்களுக்கு சத்தியத்தை எடுத்துரைக்க அவர்களுடைய பிரசங்க பீடத்தில் ஒரு உண்மையான தீர்க்கதரிசி இல்லை என்பதனால். அவர்களுடைய போதகர்கள் அவர்களிடம், அதனால் வித்தியாசம் ஒன்றுமில்லை. அதனால் பரவாயில்லை. அப்படி செய்வதை நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை என்கின்றனர். நீங்கள்... அது கர்த்தருடைய வார்த்தை!புருஷரின் உடைகளைத் தரிக்கும் எந்த ஸ்திரீயும் தேவனுக்கு முன்பாக அருவருப்பானவள் என்று வேதம் கூறுகிறது (உபா;22:5). தேவன் மாறுவதில்லை. அவர் தேவனாயிருந்தால் எப்படி மாற முடியும்? அவர் முடிவற்றவர். 117அது முடிவின் அடையாளம் என்று அவர்களுக்கு எடுத்துரைக்கும் உண்மையான தீர்க்கதரிசி அவர்களுக்கு அவசியமாயுள்ளது. அவர்கள் அப்படி செய்வார்கள் என்று வேதம் உரைக்கிறது. கடைசி நாட்களில் ஸ்திரீகள் அப்படி செய்வார்கள் என்று ஏசாயா:5ம் அதிகாரம் உரைக்கிறது. நிச்சயமாக! எனவே, அவர்கள் அப்படி செய்கின்றனர். அவர்களுக்கு பிரசங்க பீடத்தில் ஒரு தீர்க்கதரிசி உள்ளதாக கூறிக்கொள்கின்றனர். ஆனால் அவர் தேவனுடைய வார்த்தையை எடுத்துரைக்க பயப்படுகிறார்... அவர் சபையோரைக் கண்டு அஞ்சுகிறார். தேவன் பின் வெளிச்சத்தை, அந்த சாயங்கால வெளிச்சத்தை அனுப்பும் படியாகவும், தெரிந்து கொள்ளப்பட்ட சபைக்கு சத்தியம் என்னவென்பதை எடுத்துரைத்து, தேவனுடைய வார்த்தையில் நிற்கும் ஒருவரை, அவர் அனுப்புவதாக வாக்களித்த அவரை, நமக்கு அனுப்பும்படியாகவும் நாம் தேவனிடம் ஜெபிப்போம். யேசபேல்களும், ஆகாபுகளும்... அது அவர்களைப் பிரித்துவிடும். அது முற்றிலும் உண்மை. 118ஞாபகம் கொள்ளுங்கள், ஸ்திரீகள் அவ்விதம் நடந்துகொள்ளத் தொடங்கின போது... அவர்கள் தலை மயிரைக் கத்தரித்துக் கொண்டு அவ்விதம் நடந்துகொள்ளத் தொடங்கின காலத்துக்கு நாம் சற்று செல்வோம். ஸ்திரீகள் அவ்விதம் நடந்துகொள்ளத் தொடங்கும் காலத்தில் தான், எலியா முடிவு கால அடையாளத்துடன் கடைசி நாட்களில் தோன்றுவான் - லோத்தின் நாட்களில் நடந்தது போல். பாருங்கள்? முடிவு கால அடையாளம்... ஸ்திரீகள் அவ்விதம் நடந்துகொள்ளத் தொடங்கும் போது... அவர்கள் அவ்விதம் இப்பொழுது நடந்து கொள்கிறார்கள். அந்த நேரத்தில்தான் எலியா காட்சியில் தோன்றி, தேவனுடைய அடையாளத்தைப் பெற்றவனாய், எல்லாவிடங்களையும் சுத்தம் செய்து அழைத்து, கடிந்து கொண்டு, கிழித்தெறிய வேண்டும் (உண்மை!). அவன் ஒரு பெரிய கூட்டம் ஜனத்தை அழைக்கப் போவதில்லை. பயப்படாதே, சிறுமந்தையே, உங்களுக்கு ராஜ்யத்தைக் கொடுக்க உங்கள் பிதா பிரியமாயிருக்கிறார் என்று வேதம் கூறுகிறது (லூக்;12:32). பாருங்கள்? அது உண்மை. அது முற்றிலும் உண்மை! அவன் அந்த சிறுமந்தையைத் தவிர மற்ற அனைவராலும் புறக்கணிக்கப்பட வேண்டும். ஏனெனில், எழுநூறு பேரைக் கொண்டிருந்த எலியாவைப் போலவும் சிறுமந்தையைக் கொண்டிருந்த யோவானைப் போலவும் அவன் இருப்பான். ஆம்! 119இன்று நாம் எங்கு நிற்கிறோம் என்பதைக் காண்கிறீர்களா? நாம் மூல பெந்தெகொஸ்தேவுக்கு திரும்பிச் செல்ல வேண்டியவர்களாயிருக்கிறோம். நாம் தேவனுடைய காரியங்களுக்கு திரும்பிச் செல்ல வேண்டியவர்களாயிருக்கிறோம். சகோதரனே, சகோதரியே, நாம் திரும்பிச் செல்ல வேண்டும். உங்கள் அனுபவத்தில் வஞ்சிக்கப்படாதீர்கள். நாம் அந்த நேரத்துக்காக நாம் காத்துக் கொண்டிருக்கிறோம். ''நான் அவ்வாறு நம்புகிறேன், நான் விசுவாசிக்கிறேன். விசுவாசத்தினால் நான் ஏற்றுக்கொள்கிறேன்'' என்பது போன்றவைகளை ஏற்றுக்கொள்ளாதீர்கள். அப்படி செய்யாதீர்கள்! நீங்கள் தேவனை முகமுகமாய் சந்தித்து, ஆவியினால் நிறையப்பட்டு, பின்பு என்ன நடக்கிறதென்று பாருங்கள். உங்களுக்குள் இருக்கும் ஆவி இந்த வார்த்தைக்கு முரணாயிருக்குமானால், அந்த ஆவியை விட்டுவிடுங்கள். நீங்கள் சென்று வார்த்தையுடன் இணைந்துள்ள ஆவியைத் தர தேவனிடம் ஜெபியுங்கள். 120இந்த ஆவி கடைசி நாளில் எழும்பும் போது, அது அவர்களுக்கு எச்சரிக்கையாக அமையும் - தவறானவர்களுக்கு (பாருங்கள்?). ஏனெனில் யோவான், ஆபிரகாம் எங்களுக்குத் தகப்பன் என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ள நினையாதிருங்கள்... எங்களுக்கு... நாங்கள்... எங்கள் பிதாக்கள் மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன், பெந்தெகொஸ்தேகாரர் என்று நீங்கள் ஆபிரகாமுக்குப் பிள்ளைகள் என்று சொல்லிக்கொள்ள நினையாதிருங்கள். ''தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்குப் பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார்“ என்றான் (மத்;3:9). நீங்கள் பெந்தெகொஸ்தேகாரராதலால் மன்னிக்கப்படுவீர்கள் என்று நினையாதீர்கள். இல்லவே, இல்லை! தேவன் இந்தக் கல்லுகளினாலே ஆபிரகாமுக்கு பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார். அது முற்றிலும் உண்மை! ஆம், ஐயா! தேவனுடைய வார்த்தையை அதன் முழு சத்தியத்துடனும் இந்தக் கடைசி நாட்களில் உரைக்க வேண்டும். அவருடைய தீர்க்கதரிசனம் என்னவெனில் நீங்கள்... 121இங்கு ஒரு நிமிடம் வேறொரு விஷயத்துக்கு திரும்பி, அதை எப்படி கண்டுகொள்வது என்பதை காண்பிக்க விரும்புகிறேன். நான் அநேக வேதவாக்கியங்களை இங்கு எழுதி வைத்திருக்கிறேன். அவைகளை நான் குறிப்பிட்டுக் கொண்டே வந்தேன். இப்பொழுது ஒரு வேதபாகத்தை வாசிக்க விரும்புகிறேன்... நாம்... முதலாவதாக நாம் உபாகமம்; 18ம் அதிகாரத்தை எடுத்துக் கொண்டு, ஒரு நிமிடம் அதைக் காண்போம். நாம் முடிப்பதற்கு முன்பு, இந்த வேதபாகத்தை உங்களுக்கு வாசிக்கப் போகின்றேன். உபாகமம்; 18ம் அதிகாரம் (சரி), நாம் 20ம் வசனத்தைக் காண்போம். சொல்லும்படி நான் கட்டளையிடாத வார்த்தையை என் நாமத்தினாலே சொல்லத் துணியும் தீர்க்கதரிசியும், வேறே தேவர்களின்... (பன்மை) நாமத்தினாலே பேசும் தீர்க்கதரிசியும் சாகக்கடவன் (அது உண்மை!) ஆவிக்குரிய பிரகாரம் செத்துவிட்டான். பாவஞ் செய்கிற ஆத்துமாவே சாகும். நமக்கு ஒரே தேவன் உண்டு, தேவர்கள் அல்ல). கர்த்தர் சொல்லாத வார்த்தை இன்னதென்று நான் எப்படி அறிவேன் என்று நீ உன் இருதயத்தில் சொல்வாயாகில், (“நமக்கு எப்படி தெரியும்? அவர்களில் அநேகர் உள்ளனர். நமக்கு எப்படித் தெரியும்? இவர் அதை சொல்லுகிறார், வேறொருவர் இதை சொல்லுகிறார்... ஒருவர் இதை சொல்லுகிறார், மற்றொருவர் அதை சொல்லுகிறார். இப்பொழுது கவனியுங்கள். நாம் அறிந்துகொள்ள ஒரு வழியுண்டு). ஒரு தீர்க்கதரிசி கர்த்தரின் நாமத்தினாலே சொல்லும் காரியம் நடவாமலும் நிறைவேறாமலும் போனால், அது கர்த்தர் சொல்லாத வார்த்தை; அந்த தீர்க்கதரிசி அதைத் துணிகரத்தினால் சொன்னான்; அவனுக்கு நீ பயப்பட வேண்டாம். (உபா;18:20-22) தேவன் அதை சொல்லவில்லை என்றால், அதற்கு பயப்பட வேண்டாம். அது சரி. நீ உன் காரியங்களில் ஈடுபட்டு அதை மறந்து விடு. பாருங்கள்? 122இன்று நாம் கேள்விப்படுவது என்னவென்று பாருங்கள். அப்போஸ்தலர்களின் விசுவாசப் பிரமாணம், பெந்தெகொஸ்தேகாரரின் பிரமாணம், மெதோடிஸ்டுகளின் பிரமாணம், பாப்டிஸ்டுகளின் பிரமாணம், பிரமாணம்... பிரமாணம், பிரமாணம். பிரமாணம் என்பது என்ன? அதை எங்கிருந்து பெற்றீர்கள்? அப்போஸ்தலர்களின் விசுவாசப் பிரமாணத்தை வேதத்தில் காண்பிக்கும்படிக்கு நான் எவருக்கும் சவால்விடுகிறேன். நான் விசுவாசிக்கிறேன்... அப்படி ஒன்றுமேயில்லை. அப்போஸ்தலர்கள்நிலைநின்ற பிரமாணம் ஒன்று உண்டாயிருந்தால், இது தான் அது: “நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப்பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கு உண்டாயிருக்கிறது” நண்பர்களே, நாம் எங்கிருக்கிறோம் என்று உங்களால் காண முடிகிறதா? நாம் பயங்கரமான நிலையில் உள்ளோம். அது என்ன? கண்டும் காணாதது போல்விடப்படுகின்ற ஒரு உண்மையான அடையாளம். 123இங்கு நீங்கள் பெரும்பாலோர் மனிதரும் ஸ்திரீகளும். நீங்கள் தேவனுடைய பிள்ளைகள். இதை அசட்டை பண்ணாதீர்கள். இவைகளை நாம் பெற்றிருக்க வேண்டும் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். இவை இந்நாளில் நாம் வாழும் இந்நேரத்தில் - சம்பவிக்க வேண்டியவை. மேசியாவின் வருகைக்கு முன்புள்ள நேரம் இதுவே தேவனிடத்திலிருந்து ஒரு அறிவிப்பு வர வேண்டியதாயுள்ளது. அதை உங்களுக்கு படித்துக்காட்ட விரும்புகிறேன். நாம் மல்கியாவுக்குச் செல்வோம். அது பழைய ஏற்பாட்டின் கடைசி புத்தகம். அவர் மல்கியாவில் என்ன சொல்கிறார் என்பதை செவிகொடுத்துக் கேளுங்கள். அப்பொழுது நாம் இதை சிறிது கேளுங்கள். நீங்கள் மல்கியா; 3ஐ கவனிப்பீர்களானால், இயேசு குறிப்பிட்டது போல, அது யோவானின் வருகையை முன்னுரைக்கிறது. இதோ நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய், வழியை ஆயத்தம் பண்ணுவான்; அப்பொழுது நீங்கள் தேடுகிற ஆண்டவரும் நீங்கள் விரும்புகிற உடன்படிக்கையின் தூதனுமானவர் தம்முடைய ஆலயத்துக்குத் தீவிரமாய் வருவார்; இதோ வருகிறார் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். மல்;3:1. 124அது யோவான் இயேசுவின் வருகையை அறிவிப்பதாகும். அவர் உரைத்தது போல் உடன்படிக்கையின் தூதனானவர் - சீஷர்களுடன், இல்லை இஸ்ரவேலருடன் வனாந்தரத்தில் இருந்த தூதனானவர் - ஆலயத்துக்கு வந்தார். அவர், “தூதன் (Messenger) என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அவர், நான் தேவனிடத்திலிருந்து புறப்பட்டு வந்தேன். மறுபடியும் தேவனிடத்திற்குப் போகிறேன் என்றார்.'' பவுல் தன்னை உயர்த்தாமல் இருக்க, அவனுக்கு ஏன் ஒரு வியாதி கொடுக்கப்பட்டது? இயேசு மரித்து, அடக்கம் பண்ணப்பட்டு, உயிர்த்தெழுந்து நீண்ட நாட்களுக்கு பின்பு, பவுல் தமஸ்குவுக்குப் போகும் வழியில் அவரை முகமுகமாய் சந்தித்தான். அவர், நான் தேவனிடத்திலிருந்து புறப்பட்டு வந்தேன். மறுபடியும் தேவனிடத்திற்குச் சென்றுவிட்டேன்'' என்றார். பவுல் மேலே நோக்கின் போது, ஒரு பெரிய வெளிச்சம் - அதே அக்கினி ஸ்தம்பம் - அங்கிருந்தது. நான் எதைக் குறித்து பேசுகிறேன் என்று உங்களுக்குத் தெரிகிறதா? அதே அக்கினி ஸ்தம்பம்... பவுல் பேசினான், அவரும் பவுலுடன் பேசினார். அவர் பேசினது ஜனங்களுக்கு கேட்கவில்லை. அவர்களுக்கு கேட்கவில்லை, ஆனால் பவுலுக்கு அது கேட்டது. அவர், “சவுலே, சவுலே, நீ என்னை ஏன் துன்பப்படுத்துகிறாய்?” என்றார். சவுல், ''ஆண்டவரே, நீர் யார்?'' என்றான். அவர், “நான் இயேசு. நீ எழுந்து நேர்த்தெருவு என்னப்பட்ட தெருவுக்குப் போ. நீ செய்ய வேண்டியது அங்கே உனக்குச் சொல்லப்படும். பார், என்ன செய்ய வேண்டுமென்று...'' என்றார். 125பவுல்... அங்கு சென்று. ஞானஸ்நானம் பெற்று, கர்த்தரை நோக்கிக் கூப்பிட்டு, பரிசுத்த ஆவியைப் பெற்றான். அவன், என் மாம்சத்தில் ஒரு பலவீனம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது“ என்றான். (2.கொரி;12:7). அது குத்துக்கு மேல் குத்துவிடுவது போல. அவன் சிறிது தேறி வரும்போது, அது மறுபடியும் அவனைக் குத்தித்தள்ளும். ''அவன், அது என்னை விட்டு நீங்கும்படிக்கு நான் மூன்றுதரம் கர்த்தரிடத்தில் வேண்டிக் கொண்டேன். ஆனால் கர்த்தரோ, பவுலே, என் கிருபை உனக்கு போதும் என்று சொல்லிவிட்டார்'' என்றான்: அவன் தொடர்ந்து, எனக்கு வெளிப்படுத்தப்பட்டவைகளுக்குரிய மேன்மையினிமித்தம் நான் என்னை உயர்த்தாதபடிக்கு... என்றான். அவனுக்கு பேதுரு, யாக்கோபு, யோவான், இன்னும் மற்றவர்களுக்கு கிடைக்கப்பெற்ற வெளிப்பாட்டைக் காட்டிலும் அதிகபடியான வெளிப்பாடு கிடைத்தது. இயேசு சென்ற பின்பு, ஒருக்கால் இரண்டு அல்லது அதைவிட அதிக ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் அக்கினி ஸ்தம்பத்தில் நின்று கொண்டு அவனுடன் பேசுகிறதை அவன் கண்டான். இந்த இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு, அவர் இன்னமும் ஜீவிக்கிறார் என்பது இன்னும் எவ்வளவு பெரிய செயலாக உள்ளது. ஆமென்! 126அவன், நான் என்னை உயர்த்தாதபடிக்கு அதுஎனக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது. நான், ''சகோதரனே, உங்கள் எல்லோரிலும் நான் பெரியவன். பாருங்கள். அவர் மரித்தோரிலிருந்து உயிரோடெழுந்த பின்பு அவரை நான் கண்டு அவருடன் பேசினேன். நான்...' என்று சொல்லி என்னை உயர்த்தாதபடிக்கு என்னைத் தாழ்மையாக வைப்பதற்காக எனக்கு ஒன்று கொடுக்கப்பட்டிருக்கிறது'' என்றான். பவுல் தான் அவர்கள் மறுபடியும் இயேசுவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற வேண்டுமென்று கூறினவன். அவன், “வானத்திலிருந்து வருகிற தூதனாவது...'' என்றான். அவன், அவர்களுடைய பள்ளிகள் எங்கே இருந்ததோ, அங்கு நான் செல்லவில்லை. நான் உடனே எருசலேமுக்குப் போகவில்லை. பதினான்கு ஆண்டு காலமாக அங்கு நான் செல்லவில்லை. நான் எகிப்துக்கு, ஆசியாவுக்குப் போனேன் என்றான், அவன் தேவனுடைய ஆலோசனையை அங்கு பெற்று, மூன்று ஆண்டுகளாக பழைய ஏற்பாட்டை படித்து, அது அழகாக ஒப்பிடப்படுகிறதைக் கண்டான். பதினான்கு ஆண்டுகள் கழித்து, அவன் பேதுருவையும், மற்றவர்களையும் சந்தித்த போது, அவன் அதே சுவிசேஷத்தை உடையவனாயிருந்தான், அதேவிதமாக ஞானஸ்நானம் கொடுத்தான், அதே காரியங்களைச் செய்துகொண்டு வந்தான். ஆமென்! அது சரியென்று அவன் அறிந்து கொண்டான். ஆம், ஐயா! 127இப்பொழுது மல்கியாவில் சொல்லியிருப்பதைக் கேளுங்கள், மல்கியா; 3. வேண்டுமானால், இதை நான் உங்களுக்கு தெளிவுபடுத்தி காண்பிக்க விரும்புகிறேன். நான் நினைக்கிறேன். இப்பொழுது நாம் மத்தேயு; 11ம் அதிகாரத்துக்கு திருப்பி பார்ப்போம்... ஒருக்கால் அதை நான் தவறாக கூற வகையுண்டு. அது தான் என்று நினைக்கிறேன். அது சரிதானா என்று முதலில் பார்க்க வேண்டும். மத்தேயு; 11. நாம் பார்ப்போம்; முதலாம் வசனத்தில் தொடங்குவோம். இயேசு தம்முடைய பன்னிரண்டு சீஷர்களுக்கும் கட்டளை கொடுத்து முடித்த பின்பு, அவர்களுடைய பட்டணங்களில் உபதேசிக்கவும், பிரசங்கிக்கவும் அவ்விடம் விட்டுப்போனார். “அத்தருணத்தில் காவலிலிருந்த யோவான் கிறிஸ்துவின் கிரியைகளைக் குறித்துக் கேள்விப்பட்டு, தன் சீஷரில் இரண்டு பேரை அழைத்து: வருகிறவர் நீர் தானா, அல்லது வேறொருவர் வரக்காத்திருக்க வேண்டுமா? என்று அவரிடத்தில் கேட்கும்படி அனுப்பினான் (யோவானின் கழுகு கண்கள் அவன் காவலிலிருந்த போது மறைக்கப்பட்டுவிட்டன. பாருங்கள்?) இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் கேட்கிறதையும், காண்கிறதையும் யோவானிடத்தில் போய் அறிவியுங்கள். (யோவான் ஒரு தீர்க்கதரிசி. என்ன நடக்கிறதென்று அவன் கேள்விப்பட்டால், நான் யாரென்பதை அறிந்துகொள்வான்.“ பாருங்கள்? அவர் சொன்னார்...) குருடர் பார்வையடைகிறார்கள், சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுந்திருக்கிறார்கள். (ஸ்தாபனங்கள் அனைத்தும் ஒன்று சேர்ந்துள்ளன. அவர் அப்படி சொல்லவில்லை. அப்படியா சொன்னார்? இல்லை, அப்படி சொல்லவில்லை. அவர் என்ன சொன்னார் என்றால்...) சப்பாணிகள் நடக்கிறார்கள், குஷ்டரோகிகள் சுத்தமாகிறார்கள், செவிடர் கேட்கிறார்கள், மரித்தோர் எழுந்திருக்கிறார்கள், தரித்திரருக்குச் சுவிசேஷம் பிரசங்கிக்கப்படுகிறது. (அது தான் அடையாளம். கவனியுங்கள். அவர்கள் போன பின்பு... என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ, அவன் பாக்கியவான் (இப்பொழுது, கவனியுங்கள்). என்னிடத்தில் இடறலடையாதிருக்கிறவன் எவனோ அவன் பாக்கியவான் (வேறுவிதமாகக் கூறினால், “என்னைக் குறித்து வெட்கப்படாதவன். என்னைக் குறித்து வெட்கப்படாதவன் எவனோ அவன் பாக்கியவான்.'' பாருங்கள்?) அவர்கள் போன பின்பு, இயேசு யோவானைக் குறித்து ஜனங்களுக்கு சொன்னது என்னவென்றால்: எதைப் பார்க்க வனாந்தரத்துக்குப் போனீர்கள்? (இப்பொழுது தீர்க்கதரிசியைக் கவனியுங்கள்)... எதைப் பார்க்க வனாந்தரத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசையும் நாணலையோ? (யோவான் அப்படிப்பட்டவன் அல்ல. ஓ, இல்லை! அவன் ஸ்தாபனங்களைப் பார்த்து, புல்லின் கீழ் பதுங்கியிருக்கும் பாம்பு சந்ததியினரே, வருங்கோபத்துக்குத் தப்பித்துக்கொள்ள உங்களுக்கு வகை காட்டினவன் யார்? நாங்கள் இதை சேர்ந்தவர்கள், அதை சேர்ந்தவர்கள் என்று உங்களுக்குள்ளே சொல்லிக்கொள்ள நினையாதிருங்கள். தேவன் இந்தக் கல்லுகளினாலே பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார், என்றான். ஓ சகோதரனே, அவன் காற்றினால் அசையும் நாணல் அல்ல)... காற்றினால் அசையும் நாணலையோ? அல்லவென்றால், எதைப் பார்க்கப் போனீர்கள்?மெல்லிய வஸ்திரந்தரித்த மனுஷனையோ?... (பிரசங்கம் செய்யும்போது, இரண்டு மூன்றுதரம் உடுப்பை மாற்றக் கூடியவனையோ)... மெல்லிய வஸ்திரந்தரித்திருக்கிறவர்கள் அரசர் மாளிகைகளில் இருக்கிறார்கள், (அவர்கள் புறப்பட்டு சென்று குழந்தைகளை முத்தம் செய்து, இளைஞர்களுக்கு விவாகம் செய்து வைத்து, பள்ளிகளுக்கு சென்று, அறிவு நிறைந்த சொற்பொழிவாற்றி, இப்படிப்பட்ட பெண்மைத்தனமான காரியங்களைச் செய்யும் போதகர்கள். அவர்கள் போர்க்களத்திற்கு சென்று இருபுறமும் கருக்குள்ள பட்டயத்தை வீசுவதில்லை). (அவர் அவர்களைப் பார்த்து, ''நீங்கள் யாரைப் பார்க்கப்போனீர்கள்?'' அப்படிப்பட்ட ஒருவனையோ? என்று கேட்கிறார்). அல்லவென்றால், எதைப் பார்க்கப்போனீர்கள்? தீர்க்கதரிசியையோ?... (கவனியுங்கள்!). ஆம், தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் (ஆம், ஐயா! அவன் யார்? அவன் தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவன் என்றார். அவன் தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவன்“ என்றார். அவன் தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் கூடுதலானவன். அவன் அக்காலத்து தூதன்). அல்லவென்றால் எதைப் பார்க்கப்போனீர்கள்?தீர்க்கதரிசியையோ? ஆம், தீர்க்கதரிசியைப் பார்க்கிலும் மேன்மையுள்ளவனையே என்று உங்களுக்குச் சொல்லுகிறேன். அதெப்படியெனில்: இதோ, நான் என் தூதனை உமக்கு முன்பாக அனுப்புகிறேன்; அவன் உமக்கு முன்னேபோய், உமது வழியை ஆயத்தம் பண்ணுவான் என்று எழுதிய வாக்கியத்தால் குறிக்கப்பட்டவன் இவன் தான். மத்;11:1-10. இப்பொழுது மல்கியா;3ல் எழுதப்பட்டுள்ளதை கவனியுங்கள். இதோ, நான் என் தூதனை அனுப்புகிறேன், அவன் எனக்கு முன்பாகப் போய்.... 128கவனியுங்கள்! இப்பொழுது மல்கியா; 4, இதைப்படிக்கிறேன். அவன் மறுபடியும் வரப்போகிறான். இதோ, சூளையைப் போல எரிகிற நாள் வரும்; அப்பொழுது அகங்காரிகள் யாவரும்... அது இந்த நாள். நான் தெருவில் நடந்து செல்லும் போது ஜனங்களைக் காண்கிறேன். நீங்கள் அவர்களுடன் பேசினால், அவர்கள் உங்களைப் பார்த்து நகைத்து, கேலி செய்கிறார்கள். ''இது என்ன?'' என்று நமக்கு எண்ணம் உண்டாகிறது. அன்றொரு நாள் நான் இங்குள்ள சதுக்கத்தின் ஓரமாய் நடந்து சென்று கொண்டிருந்த போது, சிலருடன் உரையாடினேன். அவர்கள், “ஆ...'' என்று ஏளனமாகக் கூறிவிட்டு நடந்து சென்றுவிட்டார்கள். அப்பொழுது ஏதோ ஒன்று என்னிடம், ''அவர்கள் அணுகுண்டுக்கு இரையாகி, விரைவில் தரையில் சாம்பலாய் சிதறப்படுவார்கள். அவர்களைத் தனியே விட்டுவிடு: நீ சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டாய். ஆயத்தமாகி, இங்கிருந்து புறப்பட்டுச் செல் என்றது. அல்லேலூயா! அதை நான் சொல்லியிருக்கக் கூடாது என்று நினைக்கிறேன். நீ ஆயத்தப்படு. உன் அரைக்கச்சையைக் கட்டிக்கொள். நான் உன்னை அழைக்கிறேன்.'' ஆகையால் தான் நான் காத்திருக்கிறேன். இதோ, சூளையைப் போல எரிகிற நாள் வரும் அப்பொழுது அகங்காரிகள் யாவரும் அக்கிரமஞ் செய்கிற யாவரும் துரும்பாயிருப்பார்கள்... (அது முற்றிலும் அப்படித்தான் இருக்கும். விவசாயிகளாகிய உங்களில் சிலருக்குத் தெரிந்திருக்கும். ஒரு பெரிய தீ கோதுமை வயலைத் தாக்கினால் என்ன நடக்கிறது? அது எரிந்து போய் சாமபலாகி விடுகிறது. தீ உண்டாகும் போது அதுதான் நடக்கிறது). வரப்போகிற அந்த நாள் அவர்களைச் சுட்டெரிக்கும்; அது அவர்களுக்கு வேரையும், கொப்பையும் வைக்காமற்போகும் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். (அவைகளில் ஒன்றும் மீதி இருக்காது). ஆனாலும், என் நாமத்துக்குப் பயப்படுகிற உங்கள்மேல் நீதியின் சூரியன் உதிக்கும்; அதின் செட்டைகளின் கீழ் ஆரோக்கியம் இருக்கும்; நீங்கள் வெளியே புறப்பட்டுப் போய், கொழுத்த கன்றுகளைப் போல வளருவீர்கள் (அது ஆயிரம் வருட அரசாட்சி). துன்மார்க்கரை மிதிப்பீர்கள் நான். இதைச் செய்யும் நாளிலே அவர்கள் உங்கள் உள்ளங் கால்களின் கீழ் சாம்பலாயிருப்பார்கள் என்று சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறார். (ஆயிரம் வருட அரசாட்சிக்குள் பிரவேசிக்கும் போது... துன்மார்க்கரின் சாம்பல்). ஒரேபிலே இஸ்ரவேலரெல்லாருக்காகவும், என் தாசனாகிய மோசேக்கு நான் கற்பித்த நியாயப்பிரமாணமாகிய கட்டளைகளையும், நியாயங்களையும் நினையுங்கள். (இப்பொழுது கூர்ந்து கவனியுங்கள்.) இதோ, கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புகிறேன். அது யோவானாயிருக்க முடியாது: அது இருக்கவே முடியாது. ஏனெனில் அது யோவானாயிருந்தால், உலகம் அப்பொழுது அழிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் இங்கு மல்கியா; 3ம் அதிகாரத்தில், அவர் தமக்கு முன்பாக ஒரு தூதனை அனுப்புவதாகக் கூறியுள்ளார். இயேசு, எனக்கு முன்னே போய் வழியை ஆயத்தம் பண்ணுகிற எலியா இவனே. ஆனால், அணுகுண்டு தாக்குவதற்கு முன்பு, நான் எலியா தீர்க்கதரிசியை உங்களிடத்திற்கு அனுப்புவேன் என்றார். நான் வந்து பூமியைச் சங்காரத்தால் அடிக்காதபடிக்கு, அவன் பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும், பிள்ளைகளுடைய இருதயத்தை அவர்கள் பிதாக்களிடத்திற்கும் திருப்புவான். 129அது இந்நாளுக்கென தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டுள்ளது. நீங்கள், “ஓ, அது... அந்த எலியா - யோவான் எனலாம்.'' உடன்படிக்கையின் தூதன் யோவான் என்பது உண்மையே; அது முற்றிலும் உண்மையே. இயேசு அவ்வாறு கூறி, ”இவனைக் குறித்து தான் நான் உரைத்தேன்“ என்று உறுதிப்படுத்தினார். ஆனால், வரப்போகிற எலியா அவனாயிருக்க முடியாது (பாருங்கள்?); இருக்க முடியாது. ஏனெனில் பாருங்கள். அது அவ்வாறு இருந்தால், தீர்க்கதரிசனம் தவறாகிவிடும். யோவான் தோன்றின காலத்தில் பூமி அழிக்கப்படவில்லை. பாருங்கள்? ஆனால், கர்த்தருடைய பெரிதும் பயங்கரமுமான நாள் வருகிறதற்கு முன்னே, நான் உங்களிடத்திற்கு எலியா தீர்க்கதரிசியை அனுப்புவேன். அவன், (அவனுடைய முதலாம் வருகையை கவனியுங்கள்.) பிதாக்களுடைய இருதயத்தைப் பிள்ளைகளிடத்திற்கும் (அதை தான் அவன் முதலாவது வந்தபோது செய்தான். அவன் கிறிஸ்துவின் வருகையைக் குறித்த புதிய யுகத்துக்கான செய்தியைக் கொண்டு வந்து வைதீக பிதாக்களை, அந்த வைதீக விசுவாசித்திலிருந்து வெளியே இழுத்து, அப்பொழுது தான் தோன்றின அந்த புதிய விசுவாசத்துக்கு கொண்டு வந்தான். அவன் இரண்டாந்தரம் வரும் போது...) பிள்ளைகளுடைய இருதயத்தை பெந்தெகொஸ்தே பிதாக்களிடத்திற்கு, முல செய்திக்குத் திருப்புவான். 130இப்பொழுது வெளிப்படுத்தல்; 3ம் அதிகாரத்தை நீங்கள் பார்ப்பீர்களானால், அதை மறுபடியும் அங்கு காண்பீர்கள். எனவே அது தீர்க்கதரிசனம் உரைக்கப்பட்டுள்ளது. என் சகோதரனே, நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம். அது உண்மை. மிகாயாவுக்கு எதிராயிருந்த நானூறு தீர்க்கதரிசிகளைப் போல. அவர்கள் சொல்லுகிறார்கள். நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம், நமக்குத் தெரியும். கள்ளத் தீர்க்கதரிசிகள் கள்ள அடையாளங்களைக் காண்பித்து, ஸ்தா பனங்களைச் சேரத் தூண்டுகின்றனர். அவர்கள், வந்து சேருங்கள். நாம் சேர்ந்துவிடுவோம். நீங்கள் வந்து எங்கள் சபையைச் சேர்ந்து கொள்ளுங்கள். உங்கள் அங்கத்தினர் சீட்டைக் கொண்டு வாருங்கள். நீங்கள் அந்த சபையிலிருந்து இந்த சபைக்கு அங்கத்தினத்தை மாற்றிக்கொள்ள, நாங்கள் இன்று காலை உங்களுக்காக அலுவலகத்தை திறந்து வைத்திருக்கிறோம் என்கின்றனர். ஓ, மூடத்தனம்! உங்கள் அங்கத்தினத்தால் உங்களுக்கு என்ன பயன்? உங்களுக்கு பரலோகத்தில் சுதந்திரம் இராவிட்டால், அதையெல்லாம் மறந்துவிடுங்கள். 131கள்ளத் தீர்க்கதரிசிகள் கள்ள அடையாளங்களைக் காண்பிப்பார்கள். ஆனால் பாருங்கள், உண்மையான தீர்க்கதரிசிகள் தேவனுடைய வார்த்தையில் நிலைத்திருப்பார்கள். உண்மையான அடையாளங்கள் தேவனுடைய உண்மையான வார்த்தையை உண்மையான சபைக்குக் கொண்டு வரும். உண்மையான சபை அதை ஏற்றுக்கொண்டு களிகூரும். உபத்திரவ காலத்தில் பிரவேசிக்கப் போகும் புறஜாதியின் மீதியான சிறுமந்தை கடைசி நாட்களில் கொடுக்கப்படும் போது... இயேசு இவ்வுலகில் வந்தபோது, ஒரு சிலரைத்தவிர மற்றவர் விசுவாசிக்கவில்லை. யோவானின் சிறு குழு மாத்திரமே விசுவாசித்தது. இயேசு அதிலிருந்து தொடர்ந்து, அந்த குழுவிலிருந்தவர்களை சீஷர்களாக்கிக் கொண்டு, இப்படியாக சென்று கொண்டிருந்தார். 132எலியா... அழிவு வந்த போது... நோவா தன் காலத்தில், அடையாளமாயிருந்தான். அவன் ஜனங்களை பேழைக்குள் கொண்டு சென்றான். எலியா வந்த போது, அவன் ஜனங்களை அவர்களிருந்த குழப்பத்திலிருந்து வெளியே கொண்டு வந்தான். யோவான் வந்த போது... எல்லா தீர்க்கதரிசிகளும் அடையாளங்கள், அடையாளங்கள், அடையாளங்கள், அடையாளங்களாகத் திகழ்ந்தனர். இந்தக் கடைசி நாட்களில் நமக்கு அவர் ஒரு அடையாளத்தை வாக்களித்துள்ளார் கடைசி நாட்களில் ஒரு அடையாளம் இருக்கும் என்பதாக. ஆனால், அது அசட்டை பண்ணப்படுகின்ற அடையாளம். அவர்கள் அதைக் காண்பதில்லை. அவர்கள் அதை கடந்து சென்று. அது போகும்படிவிட்டு விடுகின்றனர். சகோதரனே, சகோதரியே, சபையை சேர்ந்து கொள்ளாதே.. முடிக்கும் தருணத்தில் இதை கூற விரும்புகிறேன். 133உங்களுக்கு ஏதோ ஒரு வகையான உணர்ச்சி வசப்படுதல், உணர்ச்சி போன்ற அனுபவம் மாத்திரம் இருக்குமானால், அதன் மேல் சார்ந்திருக்க வேண்டாம்! அன்பார்ந்த மக்களே, அப்படி செய்யாதீர்கள். நீங்கள்... நான் ஜனங்களிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். அங்கு ஒலிப்பதிவுக் கருவிகளை அணைக்கும் சத்தம் எனக்குக் கேட்கிறது. இப்பொழுது நான் சபையிடம் பேசிக் கொண்டிருக்கிறேன். கவனியுங்கள், அப்படி செய்யாதீர்கள்...(இப்படிப்பட்ட அநேக காரியங்களை நான் கூறும் காரணம் என்னவெனில், தேசத்திலுள்ள ஜனங்கள்...) தேவனுடன் நிலைத்திருங்கள். உண்மையான அடையாளத்தை எதிர் நோக்கியிருங்கள். நீங்கள் அதைக் காண்பீர்கள். அது உங்களைச் சுற்றிலும் இருக்கும். ஆனால், லட்சக்கணக்கானோர் அதன் வழியே நடந்து சென்று அதை காணாதிருப்பார்கள். இயேசு வந்தபோது, அவர்கள் அவரை அறிந்துகொள்ளவில்லை. அவர்கள் எலியாவை அடையாளம் கண்டுகொள்ளவில்லை. எலியா மேலே எடுக்கப்பட்ட போது அவர்கள் என்ன சொன்னார்கள் தெரியுமா? அவர்கள் அதை நம்பாமல் அது முட்டாள்தனம் என்றனர். அவன் வசித்து, பிரசங்கித்து, அடையாளங்களையும் அற்புதங்களையும் செய்த அதே நகரத்தில் வசித்து வந்த சிறுபிள்ளைகள்; நாங்கள் எலியாவைக் காணவில்லை. அவனைத் தேவன் சுழல் காற்றில் எடுத்துக்கொண்டார் என்று கூறின போது, அவர்கள் அதைக் கேட்டு நகைத்தனர். 134இதோ எலியா - எலிசா அதே அடையாளங்களைக் கொண்டவனாக வருகிறான் - கிறிஸ்துவுக்கும் அவருடைய சபைக்கும் உதாரணம். இதோ எலியா - எலிசா, எலியா கொண்டிருந்த அதே அடையாளங்களுடன் வந்து. அவைகளைச் செய்கிறான். சிறுபிள்ளைகள் அவன் பின்னால் சென்று, ''மொட்டைத் தலையா, நீ ஏன் எலியாவைப் போல் ஏறிப்போகவில்லை?'' என்று கேலி செய்தனர். அந்த அவபக்தியுள்ள பிள்ளைகளுக்கு என்ன நேர்ந்ததென்று கண்டீர்களா? இன்றைக்கு அவர்கள் சிரித்து கேலி செய்கின்றனர். கவலைப்படாதே. சகோதரனே, இப்பொழுதே நியாயத்தீர்ப்பு அவர்கள் ஒவ்வொருவருடைய முகத்துக்கு நேராக வானத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அது உண்மை!நியாயத்தீர்ப்பு வானத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. அது உண்மை! நியாயத்தீர்ப்பு வானத்தில் தொங்கிக் கொண்டிருக்கிறது. சர்வ வல்லமையுள்ள தேவனுடைய கோபாக்கினை அனைத்தும்.... (ஒலிநாடாவில் காலி இடம் - ஆசி). 135நல்லோரைப் பகைக்கிறவர்கள், தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டுவிலகு. நீங்கள் உணர்ச்சியை ஏற்றுக்கொள்ளாதீர்கள். நீங்கள் உணர்ச்சி வசப்படுதலை ஏற்றுக் கொள்ளாதீர்கள். நீங்கள் தேவனை முகமுகமாய் சந்தித்து, தேவ ஆவியானவர் உங்களுக்குள் வரும் வரைக்கும், எதையும் ஏற்றுக்கொள்ளாதீர்கள். அவர் உங்கள் இருதயத்தையும், ஆத்துமாவையும் வல்லமையினாலும், அன்பினாலும், ஜூவாலையினாலும் நிரப்புவார். தேவனே, அடுத்த சில நாட்களில் என் ஸ்தானத்தை நான் கண்டு கொண்டு, என் அடுத்த அசைவு எங்கே என்று நான் காணும் வரைக்கும், அதில் நிலைத்திருக்க உதவி செய்வீராக. நாம் நீண்ட காலமாக காத்திருந்துவிட்டோம். நான் நீண்ட காலமாக காத்திருந்துவிட்டேன். என் முற்றத்தில் புல்லை வெட்டிக் கொண்டிருந்தது எனக்கு ஞாபகம் வருகிறது. இந்த வீட்டை நான் கட்டின போது, கர்த்தர் என்னை அழைத்தார். என் மனைவி அழுதாள். ஏனெனில், அவளுடைய தாயை விட்டுப் பிரிய அவளுக்கு மனதில்லை. அவள், ''அவர்களை யாரும் கவனித்துக்கொள்ள மாட்டார்கள் என்றாள். எனக்கும் வயோதிப தாய் உண்டு'' என்று எண்ணினேன். ஓரு நாள் நான் புல்லை வெட்டி முடித்து உட்கார்ந்தேன். அப்பொழுது தெளிவான சத்தம் ஒன்று என்னிடம், “நீ பிரிந்து வா. அப்பொழுது நான் உன்னை ஆசீர்வதிப்பேன்” என்றது. நான், ''தேவனாகிய கர்த்தாவே, என்னை இங்கு சந்தோஷமாகவையும். நான் எதற்கு விரோதமாக இருக்கிறேன் என்று நீர் காண்கிறீர் என்றேன்.'' அவையெல்லாம், இப்பொழுது முடிந்துவிட்டன. தாய் பிராய் மகிமையை அடைந்துவிட்டார்கள், தாய் பிரான்ஹாம் கூட. என் அசைவு எங்கே, ஆண்டவரே? 136இந்நாட்களில் ஒன்றில் நியாயத்தீர்ப்பு இந்நாட்டை தாக்கப்போகிறது. சுவிசேஷத்தை கேட்டிராத மற்ற நாடுகள் உள்ளன. மற்ற இடங்கள்.... நீங்கள் என்ன செய்து கொண்டிருந்தாலும், என் சொற்களை மறவாதீர். இந்த நங்கூரத்தை விட்டுவிட வேண்டாம்... தேவன், ஒரு இரும்பு பேனாவை எடுத்து நீங்கள் இதை மறந்து போகாதபடிக்கு, உங்கள் இருதயங்களில் செதுக்குவாராக. இதை மறந்து போக வேண்டாம், கர்த்தர் உரைக்கிறதாவது, உங்கள் முழு இருதயத்தோடும் தேவனிடத்தில் திரும்புங்கள்; திரும்பி வாருங்கள்! உணர்ச்சி வசப்படுதலின் பேரிலோ, உணர்ச்சியின் பேரிலோ, வேறெதன் பேரிலோ சார்ந்திராதேயுங்கள். உங்களில் ஒன்று நிகழந்து, நீங்கள் தேவனிடத்தில் உங்களை நேராக்கிக்கொள்ள விரும்பி, நீங்கள் தேவபக்தியுள்ளவர்களாய், தேவனுக்குப் பயந்தவர்களாய், சரியாக வாழ விரும்பும் வரைக்கும் தேவனை நாடுங்கள். அப்படி செய்யுங்கள். அதை மறந்துவிடாதீர்கள். ஏனெனில், நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம். இப்பொழுது ஞாபகம் கொள்ளுங்கள், நாம் முடிவு காலத்தில் இருக்கிறோம். நான் முடித்து இன்னும் ஒரு நிமிடத்தில் ஜெபம் செய்யப்போகிற இத்தருணத்தில் இதை ஞாபகம் கொள்ளுங்கள். மறந்துவிடாதீர்கள்!கூடாரமே, நான் சொல்வதை கேள். இந்த ஒலிநாடா சென்று கொண்டிருக்குமானால், அதுபோகுமிடத்தில், உலகமே, நான் சொல்வதைக் கேள். ஒரு அடையாளம் எழும்பும், உண்மையான அடையாளம். ஒருக்கால் அது ஏற்கனவே எழும்பி, அது அசட்டை பண்ணப்பட்டிருக்கக் கூடும். தேவன் அளிக்கும் உண்மையான அடையாளம் எப்பொழுதுமே அசட்டை பண்ணப்பட்டு வந்துள்ளது... 137நாம் ஜெபம் செய்வோம். நசரேயனாகிய இயேசுவே, சில வாரங்களுக்கு முன்பு ஒரு நாள் நான் மரத்தின் பக்கத்திலுள்ள அந்த மரக் கட்டையை கடந்த போது, ஒரு மகத்தான சத்தம் என்னுடன் பேசினது. தேவனுடைய ஆவி மரத்தின் உச்சியின் வழியாக இறங்கிவந்து, “பழைய ஏற்பாட்டின் யோகோவாவே புதிய ஏற்பாட்டின் இயேசு என்றது.... ஓ தேவனே, இந்தக் கன்மலையின் மேல் நான் நிற்கிறேன், மற்ற நிலங்கள் அனைத்தும் அமிழ்ந்து கொண்டிருக்கும் மணலே, மற்ற நிலங்கள் அனைத்தும் அமிழ்ந்து போகும் மணலே. சில முப்பது ஆண்டுகளாக, இங்குள்ள பள்ளத்தாக்கில் நான் சத்தமிட்டு வருகிறேன். அந்த செய்தியில்லிருந்து நான் ஒரு அங்குலம்கூட பிசகல்லை. நான் தொடங்கின் முதற்கு அதே செய்தி. அதே காரியம், ஜனங்களை திரும்ப அழைத்தல் - ஒரு உணர்ச்சிக்கு அல்ல, ஆனால் தேவனை சந்தித்து அவருடைய ஆவியினால் மறுபடியும் பிறக்கும் அனுபவத்துக்கு. ஒ, நியாயத்தீர்ப்பைத் தவிர. வேறென்ன இருக்கும். அந்த செய்தியைப் புறக்கணிப்பவர்களுக்கு, கர்த்தாவே, அதை தவிரவேறொன்றும் இல்லை. 138உம்முடைய வார்த்தையை நீர் நிறைவேற்றி, இந்த கடைசி நாட்களின் அடையாளங்களை வெளிப்படுத்திக் காண்பித்து. நீரே தேவன் என்றும் நாங்கள் இங்கிருக்கிறோம் என்றும் பிழையற்ற விதத்தில் நிரூபித்துவிட்டீர். இன்று நாடுகளிலுள்ள மகத்தான சுவிசேஷகர்கள், நமது நாட்டின் தலைநகரிலும் மற்ற நாடுகளிலும் சத்தமிட்டு பிரசங்கிப்பதை நாங்கள் கேட்கும் போது, எல்லோருக்கும் பயம் உண்டாகிறது. பிரான்சு தேசத்திலுள்ள பெரிய மனிதர்கள், முதலாம் குண்டு கென்டக்கியிலுள்ள லூயிவில்லில் விழும் என்று முன்னறிவிப்பதை நாங்கள் கேட்கும் போது.... அது நூற்றுக்கணக்கான மைல்கள் ஊடுருவிச் செல்லும். ஓ தேவனே, அவர்களுக்குக் கேட்க அவகாசம் கொடுக்கப்பட்டது. அவர்களோ கேட்க மறுத்துவிட்டனர். செய்தித்தாள்கள், சபை பத்திரிகைகள், தொலைக்காட்சி, வானொலி எல்லாமே இதை அறிவித்துவிட்டன. இனி சாக்குபோக்குக்கு இடமில்லை. பிறகு ஆண்டவரே, நீர், பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும். என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான், என்று சொல்லியிருக்கிறீர். 139இப்பொழுது பிதாவே, இந்த ஜெபத்தை நான் எனக்காக செய்து கொள்கிறேன். எனக்கு வயதாகிக் கொண்டே போகிறது. கர்த்தாவே, இன்னும் எவ்வளவு நாட்கள் எங்களுக்கு உண்டென்று எனக்குத் தெரியாது. ஒருக்கால். இன்றைய நாளும் கூட எங்களுக்கு இராமல் போகலாம். கர்த்தாவே, எங்களுக்கு இன்னும் மீதியான நாட்கள் எவ்வளவு இருந்தாலும், ஒ, தேவனே, என் வாழ்க்கையில் இன்னும் எவ்வளவு நாட்கள் மீதியாக இருந்தாலும், கூடுமானால் அதை எடுத்து உமது மகிமைக்கென்று ஏதாகிலும் செய்வீரா? கர்த்தாவே, உமது சித்தத்தை எனக்கு அறிவிக்கும் படி, முதலாவது எனக்காக வேண்டிக் கொள்கிறேன். உமது சித்தம் எதுவாயிருந்தாலும், கர்த்தாவே, அது செய்யப்படட்டும். உம்மை சந்திக்கும் அந்நாளிலே, ''அது நன்றாக செய்யப்பட்டது'' என்று கூறப்படுவதை நான் கேட்க விரும்புகிறேன். அது பெரியதாயிருந்தாலும், சிறியதாயிருந்தாலும், என் வாழ்க்கைக்கென உமது மகத்தான இருதயத்தில் என்ன இருந்தாலும், கர்த்தாவே, இதோ நான் இருக்கிறேன். ஒரு தூதனை அக்கினித்தழலுடன் அனுப்பி, எங்கள் உதடுகளை சுத்திகரித்து, கர்த்தாவே, இந்த பூமியில் நேரிடவிருக்கும் இந்த மகத்தான கடைசி ஒன்றுக்காக எங்களைப் பரிசுத்தப்படுத்துவீராக. நாங்கள் தேவனை சந்திக்க ஆயத்தப்படு, என்று பாவமாகிய வனாந்தரத்தில் கூப்பிடும் சத்தமாக இருப்போமாக. 140இந்த சிறு சபை; இந்த ஜனங்கள் நாளுக்கு பின் நாள் நூற்றுக்கணக்கான மைல்கள் காரோட்டி வருகின்றனர். ஓ நித்தியமானவரே, அன்புள்ளவரே, ஒரு கிரியையும் மறவாதவரே, ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபின் தேவனே, இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பி, அவரை உன்னதமானவரின் வலது பாரிசத்தில் இப்பொழுது வீற்றிருக்கச் செய்திருக்கிறவரே, மாம்சத்தில் வாசம் செய்த தேவனே, உமது நாமத்தில் நான் ஆசீர்வதிக்கிறவர்களை நீர் ஆசீர்வதிப்பீராக. ஒரு அடையாளம், முடிவுகால அடையாளம் ஒன்றுண்டு என்பதை அவர்கள் எப்பொழுதும் நினைவு கூருவார்களாக. அவர்கள் எங்கே வேலை செய்தாலும், அவர்களுக்கு உமது ஆசீர்வாதத்தை அளித்து, அவர்கள் மற்றவர்கள் மீது உமக்கென்று வெற்றி பெறச் செய்வீராக. அது தெரு மூலையானாலும், பெட்ரோல் நிறைக்கும் இடமானாலும், எதுவானாலும், பல சரக்கு கடையிலும், பால் காரனிடத்திலும், சாட்சி கூருவார்களாக. அது எதுவாயிருந்தாலும், கர்த்தாவே, அவர்கள் இருதயத்தில் ஏதாவது எச்சரிப்பு எழுந்தால், அவர்கள் சாட்சிகளாயிருப்பார்களாக. அவர்கள் தேவபக்தியும் பரிசுத்தமுமான வாழ்க்கை வாழ்ந்து, எல்லா மனிதராலும் வாசிக்கப்படுகிற, எழுதப்பட்ட நிரூபங்களாய் இருப்பர்களாக. 141தேவனே, எங்கள் ஸ்திரீகளை ஆசீர்வதியும். ஓ தேவனே, அவர்கள் தங்கள் முகங்களைக் கழுவுவார்களாக. அப்படி செய்யாதவர்கள் அந்த யேசபேல், 'மேக் அப்' சாதனங்களை முகத்திலிருந்து துடைத்து விடுவார்களாக. அவர்கள் கிறிஸ்தவர்களின் துணிச்சலை உடையவர்களாய், போதிய தேவனுடைய ஆவியை அவர்கள் மேல் பெற்றிருந்து, அந்த அவலட்சணமான ஆடைகளை அணியலாகாது என்றும், நற்பண்புள்ள பெண்களைப் போல் தலைமயிரை நீளமாக வளர விட வேண்டுமென்றும் அறிந்து கொள்வார்களாக. ''இந்த கடைசி நாட்களில் தோன்றவிருக்கும் இப்படிப்பட்ட காரியங்களிலிருந்து தப்பித்துக் கொள்ளும் அந்த சிறு கிளை, தேவனுடைய பார்வையில் விலையேறப் பெற்றது. அது தேவனுடைய பார்வையில் மகிமையுள்ளதாய் காணப்படும்'' என்று வேதத்தில் எழுதப்பட்டுள்ளது. தீர்க்கதரிசி அவ்வாறு கூறியுள்ளான். தேவனே அதை அருளும்! என்னால் இனி வேறொன்றும் செய்ய முடியாது. கர்த்தாவே, நான் ஒவ்வொரு ஆண்டும் தொண்டை கிழிய சத்தமிட்டு வந்திருக்கிறேன். நீர் இப்பொழுது அசைந்தாலன்றி, என்னால் ஒன்றும் செய்ய முடியாது. நீர் அசைய வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன். நீர் அசைவீர் என்று எனக்குத் தெரியும். ஏனெனில் உமது வார்த்தையில் நீர் அவ்விதம் வாக்களித்துள்ளீர். அதில் தான் நான் நிலை நிற்கிறேன். கர்த்தாவே, நான் சாட்சி மாத்திரமே கூற முடியும். நீர் ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் வரமாட்டான். பிதாவானவர் கொடுக்கிற யாவும் வரும். உமது வார்த்தை கவனித்துக் கொள்ளப்படும் என்னும் நிச்சயம் எனக்குண்டு. 142கர்த்தாவே, எங்களை ஆசீர்வதியும். உணர்ச்சியின் மேல் சார்ந்திருப்பவர் எவராகிலும் இங்கிருப்பார்களானால்... ஒருக்கால் அவர்கள் கூச்சலிட்டிருக்கலாம். அவர்கள்... ஒருக்கால் அவர்களுக்கு பரிசுத்த ஆவி இருக்கலாம். அல்லது கர்த்தாவே, அதை நாங்கள் கணக்கில் எடுத்துக்கொள்ள முடியாது. ஏனெனில், பந்து விளையாட்டுகளில் ஜனங்கள் கூச்சலிடுவதை நாங்கள் கண்டிருக்கிறோம். உலகப் பிரகாரமான கேளிக்கைகளில் ஜனங்கள் கூச்சலிடுவதை நாங்கள் கண்டிருக்கிறோம். ஜனங்கள் மிகுந்த மகிழ்ச்சி கொள்ளும் போது, அழுது, நடனமாடி, இப்படிப்பட்டவைகளைச் செய்வதை நாங்கள் கண்டிருக்கிறோம். தேவனே, அது நீரல்ல. உம்மை சந்தித்து, உம்முடன் உரையாடி, நீர் எங்களுடன் திரும்பப் பேசுவதையே நாங்கள் விரும்புகிறோம். ஓ தேவனே, இந்த நிமிடத்தில் நீர் பரிசுத்த ஆவியை இந்த அறைக்குள், இந்த தாழ்மையான சிறு இடத்தில், அனுப்ப வேண்டுமென்று உம்மிடம் வேண்டிக் கொள்கிறேன். அவர் வருவதற்கு தகுதியான இடம் எதுவுமில்லை. ஆனால் தேவனே, உமது சொந்த வழியில் இந்த அறைக்குள் அவரை அனுப்பி, ஆத்துமாக்களுக்கு உறுதியளிக்க வேண்டிக் கொள்கிறேன். கர்த்தாவே, சற்று முன்பு நான் கூறியது போல், இந்த பீட அழைப்புகளை விடுத்து, ஜனங்களைக் கெஞ்சி, அங்கு செல்லும்படி வருந்தி அழைத்து, இவ்வாறு யாராவது ஒருவர் வழியில் தடுக்கலையும், இடறலையும் போடுகிறோம். நாங்கள் அடுத்த ஆண்டு அங்கு திரும்பிச் செல்லும் போது. அவர்கள் தொடக்கத்தில் இருந்ததை விட இரட்டிப்பாக நரகத்தின் பிள்ளையாக இருக்கக் காண்கிறோம். மகத்தான பரிசுத்த ஆவியாகிய நீர், அவர்கள் உறுதிக்கொள்ளச் செய்து, அவர்கள் பாவத்தை உணர்த்தாவிடில் அவர்கள் எப்படி வர முடியும்? கர்த்தராகிய தேவனே, பாவியாகிய மனிதன் அல்லது ஸ்திரீ, பையன் அல்லது பெண் இன்று காலை இக்கட்டிடத்தில் இருக்க நேர்ந்தால், பரிசுத்த ஆவி தாமே பாவத்தை உணர்த்தும் அப்படிப்பட்ட வல்லமையுடன் வந்து, அவர்கள் கன்னங்களில் கண்ணீர் வடிந்து, அது தங்கள் ஆத்துமாக்களில் சொட்டி, கர்த்தாவே, அவர்களுடைய இருதயத்தின் ஆழங்களிலிருந்து அவர்கள் கிறிஸ்துவை விசுவாசித்து ஏற்றுக்கொள்ள வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன். கர்த்தாவே, இதை அருளும்! அவர்களுக்கு பீடம் எதுவும் தேவையாயிருக்காது. அவர்களுடைய ஆத்துமா, பீடமாகிவிடும். கர்த்தாவே, இதை அருளும்! அப்பொழுது அவர்கள் முழு இருதயத்தோடு உம்மண்டை வந்து, “நான் மனந்திரும்பின பாவங்களைப் போக்கிக்கொள்ள, ''இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் இப்பொழுது ஞானஸ்நானம் பெற விரும்புகிறேன்'' என்பார்கள். கர்த்தாவே, அதை அருளும். அவர்களைப் பரிசுத்த ஆவியினால் நிரப்பும். 143எங்களுக்கு இன்றைக்கு உலகத்தில் - சுவிசேஷகர்களைத் தாரும் - வருந்தி அழைத்து, இழுத்து, ஸ்தாபன பிள்ளைகளை உண்டாக்கும் சுவிசேஷகர்கள் அல்ல. தேவனே, உமக்கென்று சில பிள்ளைகளை எழுப்பும். கர்த்தாவே, ஜனங்கள் ஜெபிக்கும்படி செய்யும். நான் கொர்நேலியுவின் வீட்டை நினைத்துப் பார்க்கிறேன். அப்படிப்பட்டது ஒரு புறஜாதியானுக்கு முன்பு நடந்ததில்லை. அவர்கள் உபவாசம் பண்ணி, ஜெபம் செய்து கொண்டிருந்தனர். அந்த தேவனுடைய மனிதன், அந்த தீர்க்கதரிசி, அங்கு நின்று கொண்டு இந்த வார்த்தைகளை பேசிக் கொண்டிருக்கையில், வசனத்தைக் கேட்டவர்கள் மேல் பரிசுத்த ஆவி இறங்கினார். தேவனே, அப்படிப்பட்ட ஒரு கூட்டத்தை அருளும். இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிக் கொண்டிருக்கையில்... ஓ தேவனே, அவர்கள் ஆயத்தமாயிருந்தனர். அவர்கள் உபவாசம் பண்ணினார்கள்; அவர்கள் காத்திருந்தனர்; அவர்கள் உத்தமமாயிருந்தனர். அவர்கள் சும்மா காத்துக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் பெற்றுக்கொள்ளும் வரைக்கும் காத்திருந்தனர். தேவன் அவர்கள் மத்தியில் இறங்கி வந்து, அவர்களால் அவரைக் காணவும், அவருடன் பேசவும் முடியும் வரைக்கும், அந்த அப்போஸ்தலர்கள் காத்திருந்தனர். உலகத்தை முறுகலாக பொறித்த இருதயங்களுடன் அவர்கள் வெளியே சென்றனர். அவர்கள் தைரியமாக இருந்து தங்கள் தலைகள் வெட்டப்பட்ட வாய்ப்பு இருந்த இடங்களிலும் கூட நின்றனர். அவர்கள், “உங்களுக்கு, உங்கள் ஸ்தாபனங்களுக்கு, மனிதனால் ஏற்படுத்தப்பட்ட ஸ்தாபனங்களுக்கு செவி கொடுப்பதா, அல்லது தேவனுக்குச் செவி கொடுப்பதா, எது நியாயம்? நீங்களே நிதானித்துக் கொள்ளுங்கள்'' என்றனர். அவர்களை அவர்கள் போக விட்டவுடன், அவர்கள் மறுபடியும் போய் இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் பிரசங்கித்தனர். ஓ தேவனே, அதை எங்களுக்குத் தாரும், ஆண்டவரே. 144வேதத்தில் கூறப்பட்டுள்ள இவனை எங்களுக்கு எழுப்பித்தாரும். கர்த்தாவே, அவனை அபிஷேகியும். அவன் வரும்படி அழைக்கிறேன். கர்த்தாவே, அவனை அனுப்பும். ஓ தேவனே, பசியுற்ற எங்கள் இருதயங்கள் அழுகின்றன. கர்த்தாவே, அவனை அனுப்பும். அவன் ஜனங்களுடைய இருதயங்களை. பிதாக்களிடத்தில் திருப்பி, இந்த ஸ்தாபன பொம்மைகளிலிருந்து, அவர்களை பெந்தெகொஸ்தே நாளில் அவர்கள் செய்தது போல, தேவனுடன் உண்மையான அனுபவத்துக்கு திருப்பவும், ஜுவாலித்து எரிகிற உண்மையான சபை, அதே செய்தியையும், அதே விசுவாசத்தையும், அதே உபதேசத்தையும், அதே வேதாகமத்தையும், அதே தேவனையும், அதே அடையாளங்களையும் கொண்டதாய் இருக்கும்படி செய்யும். கர்த்தாவே, எங்களுக்கு ஒரு தீர்க்கதரிசியை எழுப்பும். 145இன்று எங்கள் மத்தியிலுள்ள வியாதியஸ்தரை சுகப்படுத்தும். தேவையுள்ளவர் இங்குள்ளனர். பிதாவே, அவர்களுக்காக நான் ஜெபிக்கிறேன். இன்று காலை இவ்வளவு நேரமாக இங்கு தங்கியிருந்து விட்டோம். இங்கு உட்கார்ந்திருப்பவர்களில் சிலர்... ஒரு நாள் அப்போஸ்தலனாகிய பவுல், இரவு முழுவதும் பிரசங்கித்துக் கொண்டிருந்த போது, ஒரு வாலிபன் கட்டிடத்திலிருந்து கீழே விழுந்து மரித்து போனான். அவன் தூங்கி விட்டான். அவன் தூங்க வேண்டுமென்று நினைக்கவில்லை, ஆயினும் அவன் தூங்கிவிட்டான். அவன் கீழே விழுந்தான். அவனுடைய உயிர் அவனை விட்டுப் பிரிந்தது. அப்போஸ்தலன் அவனுக்காக ஜெபித்த போது அவனுடைய உயிர் அவனுக்குள் திரும்ப வந்தது. ஓ, கர்த்தராகிய தேவனே, இங்குள்ள அநேகர் வியாதிப்பட்டுள்ளனர். ஆராதனையை வழக்கமாக முடிக்கும் நேரத்தைக் காட்டிலும், நாங்கள் நீண்ட நேரம் தங்கிவிட்டோம். ஓ தேவனே, வியாதியாயுள்ள ஒவ்வொருவர் மீதும் அந்த வல்லமை, அக்கினிஸ்தம்ப வடிவில் வந்து, தம்மை யாரென்று வெளிப்படுத்தி, நாங்கள் விசுவாசிக்கும் அந்த பரிசுத்த ஆவியானவர் தாமே, இங்குள்ள ஒவ்வொரு நபரையும் சூழ்ந்து கொண்டு, வியாதியஸ்தரை சுகப்படுத்தி, ஆவியினால் நிறைத்து, எல்லா வகையிலும் எங்களுக்குத் தேவையான விடுதலையைத் தந்தருளுவாராக. தேவனே, எங்கள் இருதயங்களை விசுவாசத்தினால், அழியாத விசுவாசத்தினால், ஒப்புரவாகாத விசுவாசத்தினால் அளவில்லாமல் நிறைத்து, நாங்கள் கர்த்தர் உரைக்கிறதாவது என்பதை பெறும்படி செய்யும். கர்த்தாவே, இதை அருளும்! 146இது உம்முடைய ஜனம், உம்முடைய செய்தி, உம்முடைய வார்த்தை, உம்முடைய ஊழியக்காரன். பிசாசுக்கு எங்கள் மேல் எவ்வித அதிகாரமும் இல்லை. இந்த கூடாரம் அழியும் போது கூட, அவன் எங்களை அழிக்க முடியாது. ஏனெனில் பூமிக்குரிய இந்த கூடாரம் அழிந்து போனாலும், வேறொன்று எங்களுக்காக ஏற்கனவே காத்திருக்கிறது. அவன் எங்களுக்கு தீங்கு விளைவிக்க முடியாது. ஏனெனில் எங்கள் சத்துருக்கள் அனைவரும் உம்முடைய சத்துருக்கள். நாங்கள் உம்முடையவர்கள். நாங்கள் இயேசு கிறிஸ்துவின் விலையேறப் பெற்ற இரத்தத்தினால் கிரயத்துக்கு கொள்ளப்பட்டிருக்கிறோம். எனவே இந்த ஜனங்களை வியாதியினால் கட்டி வைத்திருக்கும் பிசாசே, அவர்கள் ஒவ்வொருவரையும் விட்டு வெளியே வரும்படி இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் உனக்குக் கட்டளையிடுகிறேன். தேவனுடைய ஊழியக்காரன் என்னும் முறையில் இந்த வார்த்தை உண்மையென்று உரிமை கோருகிறேன். அவர்களை விட்டு வெளியே வா. உனக்கு எந்த உரிமையுமில்லை. நீ பெற்றிருந்ததாக உரிமை கோரின் அனைத்தும் கல்வாரியில் நீக்கப்பட்டு விட்டது. இனி ஒரு போதும், அது உனக்கு உரிமையில்லை. 147இப்பொழுதும் தேவனே, ஒவ்வொரு மனிதனுக்கும், ஸ்திரீக்கும், பையனுக்கும், பெண்ணுக்கும் அதை விசுவாசிக்கத்தக்கதான, விசுவாசத்தை அருளுவீராக. வார்த்தை உரைக்கப்பட்டு விட்டது. இந்த மலையைப் பார்த்து, ''பெயர்ந்து போ'' என்று சொல்லி, உன் இருதயத்தில் சந்தேகப்படாமல் விசுவாசித்தால் (விசுவாசமுள்ள ஜெபம் பிளியாளியை இரட்சிக்கும்), நீ கேட்டுக் கொள்வதைப் பெற்றுக் கொள்வாய். அது எங்களுக்குத் தெரியும். அந்த நம்பிக்கை எங்களுக்கு தேவன் பேரில் உண்டு. எங்களுக்கு விசுவாசம் இருக்குமானால், தேவன் எங்களுக்குள் வாசமாயிருந்தால், அதை நாங்கள் விசுவாசிப்போம். கர்த்தாவே, அது உண்மையென்று எனக்குத் தெரியும். எனவே சுகத்துக்காகவும், இரட்சிப்புக்காகவும் இன்று இதை அருளும். நான் முதலில் இரட்சிப்பை கூறி அதன் பிறகு சுகத்தை கூறியிருக்க வேண்டும். கர்த்தாவே, இதை அருளும். ஏனெனில் சரீரத்தைக் காட்டிலும், ஆத்துமா விலையேறப் பெற்றது. ஆனால் சில சமயங்களில் அவர்கள்... அவர்களுடைய ஆத்துமா இரட்சிக்கப்பட்டுள்ளது. இந்த சரீரமோ இன்னும் சாத்தானுக்கு சொந்தமாயள்ளது. முடிவில் அவன் அதை எடுத்துக் கொள்வான் என்று அறிந்திருக்கிறான். அவன் அதை நசுக்கி குழிக்கு அனுப்பி விடுவான். அங்கு பூமியின் புழுக்கள் அதன் மேல் நெளிந்து அதை அரித்துப் போடும். ஆனால் அவனால் ஆத்துமாவைத் தொட முடியாது. ஏனெனில் அது தேவனுடைய விலையுயர்ந்த பொக்கிஷமாயுள்ளது. அந்த ஜீவன், இலையைப் போன்று. அதை தந்த தேவனிடத்தில் திரும்பி, மறுபடியும் அடுத்த காலத்தில் புதிய சரீரத்துடன் வரும். அதை சாத்தான் தொட முடியாது. வயோதிபமோ அல்லது வேறெதுவோ, அதைத் தொட முடியாது. அது மகிமையுள்ள சரீரமாயிருக்கும். கர்த்தாவே அதற்காக நாங்கள் காத்திருக்கிறோம். இப்பொழுது உம்முடைய ஜனங்களை ஆசீர்வதியும். இவர்கள் உம்முடையவர்கள். இவர்களை உம்முடைய கரங்களில் சமர்ப்பிக்கிறேன். இதை இயேசுவின் நாமத்தில் கேட்கிறேன். 148[சபையினர் மத்தியிலிருந்து தீர்க்கதரிசனம் கொடுக்கப்படுகிறது; நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; இந்த நாளில் செவிக் கொடுங்கள். ஏனெனில், உங்கள் மத்தியில் உலாவுகின்றேன் மற்றும் நிச்சயமாக ஒரு அடையாளத்தை இந்த சந்ததிக்குக் கொடுக்கும்படியாக, இந்த காலைப்பொழுதில் இங்கு வந்திருக்கிறேன். நீங்கள் கேட்ட இந்த வார்த்தைகள் நான் உங்களுக்குச் செல்லுவதாக நீங்கள் கேட்ட இந்த காரியங்களுக்கு உங்கள் செவியை கொடுக்க மாட்டீர்களா? இது உங்களுக்கு நன்றாகச் சொல்லப்படவில்லையா? உண்யையாக உன்னிடத்தில் சொல்கிறேன், என் உழியக்காரனே ஆம், இந்த தருணத்தில் உன்னிடத்தில் வருவதற்கு என் ஆவியில் மிகுந்த ஊக்கத்தைக் கொடுத்தது. ஆகையால், துவக்கத்தில் சில காரியங்களைக் குறித்து நீ பேசினவைகள் என்னுடைய ஆவியின்படி நீ இயங்குகிறாய். ஜனங்களே, உண்மையாக இந்த நாளில் உங்களிடத்தில் நான் சொல்லுகிறேன். ஆம், நான் சொல்லுகிறேன். இந்த காரியங்களுக்கு சிரத்தையாக இருங்கள் மற்றும் என்னுடைய சத்தியத்தின் கீழாக உங்களைப் பிணைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில், இப்போது நடந்துக் கொண்டிருக்கும் அச்சுறுத்தும் காரியங்கள் இன்னும் அதிகரிக்கும், மேலும் எச்சரிப்பு இல்லாமலே அழிவும் மற்றும் பைத்தியக்காரத்தனமும் இருக்கும். ஆவிகள் நீங்கள் அறியாமலே பிடித்துக்கொள்ளும். ஆம், இந்த காலைப்பொழுதில் நான் சொல்லுகிறேன் செவிக்கொடுங்கள். ஏனொன்றால், என்னுடைய அழைப்பு யாரேனும் விருப்புகிறவனுக்கு, ஆம் நான் சொல்லுகிறேன்; இந்த காலையில் நீங்கள் கேட்ட வார்த்தையின் மீது உங்கள் கவணத்தை சொலுத்துங்கள் மற்றும் உங்கள் முன்னிலையில் கொண்டுவரப்பட்ட அடையாளத்தை விசுவாசியுங்கள். ஏனெனில், நான் கர்த்தர் உங்களிடத்தில் பேசுகிற உங்களுடைய தேவன்.] [வேறு ஒரு தீர்க்கதரிசனம் கொடுக்கப்படுகிறது: இந்த காலைப்பொழுதில் என் திர்க்கதரிசியாகிய உன்னிடத்தில் பேசுகிறேன். நான் சொல்லுகிறேன், நீ நன்றாக என் ஜீவ அப்பத்தை உடைத்தாய் மேலும் நான் உனக்கு செல்லுகிறேன். நான் உன் இருதயத்தைக் கண்டேன் மற்றும் நீ தேவையோடு இருக்கிறாய். ஏனேனில், இந்த நாளில் இந்த மணிநேரத்தில் என்னுடைய ஆவியின் வழிநடத்தல் இதற்கு முன்பைவிட இதிகமாக உனக்கு தேவையாய் இருக்கிறது என்று கர்த்தர் சொல்லுகிறேன். மேலும், நான் சொல்லுகிறேன், என் செம்மறி ஆடுகள் இந்த உலகத்தில் அலைந்து திரிந்துக் கொண்டிருக்கிறது. ஆயினும் நான் சொல்லுகிறேன் இந்த உலகத்தின் அஸ்திவாரம் போடுவதற்கு முன்பு நீ செல்ல வேண்டும் என்று உன்னை நான் நியமித்துருக்கிறேன். குறிப்பாக என்னுடைய தொலைந்துப்போன இஸ்ரவேல் செம்மறியாட்டிடம். ஏனெனில், அவர்களுக்கு அடையாளம் தேவையாய் இருக்கிறது. நான் உன்னிடத்தில் அடையாளத்தை கொடுத்துருக்கிறேன் உங்களிடத்தில் சொல்லுகிறேன், என் ஜனமே. இந்த காலைப்பொழுதில் அந்த அடையாளம் உங்கள் மத்தியில் வைக்கப்பட்டிருக்கிறது. நீங்கள் இந்த வார்த்தையின் மீது கவனமாக இருக்க வேண்டும். ஏனெனில், எவ்விதத்தில் ஜீவ வார்த்தையை பிட்டு கொடுக்க வேண்டும் என்று நான் என்னியபடி என் உழியக்காரன் பிட்டு கொடுத்தான். இக்காரியத்துக்காக அவனை நான் அபிஷேகித்தேன் என்று கர்த்தர் சொல்லுகிறேன்.] அது என்னுடைய வார்த்தையல்ல; அது அவருடையவார்த்தை . ஓ. இந்நேரத்தில் - நாம் வாழும் இந்நேரத்தில் நமக்கு அது அவசியமானது.நண்பர்களே, உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லையா? தேவன் பெரிய பிரபலமானவர்களிடம் வருவதில்லை. அவர் தாழ்மையுள்ளவர்கள் நடுவில் வாசம் செய்கிறார்.இப்பொழுது என்ன நடந்து கொண்டிருக்கிறதென்று நீங்கள் ஒருக்கால் உணராமல் இருக்கலாம்- இப்பொழுது இக்கட்டிடத்தில் என்ன அசைந்து கொண்டிருக்கிறது. இந்த ஜனங்களின்மத்தியில் என்ன அசைந்து கொண்டிருக்கிறதென்று. நான் எதையும் செய்வதற்கு முன்பே ஆவியானவர்சகோ. ஹிக்கின்பாதம்ஸின் மூலம், இந்த செய்தியை கவனியுங்கள். வரப் போகிற காரியத்தைக்குறித்து உங்களை எச்சரிக்கவே இதை நான் அளித்தேன். (அப்படி ஏதோ ஒன்று) என்று ஏன்கூற வேண்டும்? என்ன நடந்ததென்று பாருங்கள். 149சில வேத வாக்கியங்களை இங்கு நான் எழுதிவைத்திருந்தேன், அவைகளை நான் தொடக்கூட இல்லை. அவைகளினின்று விலகி சென்றுவிட்டேன். அப்படி செய்ய நான் பரிசுத்த ஆவியால் ஏவப்பட்டேன். பாருங்கள்? சில வேதவாக்கியங்களை நான் தொடக்கூட இல்லை. நான் முற்றிலும் வேறுபட்ட ஒன்றுக்கு சென்றுவிட்டேன். ஏதாவதொன்றை நான் எப்பொழுதாவது கேட்கும் போது. பக்கங்களைத் திருப்பி, அது எங்குள்ளதென்று கண்டு கொண்டேன். இப்பொழுது ஆவியானவர் எல்லா பாகங்களிலிருந்தும் பேசிக் கொண்டிருக்கிறார். ஒ ஜனங்களே, நேர்மையாயிருங்கள். உத்தமமாயிருங்கள்!நீங்கள் சார்ந்திராதேயுங்கள்... பாருங்கள், நீங்கள் பெரிய ஒன்றை, பளிங்கான ஒன்றை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். தீர்க்கதரிசிகள் அனைவருமே... தாவீதும் கூட, கர்த்தருடைய வருகையின் போது, சகல மலையும் தாழ்த்தப்பட்டு பள்ளமெல்லாம் உயர்த்தப்படும் என்று முன்னுரைத்தான் (ஏசா.40:4). அவன் மலைகள், ஆட்டுக்கடாக்களைப் போல் துள்ளி இலைகள் கைகொட்டும் என்றான். இயேசுவின் வருகையின் போது, அக்காலத்திலிருந்த ஜனங்கள் எப்படியிருக்குமென்று நினைத்தார்கள்? அது முடிவில் எப்படியிருந்தது? தாழ்மையுள்ள ஒரு பிரசங்கி, கல்வியில்லாதவன், ஒன்பது வயதில் வனாந்தரத்துக்கு சென்று மனிதனிடம் பயிற்சி பெறாமல் தேவனிடம் பயிற்சி பெற்றான். அவன் ஆட்டுத் தோலைத் தரித்தவனாய், முகத்தின் மேல் மயிர் வளர்ந்து, உடல்மேல் மயிர் வளர்ந்து, தலைமயிர் கழுத்து வரைக்கும் வளர்ந்து, வெட்டுக் கிளியும், காட்டுத் தேனும் தன் ஆகாரமாய் கொண்டு வனாந்தரத்திலிருந்து புறப்பட்டு வந்தான். அவன் வனாந்தரத்தில் வாழ்ந்தான்... அவன் அங்கிருந்து புறப்பட்டு வந்து, நதிக்கரையிலுள்ள மண்ணில் நின்று, மேசியாவின் வருகையை அறிவித்தான். மேசியா ஒரு சாதாரண மனிதனாக ஜனங்களின் நடுவில் நடந்து வந்து ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டார். 150அது உலகிலே நடந்த மிகப்பெரிய சம்பவங்களில் ஒன்று என்று எல்லா தீர்க்கதரிசிகளும் அறிவித்தனர். அது உண்மையே. பாருங்கள்? அவர்கள் பெரிய பளிங்கான ஒன்று நடக்க எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். பாருங்கள்? பரிசுத்த ஆவி பளபளப்பதில்லை. அது கொழுந்து விட்டு எரிகிறது. பளபளப்பு. உலகப்பிரகாரமானது. கொழுந்து விட்டு எரிதல் தேவனால் உண்டானது. கர்த்தாவே, என் மேல் கொழுந்து விட்டு எரியும் என்பதே என் ஜெபமாயுள்ளது. ஜீவனுள்ள தேவனின் ஆவியே, புதிதாக என் மேல் அசைவாடும். என்னை வனையும், என்னை உருவாக்கும். கர்த்தாவே, என்னை உமக்கு சொந்தமாக்கிக் கொள்ளும். என்னை ஏற்றுக்கொள்ளும். இன்று காலை கிறிஸ்துவின் ஆவி இக்கட்டிடம் முழுவதிலும் அசைவாடுகிறதை நான் உணருகிறேன். உலகத்தை நியாயந்தீர்க்கப் போகிற தேவன், நான் பிரசங்கபீடத்தில் நின்று கொண்டிருப்பது எவ்வளவு நிச்சயமோ. அவ்வளவு நிச்சயமாக இப்பொழுது இங்கிருக்கிறார். வார்த்தையின் உறுதிப்படுதல்கள் வேதம் கூறின விதமாகவே, ஒன்று, இரண்டு, மூன்று முறை நிகழந்தன. அதன் பிறகு அது முடிவடைந்ததை நீங்கள் கேட்டீர்கள் அல்லவா? ஒன்று, இரண்டு, மூன்று, எல்லாமே வேதப்பிரகாரமான ஒழுங்கில் அமைந்துள்ளது. ஓ, உங்கள் இருதயங்களைத் திறந்து புரிந்து கொள்ளுங்கள். ஓ, என்ன நேரம்! இந்த நேரத்தில் என்ன நடக்கும்? 151அவர்கள் மேலறையில் ஒருமனப்பட்டு காத்திருந்தார்கள். கர்த்தருக்கு காத்திருக்கிறவர்கள், புதுப்பெலன் அடைந்து. கழுகைப் போல் செட்டைகளை அடித்து, எழும்புவார்கள். நீங்கள் அங்கு சென்று, ''ஆண்டவரே, என் பாவங்களுக்காக நான் வருந்துகிறேன். நான் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டேன் என்று அதை விசுவாசத்தில் ஏற்றுக்கொண்டு இங்கிருந்து செல்கிறேன்'' என்று சொல்லாதீர்கள். ''கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்கள், அது வாரங்களானாலும், நாட்களானாலும், என்னவானாலும், புதுப்பெலன் அடைவார்கள். அவர்கள் கழுகின் செட்டைகளைப் பெற்று எழும்புவார்கள். அவர்கள் ஓடினாலும், இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்து போகார்கள். கர்த்தாவே, காத்திருக்க எனக்குக் கற்பியும், எனக்குக் கற்பியும்.'' கர்த்தருக்குக் காத்திருங்கள். 152அன்னாள் இரவும், பகலும் தேவாலயத்தை விட்டு நீங்காமல் ஜெபம் பண்ணிக் கொண்டிருந்தாள். அவர்கள் இயேசுவைக் கொண்டு வந்த போது, பார்வையிழந்த அவள் கட்டிடத்தின் வழியாக நடந்து அவரை அடைந்து, அவர் மேல் கைகளை வைத்து தேவனை ஸ்தோத்தரித்தாள். அவள் பார்வையிழந்தவளாயிருந்த போதிலும், அவள் ஆவியானவரால் அவர் இருந்த இடத்துக்கு கொண்டு வரப்பட்டாள். ஜெப அறையில் அவருக்காக காத்துக் கொண்டிருந்த சிமியோன். அவன் மரணமடைய மாட்டான் என்னும் வாக்குத்தத்தத்தை பரிசுத்த ஆவியானவரால் பெற்றிருந்தான். எண்பது வயது கிழவன், ஏறக்குறைய தொண்ணூறு வயது... அவன் ஜனங்களிடம், ''நான் மேசியாவைக் காணுமட்டும், மரணமடைய மாட்டேன்'' என்று பகிரங்கமாகக் கூறினான். அதே நிமிடத்தில் ஒரு சிறு குழந்தை... அவர் யார்? அவர் வந்த போது காவல் பண்ணுகிறவர் அனைவரும் இராணுவ மரியாதை செலுத்தி, பிரதிஷ்டை செய்ய கொண்ட வரப்படும் குழந்தைகள் நறுமணம் கமழும் துணிகளில் சுற்றிக் கொண்டு வரப்படுவதை போல இவரும் சுற்றிக் கொண்டு வரப்பட அவர் பிரபலமானவர் அல்ல. ஆனால் மற்றவர்கள் தீதாகப் பேசின் ஒரு தாய்... விவாகம் செய்து கொள்ளாமலே குழந்தையைப் பெற்றதாக அவள் தூஷிக்கப்பட்டாள். அவள் காளையின் நுகத்தில் கட்டப்பட்டிருந்த கந்தை துணியினால் குழந்தையைக் சுற்றி தேவாலயத்துக்குள் கொண்டு வந்தாள். எல்லோரும் குழந்தையை விட்டுவிலகி தூரம் நின்றனர். ஆனால் அந்த சிறு குழு இங்கு வருகிறது, அன்னாள் ஒருத்தி, சிமியோன் மற்றவன். சிமியோன் எங்கு போகிறான் என்று அறியாமல் வரிசையில் நடந்து வந்து. அதைக் கண்டு, கைகளை உயர்த்தி, “ஆண்டவரே, உமது வார்த்தையின் படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர். உம்முடைய இரட்சண்யத்தை என் கண்கள் கண்டது” என்றான். பாருங்கள், பாருங்கள்? 153பளபளப்பானது ஒன்றும் அங்கில்லை, ஆனால் கொழுந்து விட்டு எரிதல்! இன்றைக்கு அடையாளம் தீதாகப் பேசப்படுகிறது. அதற்கு ஒத்துழைப்பு எதுவுமில்லை. அது தீதாகப் பேசப்பட்டு, எத்தனையோ பெயர்களால் அழைக்கப்படுகிறது. அது அசட்டை பண்ணப்பட்டு, தீதாகப் பேசப்படுகிற அடையாளம். வேதம் தீதாகப் பேசப்படும் அடையாளத்தைக் குறித்து உரைக்கிறது. நாம் வீட்டுக்குத் திரும்பிச் செல்லும் போது, இதை ஞாபகம் கொள்வோம். இந்த செய்தி உங்கள் இருதயங்களை விட்டு விலகாதிருப்பதாக. நீங்கள் என்ன செய்தாலும், அதை மாத்திரம் செய்யாதீர்கள். இரவும், பகலும் இதை தியானியுங்கள். தேவன் தமது சாட்சியை இப்பொழுது எழுப்ப வேண்டுமென்று இரவும், பகலும் ஜெபியுங்கள். நாம் ஆயத்தமாயிருக்கிறோம். விரைவில் காலம் இருக்காது என்று நான் நம்புகிறேன். நாம் வந்து கொண்டிருக்கிறோம்.... 154''சகோ. பிரான்ஹாமே, அது எப்பொழுது நடக்கும்?'' எனக்குத் தெரியாது. ஒருக்கால் இன்றைக்கு; அல்லது நாளைக்கு. அது இன்றைக்கு நடக்காவிட்டால், அதை நாளை எதிர்ப்பார்ப்பேன். ஒருக்கால் இந்த ஆண்டு, அடுத்த ஆண்டு, பத்து ஆண்டுகள் கழித்து, முப்பது ஆண்டுகள் கழித்து. அது எப்பொழுது என்று எனக்குத் தெரியாது. ஆனால் இப்பொழுது முதல், ஒவ்வொரு நிமிடமும் ஆயத்தமாயிருங்கள் என்று சொல்லுகிறேன். இதை சாதாரணமான ஒன்றாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அப்படி செய்யாதீர்கள். நீங்கள் தேவனுடன் பேசும் வரைக்கும் இரவும், பகலும் இளைப்பாறாதீர்கள். முட மதாபிமானத்திலிருந்து விலகியிருங்கள். உணர்ச்சி வசப்படாதீர்கள். அது தான் அதிக தீவிரமான காரியங்களை தோன்றச் செய்து, மக்கள் அதை கண்டு பயப்படும்படி செய்கிறது (பாருங்கள்?) அந்த தீவிர மதாபிமானத்தின் விளைவாக. அதை ஏற்றுக் கொள்ளாதீர்கள்; ஒருக்காலும் அப்படி செய்யாதீர்கள். நீங்கள் தேவனிடத்தில் பேசும் வரைக்கும் அங்கேயே தங்கியிருங்கள். எப்படியாயிருந்தாலும், அது உங்கள் ஆத்துமா. நித்தியத்தை அங்கு கழிக்கப் போகிறவர்கள் நீங்களே. நீங்கள் கைகளைக் குலுக்கி, பிரமாணத்தை உச்சரித்து, ஏதாவதொன்றை விசுவாசத்தினால் ஏற்றுக்கொள்ளாதபடிக்கு நிச்சயமுடையவர்களாய் இருங்கள். அப்படி செய்யாதீர்கள்! நீங்கள் தேவனிடத்தில் பேசுங்கள். தேவன் உங்களிடத்தில் பேசட்டும். அப்பொழுது உங்களுக்கு என்ன நேரிடுகிறதென்று கவனியுங்கள். உங்கள் விருப்பங்களின் பேரில் கவனமாயிருந்து என்ன நடக்கிறதென்று பாருங்கள். அப்பொழுது நீங்கள், தேவனிடத்தில் பேசினீர்களா இல்லையா என்று அறிந்து கொள்ளுங்கள். 155இன்று காலை அவரை விசுவாசித்தவர்களாகிய உங்களுக்கு, உங்களுக்கு... நான் பீட அழைப்புகளைக் குறித்து சொன்னேன். அதை அவர்கள் வேதாகமத்தில் எப்படி செய்தார்கள் தெரியுமா? கர்த்தரை விசுவாசித்தவர் அனைவரும் - கர்த்தரை விசுவாசித்தவர் அனைவரும் தங்கள் பாவ மன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினால் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டார்கள். நீங்கள் பெற்றுக்கொள்ளாமல் இருந்தால்... பீட அழைப்புகள் நமக்கு இருந்தது கிடையாது. அவர்கள் - ஜனங்களை முன்னால் அழைத்தது கிடையாது. நீங்கள் அப்படி செய்யும் போது எல்லாவிதமானவர்களும் வருகின்றனர். யாரோ ஒருவர் அழைத்தார் என்ற காரணத்தால், கர்வம் பிடித்தவனாய் காட்சியளிக்கும் ஒருவனும் கூட அங்கு வந்து முழங்கால் படியிடுகிறான். அவனை மறுபடியும் அங்கு கொண்டு வர இருமடங்கு உங்களுக்கு கடினமாகிவிடுகிறது. பாருங்கள்? நீங்கள் என்ன செய்கிறீர்கள்? எல்லோரையும் அங்கு கொண்டு வந்துவிடுகிறீர்கள். பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும் என்று இயேசு கூறினார். வார்த்தையில் நிலைத்திருங்கள்! தேவன் மற்றவைகளைச் செய்வார். அது உண்மை! தேவன் மற்றவைகளைச் செய்வார். 156தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக! உங்களை இன்றிரவு மறுபடியும் காண்பேன் என நம்புகிறேன். நான் நம்புகிறேன், வரக்கூடிய ஒவ்வொருவரும்... உங்களில் அநேகர் வர முடியாது என்று எனக்குத் தெரியும். என் சகோதரன் பேசுவதைக் கேட்க இன்றிரவு நான் வருவேன், அது தேவனுடைய சித்தமாயிருந்தால். அவருடைய இரண்டு செய்திகளையும் நான் எடுத்துக்கொள்ள விரும்பவில்லை. சகோ. நெவில் இனிய தேவனுடைய மனிதன். எனக்குத் தெரியும் - எனக்குத் தெரியும். அவர் பிரசங்கிப்பதை நான் கேட்கும்போது, அது நேரடியாக அவருடைய இருதயத்திலிருந்து வருகிறதென்று எனக்குத் தெரியும். அது எனக்குத் தெரியும். அன்றொரு இரவு சகோ. நெவில் பேசின போது, ''நான் என்றாவது ஒரு நாள் அவருக்கு இயேசுவின் நாமத்தினால் ஞானஸ்நானம் கொடுப்பேன்'' என்று குறிப்பிட்டதை எடுத்துரைத்தார். நான் அவ்வாறு குறிப்பிட்டேன். ஏன்? அவருக்கிருந்த உத்தமத்தையும், நேர்மையையும் நான் கண்டேன். அவருக்கு மாத்திரம் சத்தியம் அளிக்கப்பட்டால், அவர் அதை, உண்மையில் காண்பார் என்றும், அவருடைய கண்கள் திறக்கப்பட்டு அவர் அதை ஏற்றுக்கொள்வாரென்றும் அறிந்திருந்தேன். எனவே நான் சபையிடம், ''கவலைப்படாதீர்கள், அந்த மெதோடிஸ்டு போதகர் வந்தே தீருவார் என்று சொல்லி அது நிகழக்காத்திருந்தேன்.'' இதோ அவர் இன்று கூடாரத்தின் போதகராக, அவரால் கூடுமானவரைக்கும் ஊழியத்தில் திடமாக இருந்து வருகிறார். அவர் தேவனை விசுவாசிக்கிறார். சகோ. நெவில் பேசுவதை நான் கேட்கும் போது. அது தேவனிடத்திலிருந்து வருகின்ற உண்மையான செய்தி என்பதை அறிந்திருக்கிறேன். ஏனெனில் அவர், அப்படிப்பட்ட ஒரு மனிதர். 157என் கைகளை நான்... வைத்து இங்கு வைக்கப்பட்டுள்ள உங்கள் உறுமால்களுக்காக ஜெபிக்கப்பட்டு விட்டது. நீங்கள் ஒவ்வொருவரும், தேவனிடத்திலிருந்து ஆசீர்வாதத்தைப் பெற்றீர்கள் என்றும், தேவன் உங்கள் இருதயங்களில் இருக்கிறார் என்றும் நம்புகிறேன். நாம் தேவனிடத்திலிருந்து ஆசீர்வாதத்தைப் பெறுவதற்கென இங்கு வருகிறதில்லை... நாம் ஒவ்வொரு நாளும் மூச்சுவிடும் போதும் தேவனிடத்திலிருந்து ஆசீர்வாதத்தைப் பெறுகிறோம். இங்கு நாம் வரும் காரணம் என்னவெனில், திருத்தப்பட களைந்து போட, நமது இருதயங்களை விருத்தசேதனம் செய்து தேவனுக்கு முன்பாக வர, நமது முழு இருதயத்தோடும் தேவனை விசுவாசிக்க. கர்த்தருடைய வார்த்தையை நினைவு கூருங்கள். தேவனால் அனுப்பப்பட்ட உண்மையான அடையாளத்தை மறந்து விடாதீர்கள். அதைக் காணத்தவறாதீர்கள். இப்பொழுது நான் ஆராதனையை சகோ. நெவிலிடம் ஒப்படைக்கப் போகிறேன். அவர் என்ன கூற விரும்புகிறாரோ, அதை கூறட்டும். 158(சகோ. நெவில் ஜனங்களிடம் பேசுகிறார் - ஆசி). இதைக் காட்டிலும் இனிமையானதை நீங்கள் ஒரு உண்மையான சகோதரனிடமிருந்து கேட்க முடியாது. காரணம் நான்... பாருங்கள் நண்பர்களே, நீங்கள் என்னை நேசிக்கிறீர்கள் என்று நானறிவேன். நீங்கள் சகோ. நெவிலை நேசிக்கிறீர்கள். நீங்கள் தேவனுடைய பிள்ளைகள் அனைவரையும் நேசிக்கிறீர்கள். நாம் ஒருவரிலொருவர், அன்பு கூருகிறோம். நாம் ஒருவரிலொருவர், மிக அதிகமாக அன்பு கூர வேண்டிய நேரம் ஒன்று இருக்குமானால், அது இன்றைக்கே. நாம் மிக நெருங்கியிருந்து, உண்மையான இரத்த சம்பந்தமான சகோதரர், சகோதரிகளைக் காட்டிலும் மேலானவர்களாய் இருக்க வேண்டும். அப்படிப்பட்ட அன்பும், மரியாதையும் தான் நமது இருதயங்களில் ஒருவருக்கொருவர் உன்னதமாக இருக்க வேண்டும். அது எனக்குப் பிடிக்கும். அந்த உண்மையான காரியம் எனக்குப் பிடிக்கும். 159சகோ. நெவிலும், சகோ. ஹிக்கின்பாதமும், சகோதரன்... அது சகோ. ஃபங்க் என்று நினைக்கிறேன் (அது அவருடைய குரல் போலவே இல்லை). இவர்கள் தீர்க்கதரிசன செய்தியை அளித்தனர். அவை தேவனிடத்திலிருந்து வந்த செய்திகள். நண்பர்களே. அவை உண்மையில் தேவனிடத்திலிருந்து தான் வந்தன. ஆவிக்குரிய பகுத்தறியும் சிந்தை உள்ள எவரும் அதை அறிவர். ஆனால், இது தான் அது. எனக்கு சகோ. நெவிலை அதிகமாய் பிடிக்கும். அதை இப்படித்தான் நினைக்கிறேன்: உங்களிடம் கூறுவதற்கு தேவனிடத்திலிருந்து எனக்கு ஏதாவதொன்று இருந்தாலன்றி. எனக்கு எதையும் கூற விருப்பமில்லை. பாருங்கள்? நான்... இன்று பிரசங்கித்த செய்தி என் இருதயத்தில் இரண்டு, மூன்று நாட்களுக்கு முன்பு எழுந்தது. ஆனால் நேற்றிரவு வரை அதை அதிகமாகப் பார்க்கவில்லை, நேற்றிரவு தான் ஒருசில வேதவாக்கியங்களை குறித்து வைத்தேன். ஆகையால் தான். இன்று காலை இங்கு வந்து அந்த செய்தியை அளித்தேன். இப்பொழுது அது, என் கைகளை விட்டுப் போய்விட்டது. பாருங்கள்? அதைக் குறித்து நீங்கள் என்ன செய்தாலும், அது உங்களைப் பொறுத்தது. பாருங்கள்? ஆனால் அது, என் கைகளை விட்டுப் போய்விட்டது. 160நானும், சகோ. நெவிலும் அந்த விதமாகத்தான் இருக்கிறோம். சில சமயங்களில் அப்படி ஏதாவெதான்றைக் குறித்து நான் பேச இங்கு வந்து, சகோ. நெவில் தேவனிடத்திலிருந்து ஒரு செய்தியைப் பெற்றிருப்பாரானால், நான் உட்கார்ந்து கொள்வேன். ஆம், நிச்சயமாக! நான் எப்பொழுதுமே, தேவனுடைய செய்திக்கு இடம் கொடுப்பவன். பாருங்கள்? அப்படித்தான் நாங்கள் ஒருவருக்கொருவர் நடந்து கொள்கிறோம். ஆகையால் தான் நான், நான்... தேவன் எனக்கு பேச ஒன்றையும் அளிக்காமல், ஏதாவதொன்றைப் பேசலாம் என்று நான் வரும்போது... அதே சமயத்தில் தேவன் சகோ. நெவிலுக்கு ஒரு செய்தியை அளித்து, நான் ஞாயிறு காலையும், மாலையும் பிரசங்கம் செய்ய வேண்டும் என்று குறிக்கப்பட்டிருந்தால், சகோ. நெவில் என் அன்பார்ந்த சகோதரனாயிருப்பதால், அவர் என்னிடம் வந்து, “சகோ. பிரான்ஹாமே, நீங்கள் தேவனுடைய ஊழியக்காரர் என்று விசுவாசிக்கிறேன். ஆனால், தேவன் எனக்கு ஒரு செய்தியை அளித்துள்ளார்'' என்பார். நீங்கள் அப்படி செய்வீர்கள் அல்லவா? ஆம்! நானும் அவரிடம் அப்படித்தான் செய்வேன். 161அவர் பேசுவதற்காக குறிக்கப்பட்டிருக்கும் போது நான், ''சகோ. நெவில், என்னை மன்னித்துக் கொள்வீர்களா? தேவன் எனக்கு ஒரு செய்தியை அளித்துள்ளார். அதை நான் இப்பொழுது ஜனங்களுக்கு எடுத்துரைத்தாக வேண்டும்'' என்று கூறினால், அவர் வழியை விட்டு விலகிவிடுவார். நாங்கள் ஒருவருக்கொருவர் அப்படித்தான் நடந்து கொள்கிறோம். பாருங்கள், அப்படித்தான் நாங்கள் செய்கிறோம். பிறகு எங்களுக்கு - எனக்கு பேசுவதற்கு குறிப்பாக எதுவுமில்லையென்றால், அப்பொழுது... அவர் பிரசங்கிப்பதைக் கேட்க, எனக்கு மிகவும் பிரியம். நான் கேட்டேன்... எத்தனை பேர் அவர் போன ஞாயிறு இரவு பிரசங்கித்ததைக் கேட்டீர்கள்? மிகவும் அருமையான செய்தி. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், இன்று காலை அளிக்கப்பட்ட செய்தியுடன், அது மிகவும் நன்றாக பொருந்தினது. ஜனங்களே, உங்களுக்கு நான் சொல்வது என்னவெனில், நீங்கள் தேவனுடைய வார்த்தையை போதிய அளவுக்குப் பெற்றுள்ளதால், நீங்கள் நிச்சயம் சரியாக வாழ்ந்து சரியாயிருக்க வேண்டும். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. இப்பொழுது, சகோ. நெவில்!